தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

28-11-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

இந்த வாக்கியத்தை வழக்கமாக ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் தான் குறிப்பிடுவேன் ஆனால் கடந்த சில நாட்களாக இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் எதிர்பார்த்ததை போன்று இல்லை அதனால் நான் கீழே கூறும் அனைத்து தகவல்களும் அதன் நகர்வுகளை பொறுத்து மாற்றத்துக்கு உட்பட்டது.

28-11-2017  நேரம் இரவு 11:30 மணி தற்பொழுது இலங்கைக்கு அருகே நிலைகொண்டு இருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுபெற தொடங்கியுள்ளது இதே நிலை தொடரும் பட்சத்தில் அது நாளை மேற்கு நோக்கி நகர வாய்ப்புகள் உள்ளது அவ்வாறு அது நகரும் பொழுது தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவிழந்த நிலையில் ஒரு அலைவு போல உள்ள அந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் இதன் சுழற்சியில் இணைந்து விடும் இந்த பண்பை நான் ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவுகளில் விளக்கியுள்ளேன் இதை Fujiwhara Interaction அல்லது Binary Interaction என்று சொல்லுவார்கள் உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் Fujiwhara Interaction குறித்த தகவல்களை இணையத்தில் தேடி பாருங்கள் அது உங்களுக்கு புரியவில்லை என்றால் என்னிடம் கேளுங்கள் நான் விளக்குகிறேன் அப்படி அந்த வலு குறைந்த நிலையில் ஒரு அலைவு போல இருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் இதன் சுழற்சியில் இணைகையில் இது மேலும் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது.29-11-2017 (நாளை ) இரவு அல்லது 30-11-2017 (நாளை மறுநாள்) காலை குமரிக்கடல் அருகே இந்த நிகழ்வு நடக்கலாம் இதற்கு முன்னராகவே அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர முற்படும்பொழுதே தமிழகத்தின் மழைக்கான தற்போதைய சூழலில் மாற்றங்கள் நிகழ தொடங்கலாம்.29-11-2017 அன்று மாலை அல்லது இரவு அது குமரிக்கடலுக்கு அருகே நிலைகொள்ள வாய்ப்புகள் உள்ளது அதனால் தென் தமிழகத்திலும் ,வட கடலோர மற்றும் உள்  மாவட்டங்களிலும் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது அதன் பின்னர் 30-11-2017 அன்று அது அரபிக்கடல் பகுதியில் கேரளாவுக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.அது அதன் பின்னர் வட மேற்கு திசையில் நகர்ந்து செல்ல முற்படலாம் அப்பபோழுது தமிழக உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது .29-11-2017 அன்று இரவு அல்லது 30-11-2017 அன்று காலை முதல் சென்னை உட்பட திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

நான் மேலே குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மேற்கு நோக்கி நகரத் தொடங்கினாள் மட்டுமே சாத்தியமாகும்.

வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு இருக்கிறதா என்று என்னிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தீர்கள் இது தொடர்பாக வானிலை ஆய்வு மையமே முதல் தகவலை வெளியிடட்டும் என காத்திருந்தேன் தற்பொழுது வானிலை ஆய்வு மையமே அடுத்த இரண்டு நாட்களில் ஒரு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் எனவும் அது வலு பெற்று டிசம்பர் முதல் வாரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் தெரிவித்து உள்ளது.இது குறித்து நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் முதலில் 30-11-2017 அன்றோ அல்லது அதற்கு பிறகோ வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகட்டும் அது வலுவடைந்து வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லாமல் தமிழகத்தை நோக்கி வரட்டும் அதன் பிறகு அது எங்கு கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது என்று நாம் விவாதிக்கலாம்.அதை விடுத்து இப்பொழுதே windy app பயன்படுத்தி பார்த்துவிட்டு இது இங்கே கரையை கடக்க போகிறது ,இது விலகி செல்ல போகிறது  இங்கெல்லாம் கனமழை பொழிய போகிறது என்று நீங்களும் பீதியடையாதீர்கள் மற்றவர்களையும் பீதியடைய செய்யாதீர்கள் அவை நிகழ் நேர தகவல்களுக்கு ஏற்றாற்போல சில மணி நேரங்களுக்கு ஒரு முறை தங்களை தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் அது மட்டுமல்லாமல் windy app இல் சொல்வதெல்லாம் உண்மையென்றால் நேற்று தமிழகத்தில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து இருக்க வேண்டும் ஆனால் உண்மையில் அப்படியா நடந்தது ? அதை பயன்படுத்துங்கள் ஆனால் பல நாட்களுக்கு முன்பாகவே அதில் கூறும் அனைத்தும் அப்படியே நடந்துவிடும் என்று நம்பாதீர்கள்.

மேலும் நான் மேலே பதிவிட்ட அணைத்து தகவல்களும் தற்போது நிலவி வரும் வானிலையையும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகளையும் அடிப்படையாக கொண்ட ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில்  மீண்டும் பதிவிடுகிறேன்.


கடந்த 23-11-2017 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் மழையின் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகுடிய பெரிய அளவிலான அம்சங்களையும்  (Large Scale Features) அது குறித்த நான் கடந்த 26-11-2017 அன்று தெரிவித்து இருந்த கருத்துகளையும்  இந்த பதிவுடனேயே  இணைக்கிறேன்.

- தற்பொழுது லா-நினாவுக்கான (la-nina) சூழல்கள் நிலவி வருகிறது அடுத்த இரண்டு வாரங்களுக்கும் இதே நிலையே தொடரலாம்.

- தற்பொழுது மேடன் ஜூலியன் அலைவு (Madden - Julian oscillation) ஆனது அதன் 6 வது கட்டத்தில் வீச்சு 1 என்கிற அளவுடன் உள்ளது இது வரக்கூடிய நாட்களில் வீச்சின் அளவு குறைந்த நிலையில் அதனுடைய 5 ஆம் கட்டத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- இந்திய பெருங்கடலின் இருமுனை (Indian Ocean Dipole ) ஆனது தற்பொழுது நடுநிலையான கட்டத்தில் உள்ளது.


லா நினாவுக்கான சூழல் என்பது தென் அமெரிக்காவுக்கு அருகே இருக்கும் பசிபிக் கடல் பரப்பின் வெப்பநிலை குறைவை குறிக்கிறது.இந்த சூழலில் வர்த்தக காற்று (Trade Wind ) என்று சொல்லக்கூடிய மேற்கு திசையில் பயணிக்க கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் அவை பசிபிக் பெருங்கடலின் மறுமுனையில் அதாவது ஆசிய கண்டத்துக்கு அருகே இருக்கும் வெப்பமான பகுதிக்கு சென்று மேலே எழும்புகையில் அந்த பகுதியில் மழை மேகங்கள் அதிகமான அளவில் உருவாகுகின்றன இதன் தாக்கத்தால் இந்தோனேஷியா ,இந்தியா உட்பட பல நாடுகளில் மழையின் அளவு அதிகரிக்கிறது.லா-நினாவின் காரணமாக சில இடங்கள் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் அவை எந்த ஒரு இடத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதியாக குறிப்பிட்டு இப்பொழுதே சொல்ல முடியாது. பொதுவாக லா-நினாவின் காரணமாக இந்தியா ,இந்தோனேசியா அருகே உள்ள கடல் பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது ஆனால் மழை அதிகரிப்புக்கு இது மட்டுமே போதாது லா-நினோவுக்கான சூழல்கள் நிலவி வந்த பொழுதே பருவமழை பலன் வழங்காமல் போன நிகழ்வுகளும் வரலாற்றில் உண்டு.


மேடன் ஜூலியன் அலைவு (Madden - Julian oscillation) ஆனது இந்த மாத இறுதியில் தனது 4 வது கட்டத்துக்கு வர வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது பின்னர் அது மீண்டும் 5,6 மற்றும் 7 வது கட்டங்களுக்கு அடுத்தடுத்து பயணிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு கணிப்பியல் மாதிரி தெரிவிக்கிறது இன்னொரு சர்வதேச கணிப்பியல் மாதிரியின் கூற்று படி நவம்பர் மாத இறுதியில் அது 8 வது கட்டத்துக்கும் டிசம்பர் முதல் வார இறுதியில் அது 2 வது மற்றும் 3 வது கட்டத்துக்கும் அடுத்தடுத்து நகர வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கிறது.மேலே கூறி இருந்தது போன்று அது நவம்பர் மாத இறுதியில் 4 வது கட்டத்துக்கு வந்தால் இந்தோனேசியா மற்றும் இந்திய பெருங்கடலில் மழையின் அளவு அதிகரிக்கும் அதனால் வங்கக்கடல் பகுதிக்கும் பயன் உண்டு.மேடன் ஜூலியன் அலைவு அதன் 3 வது கட்டத்துக்கு வராமல் இந்த மாத இறுதியிலும் டிசம்பர் முதல் வாரத்திலும் தமிழகத்தின் மழை அளவில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சந்தேகம் தான் பொறுத்திருந்து பார்ப்போம்.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...