நிகழும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 க்குள் சுனாமி வர வாய்ப்பு உள்ளதா என்று என்னிடம் சிலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறீர்கள் உங்களின் கேள்விகளுக்கான எனது பதிலாக தான் இந்த பதிவை பதிவிடுகிறேன்.
நான் பொதுவாக ஒரு நிகழ்வு நடக்க வாய்ப்பு இருப்பதாக அதாவது வெப்பநிலை மாற்றமோ அல்லது மழையோ அது தொடர்பான பதிவுகளை பதிவிடுகையில் அதற்கான ஆதாரங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பேன்.90% ஒரு நிகழ்வு நடக்க வாய்ப்பு உள்ளது என தெரிந்த பின்பு அனைத்து சூழ்நிலைகளும் அதற்கு சாதகமாக இருக்கிறது என்று நான் நம்பும் பட்சத்தில் தான் அந்த பதிவை பதிவுடுவேன்.ஆனால் சுனாமி , நிலநடுக்கம் போன்ற நிகழ்வுகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் நடக்கும் அல்லது நடக்காது என்று ஒரு சில மாதத்திற்கு முன்பாகவே உறுதியாக கூறும் அளவிற்கு நாம் வளிமண்டலவியல் மற்றும் தொழிநுட்பத்தில் வளர்ச்சி அடைந்து இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அதனால் இதைப்போன்ற தகவல்களை உறுதிப்படத்தவோ அல்லது வதந்தி என உதறித்தல்லவோ நம்மிடம் உரிய ஆதாரங்கள் தற்பொழுது இல்லை ஆகையால் இதற்கு அனுபவ ரீதியாக தான் தற்பொழுது பதில் வழங்க முடியும்.கடந்த முறை சுனாமியின் பொழுது அரங்கேறிய ஒரு உண்மை கதையில் நமது பதிவுக்கும் தலைப்புக்கும் தொடர்புடைய ஒரு சில விஷயங்களை மட்டும் நான் பதிவிட விரும்புகிறேன்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் பொழுது அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியை பூர்விகமாக கொண்டவன் நான்.அச்சமயம் நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன்.26-12-2004 ஆம் ஆண்டு சுனாமி காரைக்கால் பகுதியை தாக்குவதற்கு 3 மணி நேரங்களுக்கு முன்பு அதாவது திட்டத்திட்ட காலை 5:00 மணிக்கு நான் சென்னைக்கு செல்ல காரைக்கால் பேருந்து நிலையத்தில் நண்பர்களுடன் காத்திருந்தேன்.எனக்கு அன்று 3 மணி நேரத்திற்கு பிறகு சுனாமி வருமென்றும் தெரியாது எந்த தொலைக்காட்சியும் இது குறித்து ஒரு வார்த்தை கூட முன்கூட்டியே குறிப்பிட்டு இருந்ததாக நினைவில் இல்லை.அப்பொழுது எனது நண்பர்களில் ஒரே ஒருவரிடம் மட்டுமே அலைப்பேசி இருந்தது அதன் வாயிலாக புதுச்சேரிக்கு செல்லும் வழியில் சென்னையில் நிலநடுக்கம் என்றும் காரைக்காலில் அரசலாறு பாலம் உடைந்து விட்டது என்றும் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் தருவாயிலேயே தெரிந்து கொண்டோம் ஆனால் அப்பொழுது கூட உண்மையில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது எங்கள் பயணத்தையும் தொடர்ந்து புறவழிச்சாலை வழியாக பயணித்து சென்னையையும் அடைந்து விட்டோம் அங்கு சென்று தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது தான் என்ன நடந்தது என்பதையே தெரிந்து கொண்டோம் அப்பொழுது கூட கடல் நீர் உள்ளே வந்தது ,ஆடி பேரலை போன்ற வார்தைகளை பயன்படுத்தினார்களே தவிர சுனாமி என்று வார்த்தையை யாரும் பயன்படுத்த வில்லை.தொலைக்காட்சியில் காரைக்கால் - 200 ,நாகப்பட்டினம் -331 , வேளாங்கண்ணி - ??? , புதுச்சேரி - ??? , கடலூர் -??? , சென்னை - ??? என வரிசையாக ஊர்களின் பெயரும் அதை தொடர்ந்து எண்களும் தொடர்ந்து அணிவகுத்து செய்திக்கு கீழே உருண்டோடின பின்னர் தான் தெரியும் அது சுனாமியின் காரணமாக அந்தந்த ஊர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்று அதன் பின் சில மணி நேரங்களுக்கு ஒரு முறை அந்த எண்களில் மாற்றங்கள் இருந்துகொண்டே இருந்தது.உலகில் நடந்த மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்று உலகில் திட்டத்திட்ட 2,50,000 நபர்கள் இதன் காரணமாக உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு பிறகு 2005 ஆம் ஆண்டு எப்பொழுதெல்லாம் பூகம்பங்கள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் சுனாமி பீதியும் அதிகரிக்க தொடங்கியது 01-01-2015 அன்று கூட அந்தமான் மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் பதிவானது அப்பொழுதும் சுனாமி பீதி அதிகரித்து இருந்தது அதன் பின் 02-03-2005 ஆம் தேதி இந்தோனேசியாவின் பாண்தா கடல் பகுதியில் 7.1 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவானது அப்பொழுதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.அதன் பின் 2005 ,2006 ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சி ஊடகங்களில் அவ்வப்பொழுது சுனாமி என்கிற வார்த்தை அடிபட்டு வந்தது அனால் சுனாமி என்னவோ அதன் பின் வரவே இல்லை.அக்காலகட்டத்தில் ஒரு முறை கடலுக்கு நடுவில் வானூர்தியில் பறந்தபடி ஒரு காணொளி தொலைக்காட்சி ஊடங்களில் நேரடியாக ஒளிப்பரப்பட்டது கடல் மிகவும் கொந்தளிப்பாக இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டது வானூர்தியின் (helicopter ) காத்தாடி வேகமாக சுழல்வதால் நீர் கொந்தளிக்கும் என்பது அவர்களுக்கு அந்நாளில் தெரிந்திருக்காது போல ....அதை என்னால் இன்றும் ஜீரணிக்க முடியவில்லை.
அந்த உண்மை சம்பவங்களை நான் இங்கே பதிவிட காரணம் அன்று சுனாமி வந்ததற்கு பிறகும் கூட என்ன நடந்தது என்றும்.தற்பொழுது என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்றும் சுனாமி தொடர்பான எந்த ஒரு தகவலும் சரியாக தெரியாமல் மக்கள் தவித்து இருந்தது ஒரு காலம் ஆனால் இன்று சுனாமி ஏன்கிற ஒன்று வருகிறதோ இல்லையோ அது வரும் என்று யாராவது சொன்னால் அந்த செய்தி மட்டும் காட்டுத் தீ போல பரவி அது வருமா ? வராதா ? என்று மக்கள் பீதியிலேயே இருப்பது இந்த காலம். முன்பெல்லாம் ஒரு இயற்கை பேரழிவு நடக்க வாய்ப்புள்ளது என்று கூற ஆதாரங்கள் அத்தியாவசமான ஒன்றாக கருதப்பட்டது ஆனால் இப்பொழுது எல்லாம் ஒரு அழிவு நடக்க போகிறது என்று ஒருவர் கூறிவிட்டால் அதை உடனே சமூக ஊடகங்களின் மூலமாக பரப்பி விடுகிறோம் பிறகே அது உண்மையா இல்லையா என்று ஆதாரங்களையும் , தகவல்களையும் தேடி அழைக்கின்றோம்.
கேரள மாநிலத்தை சார்ந்த பாபு கலாயில் என்பவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் சமூக ஊடங்களில் வெளியான பிறகே சுனாமி வரும் என்பது போன்றான செய்திகள் அதிகம் பரப்பப்பட்டு வருகின்றன அவர் புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வுகளின் (extra sensory perception) அடிப்படையில் அதை காட்சியாக கண்டதாக தெரிவித்துள்ளார் அதை உங்களுக்கு புரியும்படி எளிமையாக கூற வேண்டுமென்றால் அவர் அவரது 7 வது அறிவை பயன்படுத்தி இதை கண்டறிந்ததாக கூறுகிறார் நான் வெறும் 6 அறிவு மட்டுமே கொண்ட சாதாரண மனிதன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த ஆதாரங்களை மட்டுமே தேடி அலைபவன் அது மட்டுமல்லாமல் இந்திய பேரிடர் மேலாண்மை துறை , இந்திய வாணிலை ஆய்வு மையம் என எந்த ஒரு அதிகார பூர்வ அமைப்புகளும் இது குறித்த மாற்றுக்கருத்தை முன்வைக்க முடியாமல் தயங்கி வரும் வேளையில் ஒரு 6 அறிவு மட்டுமே கொண்ட சாதாரண மனிதனான நான் இதைப்போன்று நடக்க வாய்ப்பே இல்லை என்று எப்படி கூற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
ஆக இந்த விவகாரத்தில் என்னால் கூற முடிந்தது அறிவுரை மட்டுமே இதற்கு வாய்ப்பே இல்லை என்று இதுவரை யாரும் மறுப்பு தெரிவிக்காமல் இருப்பதற்கான காரணம் சுனாமி ,நிலநடுக்கம் போன்றவைகள் ஒரு இடத்தில் ஏற்பட்டால் அந்த இடத்தில் மீண்டும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்பதாக தான் இருக்க வேண்டும் ஆனால் அது இந்த நாளுக்குள் நடந்தே தீர வேண்டும் என்பது அவசியமில்லை .ஒருவேளை டிசம்பர் 31 ஆம் தேதி வரை சுனாமி வரவில்லை என்று வைத்துக்கொள்வோம் 31-12-2017 (2017 டிசம்பர் 31) க்கு பிறகு சுனாமி வர வாய்ப்பே இல்லை அடுத்த 50 ஆண்டுகளுக்கு சுனாமி பயமே தேவையில்லை என்று யாரவது உறுதிபட கூற முடியுமா ? அதுவும் யாராலும் முடியாது அதனால் ஒரு தேதியை முன்னிறுத்தி விட்டு அதற்குள் அதற்குள் என்று நாம் பயந்து வந்தோமேயானால் அதனால் பயன் ஒன்றும் நமக்கு கிட்டப்போவது கிடையாது இதற்கு முன்னாள் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட அத்தனை பேரிடர்களையும் எப்படி எதிர்கொண்டோமோ அப்படி தான் இதனையும் எதிர்கொள்ள வேண்டும்.
01-01-2018 ஆம் தேதி இன்னும் ஒன்றரை மாதத்தில் பிறக்க இருக்கும் 2018 ஆம் ஆண்டின் எனது முதல் பதிவை நமது பக்கத்தில் பதிவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.இதைப்போன்ற விஷயங்களை விவாதிப்பதில் தவறில்லை ஆனால் மக்கள் மனதில் பயத்தை விதைப்பது தவறு என நான் கருதுகிறேன் முடிந்தவரையில் பிறருக்கு நாம் பீதியை ஏற்படுத்தாத வண்ணம் நடந்துகொள்வோம்.கடந்த முறை சுமத்ராவில் பூகம்பம் ஏற்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகே தமிழகத்தில் சுனாமி ஏற்பட்டது அன்றைய காலகட்டத்தில் இது குறித்த ஒரு சரியான தெளிவு இல்லாத காரணத்தால் நாம் பல உயிர்களை இழக்க வேண்டியதாயிற்று இனி வரும் காலங்களிலாவது பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள தேவையான பயிற்சிகளையும் ,விழிப்புணர்வையும் மக்களிடையே ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வளவு விளக்கத்துக்கு பிறகும் எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம் டிசம்பர் 31க்குள் சுனாமி வருமா ? வராதா ? என்று ஒரு கேள்வியை நீங்கள் என்னிடம் முன்வைப்பீர்களே யானால் அதற்கான என்னுடைய பதில் இது தான் ஒரு குறிப்பிட்ட நாளிலோ அல்லது அதற்குள்ளாகவோ மட்டும் இயற்கை பேரிடர் ஏற்பட வேண்டும் என்கிற அவசியம் இல்லை.வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக பிறருக்கு பயனுள்ள வகையில் வாழுங்கள்.

0 comments:
கருத்துரையிடுக