தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வெப்பசலன மழை எப்படி உருவாகிறது ?

07-10-2017 இன்று பிற்பகலில் காரைக்கால் மாவட்டத்தில் ராடாரில் மழைமேகங்கள் தென்பட்டும் மழையில்லாமல் ஒரு சில இடங்களின் இருண்டு வானம் மேகம் மூட்டமாக காட்சியளித்தது இடி முழக்கங்கள் மட்டும் பல இடங்களில் உணரப்பட்டன.இதற்கு காரணம் என்ன ? வெப்பசலன மழை (Convective Rain)  எப்படி உருவாகிறது என்றால் சூரியனின் வெப்பத்தில் நீர் ஆவியாகி மேல் எழும்பி மேகத்தை அடைய முற்படுகின்றது அப்படி அந்த நீராவியானது மேல் எழும்பி மேகத்தை அடையும் பொழுது குளிரடைந்து நீராகிறது.அந்த நீர் தாங்கிய மேகங்களை தான் மழைமேகங்கள் அல்லது கார்முகிழ்கள் என்று அழைக்கிறோம்.பின்னர் அந்த மழை மேகங்களில் இருந்து நீர் துளிகள் பூமியின் மேற்பரப்பில் விழுவதைத்தான் மழை என்கிறோம்.

அவ்வாறு முகிழ்களில் இருந்து மழை நீர் துளிகளாக விழும்பொழுது மொத்த நீரும் பூமியை அடைவது கிடையாது ஒரு பகுதி நீராவியாகிறது.வறட்சியான பகுதிகளில் வீசும் வறண்ட காற்றினால் சில சமயங்களில் பூமியை அடைவதற்கு முன்னரே மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு.இன்று காரைக்காலில் அது தான் நடந்திருக்க வேண்டும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...