தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

19-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

19-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம்  புதுச்சேரியில் வானிலை எப்படி  இருக்கலாம் என்பதை  பார்ப்பதற்கு முன்னர் கடந்த 17-11-2017 அன்று நான் எழுதிய பதிவில் குறிப்பிட்டு இருந்த ஒரு சில தகவல்களை உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.17-11-2017 அன்று எழுதிய பதிவில் ஒடிசா அருகே நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 18-11-2017 அன்று இரவு அல்லது 19-11-2017 அன்று காலைக்குள்  முற்றிலும் வலுவிழந்து விடும் எனவும் அதன் பின் வட கிழக்கு திசை காற்றின் வேகம் அதிகரித்து தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்து இருந்தேன் அதுமட்டுமல்லாமல் இம்மறை ஒரே இடத்தில் தொடர் கனமழை போல அல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மிதமான மழை பதிவாகும் எனவும் குறிப்பிட்டு இருந்தேன் இதை போல அதற்கு முந்தைய சில பதிவுகளில் இந்திய பெருங்கடலில் உருவாகவிருக்கும் காற்றழுத்த பகுதிகளுக்கு பஞ்சமிருக்காது எனவும் அவை நேரடியாக தமிழகத்துக்கு பலனை வழங்காவிட்டாலும் அவற்றின் சுழற்சி தமிழகத்துக்கு சாதகமானதாக இருக்கும் எனவும் தெரிவித்து இருந்தேன் மேலும் வங்கக்கடல் பகுதியில் உருவாக இருக்கும் காற்றழுத்த  நிலைகளிலும் தொய்வு ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் அதில் குறிப்பிட்டு  இருந்தேன் .

19-11-2017 இன்று வட கிழக்கு திசை காற்றின் வேகம் அதிகரித்துள்ளது அதனால் சிறு சிறு மழை மேகங்கள் வங்கக்கடல் பகுதியில் குவிந்து வருகின்றன அதே சமயம் கேரளாவுக்கு தென் மேற்கே அரபிக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது அதன் காரணமாக கேரளா மற்றும் தெற்கு கர்நாடக பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது இதனால் கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மேற்கு மற்றும் தென் மாவட்ட பகுதிகள் பயனடையும் மேலும் தற்பொழுது தமிழகத்தில் தென் மேற்கு திசையில் கீழ் நோக்கி அல்லாமல் வட மேற்கு திசை நோக்கி காற்று வீசி வருவதால் கடலோர மாவட்டங்களில் மட்டுமல்லாமல் ஒரு சில உள் மாவட்டங்களுக்கும் மழை மேகங்கள் பயணிக்க ஏதுவான சூழல் நிலவி வருகிறது.சிறு  சிறு மழை மேகங்களாக குவிந்து வருவதால் வட மற்றும் தென் கடலோர பகுதிகளில் அவ்வப்பொழுது விட்டு விட்டு மழை இருக்கும்.இன்று தென் மாவட்டங்களான கன்னியாகுமரி  மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பு உண்டு.நான் இதற்கு முன்பே பதிவிட்டு இருந்தது போல தற்பொழுது தொடர் கனமழைக்கு வாய்ப்பு குறைவு.

20-11-2017 (நாளை )  மற்றும் 21-11-2017 (நாளை மறுநாள் ) வரை தமிழகத்தில் அவ்வப்பொழுது மழைக்கு வாய்ப்பு உண்டு பெரும்பாலும் ஒரு சில தென் மற்றும் கடலோர மாவட்டங்களின் பகுதிகளே இதனால் அதிக பலன் பெரும் ஒரு சில உள் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உண்டு இதற்கு முந்தைய காலங்களை போல அல்லாமல் வானிலையில் ஒவ்வொரு நாளும் புதிய மாற்றங்கள் ஏற்பட தொடங்கியுள்ளது அதனால் அடுத்த 2 நாட்கள் 3 நாட்கள் என்று பொதுவாக குறிப்பிடாமல் மழை குறித்த தகவல்களை அவ்வப்பொழுது பதிவிடவிடுவதே சிறந்தது என நான் கருதுகிறேன் மழைகான வாய்ப்புகளை ஒவ்வொரு நாளும் பதிவிட முயற்சிக்கிறேன்.

22-11-2017 அல்லது 23-11-2017 ஆம் தேதியில் வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது ஆனால் அது குறித்த 100% உறுதியான தகவல்களை இப்பொழுதே தெரிவிப்பது சரியான ஒன்றாக இருக்காது இன்னும் இரண்டு நாட்களில் இந்த பதிவின் தொடர்ச்சியை பதிவிடுகிறேன்.

மேலும் நான் மேலே பதிவிட்ட தகவல்கள்  அனைத்தும் தற்பொழுது நிலவும் வானிலையை உள்ளடிக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...