தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

02-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

தயவு செய்து உங்களுடைய ஊர்களின் பெயரை இந்த பதிவில் comment செய்ய வேண்டாம் உங்கள் ஊர்களுக்கான மழை வாய்ப்புகள் குறித்த கேள்விகளை வேறு பதிவில் comment செய்யுங்கள் இந்த தகவலை முழுவதும் படித்து விட்டு உங்களுடைய சந்தேகங்களையும் கருத்துகளையும் மட்டும் பதிவிடுங்கள்.

02-12-2017 அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருக்கும் ஒக்கி (Ockhi) தீவிர புயலானது (Severe Cyclone) இன்று காலை முதல் வலுப்பெற்று  மிக தீவிர புயல் (Very Severe Cyclone ) என்கிற நிலையை அடைந்துள்ளது அது தற்பொழுது மினிக்காய் தீவுகளுக்கு வட மேற்கே நிலைகொண்டுள்ளது.வரக்கூடிய நாட்களில் அந்த ஒக்கி மிக தீவிர புயலானது தொடர்ந்து மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் 02-12-2017 இன்றும் வட கடலோர ,டெல்டா மற்றும் ஒரு சில உள் மாவட்டங்களிலும் ,தென் மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது நல்ல மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.மழைக்கான வாய்ப்புகள் குறித்து அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.கன்னியாகுமரி ,நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை பொறுத்தவரையில் அவ்வப்பொழுது மழைக்கு வாய்ப்பு உண்டு ஆனால் இனி தொடர் கனமழைக்கோ மிக கன மழைக்கோ வாய்ப்புகள் குறைவு மேலும் இனி வரக்கூடிய நாட்களில் அந்த மிக தீவிர புயலானது அரபிக்கடல் பகுதியில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து செல்கையில் தென் தமிழகத்தின் மீதான அதன் தாக்கம் முற்றிலும் குறைய தொடங்கும்.03-12-2017 நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு உண்டு அதற்கு பிறகு வரக்கூடிய நாட்களிலும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமானது  வரையிலான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது.

அனைவரும் சாகர் புயல் குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறீர்கள் அது குறித்த கேள்விகளை எல்லாம் இன்னும் பிறக்காத குழந்தைக்கு பெயர் சூட்டு விழா கொண்டாடுவதை போல தான் கருத வேண்டியதுள்ளது.வட இந்திய பெருங்கடல் வெப்ப மண்டல பகுதிகளில் (Northern Indian Ocean Tropical Region ) அடுத்து புயல் உருவானால் அதற்கு சாகர் (sagar) என்று இந்திய மொழியில் பெயர் சூட்டப்படும் அதன் பிறகு அதற்கு அடுத்து ஒரு புயல் உருவானால் அதற்கு மேக்குனு (mekunu) என மாலத்தீவுகளின்  பெயர் சூட்டப்படும் அதன் பிறகு மியான்மர் நாட்டின் பெயரான டாயே (Daye) அதன் பிறகு ஓமன் ,பாகிஸ்தான் ,இலங்கை ,தாய்லாந்து நாட்டின் சொற்களால் லுபான் (luban ) , டிட்லி (titli) ,காஜா (gaja) , ஃபெதாய் (phethai) போன்ற பெயர்கள் அடுத்தடுத்த புயல்களுக்கு சூட்டப்படும் பிறகு மீண்டும் வங்கதேச மொழியில் அடுத்து உருவாக கூடிய புயலுக்கு பெயர் சூட்டப்படும் அதன் பிறகு இந்தியா ,மியான்மர் என அப்படியே இந்த புயலுக்கு பெயர்சூட்டும் முறை தொடரும்.

நன்றாக கவனியுங்கள் புயல் உருவானால் தான் அதற்கு பெயர் சூட்டப்படும் இது வரை அக்டோபர் மாதத்தில் ஒருமுறையும் நவம்பர் மாதத்தில் ஒருமுறையும் என இருமுறை வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் அதற்கு ஒக்கி என பெயர் சூட்டுவார்கள் என எதிர்பார்த்தோம் ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை அந்த இரண்டு முறையுமே அவை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடந்தன.

02-12-2017  தற்பொழுது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது அது வலு பெற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Low Pressure Region ) நாளை அல்லது நாளை மறுநாள் உருவாகலாம் அதன் பிறகு 05-12-2017 அல்லது 06-12-2017 அல்லது அதற்கு பிறகு வரும் தேதிகளில் அது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression ) வலு பெற வாய்ப்புகள் உள்ளது அதன் பிறகு அது மேலும் வலு பெற்று ஒரு புயலாக உருவெடுத்தால் மட்டுமே அதற்கு சாகர் என்று பெயர் சூட்டப்படும்.அப்படி ஒருவேளை அது புயலாக உருவானால் அது எங்கே கரையை கடக்கும் என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது அதற்கு காரணம் ஊடகங்கள் மூலம் பரவி வரும் வீண் வதந்திகள் தான் ஒக்கி புயல் கன்னியாகுமரி கடல் பகுதியை நெருங்கும் என்று 7 நாட்களுக்கு முன்பே  இன்று இதைப்போன்ற செய்திகளை வெளியிடும் எந்த ஊடகமோ, அலைபேசியின் செயலியோ , மாதிரியோ இல்லை அந்த மாதிரிகளை பயன்படுத்தி வரும் windy போன்ற செயலிகளோ சரிவர விளக்கவில்லை. 28-11-2017 அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் குமரியை நெருங்க வாய்ப்பு உள்ளது என நான் எழுதியிருந்த பதிவிலேயே கூட இலங்கைக்கு கிழக்கே இருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கும் நோக்கி நகர்ந்து வலு பெற்றால் மட்டுமே தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது ,குமரிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொள்ள வாய்ப்புள்ளது என்று ஒரு நிபந்தனையுடன் தான் பதிவிட்டு இருந்தேன் அது தான் உண்மையும் கூட வானிலை திடீர் மாற்றங்களுக்கும் திருப்பங்களும் பெயர்போனவை என்பதை கடந்த 3 ஆண்டுகளில் நான் நன்ங்கு உணர்ந்தவன்.மேலும் அனைத்து மாதிரிகளும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை நிகழ் நேர தகவல்களுக்கு தகுந்தாற் போல தங்களை புதுப்பித்து கொள்கின்றன ஆகவே அதன் நீட்டிக்கப்பட்ட கணிப்பு முறை  உறுதித்தன்மை வாய்ந்தவை ஒரு புயல் கரையை கடப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றால் அவை கரையை கடப்பதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பாக கணித்தால் மட்டுமே அது எங்கு கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்பதில் ஒரு துல்லியம் இருக்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை நான் முன்பே பதிவிட்டு இருந்தது போல வரக்கூடிய நாட்களில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு உண்டு ஆனால் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழியாக நாம் நேரடியாக மழையை பெற குறைந்தது இன்று முதல் 3 அல்லது 4 நாட்களாவது காத்திருக்க வேண்டும் அதுவரை எங்கெங்கே மழைக்கு வாய்ப்புகள் உள்ளது என்பதை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.

நான் உங்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் புயல் குறித்த உறுதியான தகவல்களை அறிய காத்திருங்கள் இப்பொழுதே அது எங்கு கரையை கடக்கபோகிறது என்பதை போன்ற தகவல்களுக்கு எல்லாம் மிக முக்கியத்துவம் வழங்காதீர்கள் நேற்று நண்பர் ஒருவர் நமது பக்கத்தில் எனக்கு Message செய்திருந்தார் அதில் ஒரு பத்திரிக்கை செய்தியை அனுப்பி இருந்தார் அது என்ன பத்திரிக்கை என்பது எனக்கு தெரியவில்லை அதில் வங்கக்கடலில் உருவான புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது ஒரு மிக தீவிர பயல் உருவாகி அது தமிழகத்துக்கு மிக அருகில் இருந்தால் மட்டுமே கடலோர பகுதிகளில் இவ்வளவு வேகத்தில் காற்று வீசக்கூடும்.இதை இவர்கள் ஒக்கி தீவிர புயலாக வலுப்பெற்றது என்றபொழுது வானிலை ஆய்வு மையம் வழங்கிய பாதி செய்தியையும் வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை என்கிற செய்தியையும் இணைத்து ஒரு புதிய வடிவில் அறிய முறையில் மக்களுக்கு செய்தியை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும் அதேபோல ஒரு பிரபலமான தொலைக்காட்சி ஊடகத்தில் நேற்று மாலை வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக செய்தி வெளியிடுகிறார்கள் உண்மையில் உருவானது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டுமே இவை இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

அந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகள் குறித்தும் அது வலுப்பெற்ற பிறகு அது குறித்த உறுதியான தகவல்களையும் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன் மேலும் புயல் வாய்ப்புகள் குறித்த சரியான தகவல்களை சரியான தருணத்தில் பதிவிடுகிறேன்.

மேலும் நான் மேலே கூறிய மழைக்கான வாய்ப்புகள் அனைத்தும் தற்போதைய வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...