தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியிலேயே உருவானது லா-நினா : பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டது

24-11-2017 கடந்த சில மாதங்களாக எல்நினோவின் தாக்கம் நடுநிலையாக (Neutral El-nino ) இருந்து வந்தது தற்பொழுது லா-நினா (la- nina ) வுக்கு சாதகமான சூழல் பசிபிக் கடல் பரப்பில் நிலவி வருவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக உலகின் பல்வேறு நாடுகளின் வானிலை ஆய்வு மையங்களும் அதிகார பூர்வ தகவல்களை வெளியிட்டு வந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையமும்  23-11-2017 (நேற்று ) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் 23-11-2017 (நேற்று ) வெளியிட்டு இருந்த அந்த அறிக்கையில் தற்பொழுது லா-நினா வுக்கான சூழல்கள் நிலவி வருவதாகவும் அடுத்து வரக்கூடிய இரண்டு வாரங்களுக்கு இந்த நிலை தொடரலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.டிசம்பர் மாத இறுதியில் லா -நினாவுக்கு சாதகமான சூழல்கள் உருவாக 50% வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டு வந்த நிலையில் நவம்பர் மாத இறுதியிலேயே பசிபிக் கடல் பரப்பில் வெப்பநிலை குறைவு ஏற்பட்டு லா-நினாவுக்கான சூழல்கள் உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏதேனும் நன்மை - தீமைகள் உருவாக வாய்ப்பு உண்டா ? வடகிழக்கு பருவமழையில் இதனால் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா ? என்பதை போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாக விரைவில் ஒரு புதிய பதிவை பதிவிடுகிறேன்.

எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை விஷயங்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby

எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது மற்றும் அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...