தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

17-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

17-11-2017 நேரம் காலை 11:40 மணி இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வங்கக்கடல் பகுதியில் ஒடிசா மாநிலம் பரதிபுக்கு 190 கி.மீ தென் - தென் மேற்காகவும் கோபால்பூருக்கு 110 கி.மீ தென் - தென் கிழக்காகவும் திகாவுக்கு 390 கி.மீ தென் - தென்மேற்காகவும் நிலைகொண்டுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினாது கடந்த 6 மணி நேரங்களாக மணிக்கு 8 கி.மீ என்கிற வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க கூடும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எந்த வித மாற்றங்களும் இன்றி இதே சூழ்நிலைகள் தொடர்ந்தால் 18-11-2017 (நாளை ) இரவு அல்லது 19-11-2017 (நாளை மறுநாள் ) அன்று காலைக்குள் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது முற்றிலும் வலுவிழக்க கூடும் அதன் பின் மீண்டும் வட கிழக்கு திசை காற்றின் வேகம் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கலாம் 19-11-2017 முதல் மீண்டும் தமிழகத்தில் நல்ல பரவலான மழைக்கு வாய்ப்பு உண்டு.

நான் இதற்கு முந்தைய பதிவுகளில் இருந்து தொடர்ந்து தெரிவித்து வருவது போல இனி வரக்கூடிய நாட்களிலும் வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் இல்லை அதே போல இந்திய பெருங்கடலில் உருவாக இருக்கும் புயல்களுக்கும் பஞ்சமிருக்காது அவை தமிழகத்துக்கு நேரடியாக பலன்களை வழங்காவிட்டாலும் கிழக்கிலிருந்து - மேற்கு நோக்கி நகரும் பொழுது அவற்றின் சுழற்சி வட கிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழலை வங்கக்கடல் பகுதியில் அமைத்து கொடுக்கும் அதேபோல வங்கக்கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலைகள் வலு குறைந்த நிலையில் தமிழகத்தை நெருங்கி வர வேண்டும் அது தான் முக்கியம் அதை விடுத்து அவை அந்தமானுக்கு அருகிலேயே வலுப்பெற்று ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்க தொடங்கினாள் அவை பெரும்பாலும் தமிழகத்தை விட்டு விலகி வட - வட மேற்கு திசைகளில் நகரவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அடுத்து வரக்கூடிய வாரத்துக்கான வானிலை தகவல்களை நாளை அல்லது நாளை மறுநாள் பதிவிடுகிறேன்.
நான் மேலே குறிப்பிட்ட அனைத்தும் தற்பொழுது நிலவும் வானிலையை உள்ளடிக்கிய ஒரு கனிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.
கடந்த சில நாட்களாக எல்-நினோ வருமா என பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் எல்-நினோ மற்றும் லா - நினோ குறித்து நான் இதற்கு முன்பே பல முறை வளக்கமளித்து உள்ளேன் நீங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதை பார்த்தால் ஏதோ புது வதந்தி பரவி வருவதை போல தெரிகிறது.

எல்நினோ மற்றும் லா நினோ குறித்த அடிப்படை விஷயங்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby
எல் -நினோ மற்றும் லா - நினோ எப்படி ஏற்படுகிறது மற்றும் அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...