07-12-2017 நேற்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்த அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்பொழுது சென்னைக்கு வட கிழக்காகவும் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்திற்கு தென் கிழக்காகவும் வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது இன்னும் சில மணி நேரங்களில் அது வட மேற்கு திசையில் நகர தொடங்க வாய்ப்புகள் உள்ளது இது வட மேற்கு திசையில் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து பின்னர் 08-12-2017 (நாளை) அல்லது 09-12-2017 (நாளை மறுநாள்) அன்று ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Deep Depression ) வலு பெற்று வட - வட மேற்கு திசையில் நகர தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது இதே நிலையே தொடர்ந்தாள் 10-12-2017 அல்லது 11-12-2017 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய நாட்களில் அது ஒடிசா மாநிலம் பிரதீப்புக்கும் விசாகபட்டினத்திற்கும் இடையே வலுவிழந்த நிலையில் கரையை கடக்க முற்படலாம் தற்பொழுது உள்ள சூழலில் அது ஒடிசா மாநிலம் பூரி (Puri ) அருகே கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
அது தமிழகத்தை விட்டு விலகி செல்ல வாய்ப்பு இருப்பதாக நேற்று எப்படி தெரிவித்தீர்கள் என்று என்னிடம் சிலர் கேள்வி எழுப்பியிருந்தீர்கள் அவர்களுக்கு அப்பொழுதே அதற்கான பதிலை வழங்கியிருந்தேன் தற்பொழுது அனைவருக்காகவும் இங்கே அதற்கான பதிலை மீண்டும் பதிவிடுகிறேன் இது தொடர்பாக பல பதிவுகளை நான் இதற்கு முன்பே நமது பக்கத்தில் பதிவிட்டு உள்ளேன். புதிதாக நமது பக்கத்தில் இணைத்தவர்களுக்காக இங்கு மீண்டும் பதிவிடுகிறேன் மேலும் புதிதாக நமது பக்கத்தில் இணைந்தவர்களுக்கான எனது வேண்டுகோள் என்னவென்றால் கொஞ்சம் பழைய பதிவுகளையும் தேடி படித்து பாருங்கள் அதில் அடிப்படை தகவல்கள் தொடர்பான உங்களுடைய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் .ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து அதாவது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்ற பிறகு அவை வட மேற்கு திசையில் நகரவே அதிக வாய்ப்புகள் உள்ளது அதன் வலு அதிகரிக்ககையில் அது இன்னும் வடக்கு நோக்கியும் சில நேரங்களில் வட கிழக்கு திசையில் கூட நகரும். அதனால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதற்கு முன்பாகவே அதாவது ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாகவோ அல்லது பகுதியாகவோ மேற்கு நோக்கி நகர்ந்து தமிழகத்தை நெருங்கி அதன் பின் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வலு பெருமேயானால் அது தமிழகத்தை நெருங்க அதிக வாய்ப்புகள் உள்ளது மாறாக அது தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியிலேயே வலு பெற்றால் அது தமிழகத்தை விட்டு விலகி செல்லவே அதிக வாய்ப்புகள் உள்ளது இது பொதுவான ஒரு தகவல் சில நேரகங்களில் நிலவி வரும் சூழல்களுக்கு ஏற்ப இதன் இந்த பண்பிலும் மாறுதல்கள் இருக்கும்.அதனால் தான் கடந்த சில நாட்களாக அனைத்து மாதிரிகளும் அது தமிழகத்தை விலகி செல்லும் என்று காண்பித்தும் அது வலுவடையாதவரை காத்திருந்தேன் நேற்று மதியம் வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து அது வலுப்பெற்றதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியானதும் அது தமிழகத்தை விட்டு விலகி செல்லவே அதிக வாய்ப்புகள் என்பதை பதிவிட்டுவிட்டேன்.
மேலும் நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இதே சூழல்கள் தொடரும் பட்சத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்துக்கு நேரடியான மழை நிகழ்வுகள் என்று பெரிதாக எதுவும் உருவாக வாய்ப்புகள் இல்லை.அதே சமயம் நான் முன்பு தெரிவித்து இருந்தது போல அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கையில் காற்றை இழுப்பதால் தென் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே அவ்வப்பொழுது மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு மேலும் அவ்வப்பொழுது வெப்ப சலன மழைக்கான வாய்ப்புகளும் உண்டு ஆனால் தமிழகம் முழுவதும் ஒரு பரவலான மழைக்கு அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு வாய்ப்புகள் இல்லை.ஆங்காங்கே ஒரு சில இடங்களில் அவ்வப்பொழுது மிதமான மழை பதிவாகி வந்தாலும் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே தொடரும் குறிப்பாக வட தமிழகத்தில் மேலும் இனி மழைக்கான வாய்ப்புகள் அனைத்தும் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுகளை பொறுத்து மாறுதல்களுக்கு உட்பட்டது.
சரி அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவிலோ அல்லது ஒடிசாவிலோ கரையை கடந்த பிறகு அதாவது 11-12-2017 ஆம் தேதிக்கு பிறகு என்ன ஆகும் ? அதன் பிறகு அடுத்த சில நாட்களில் மீண்டும் தமிழகத்தில் வட கிழக்கு காற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கி வட கிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல்கள் உருவாக தொடங்கும் அதனால் இதன் பிறகு மழையே இருக்காது என்று யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை அடுத்தடுத்து காற்றழுத்தங்கள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் அதற்கு சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புகள் வருகையில் பதிவிடுகிறேன்.
மேலும் நான் மேலே பதிவிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்போதைய வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் வரக்கூடிய நாட்களில் இதில் ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட்டால் மீண்டும் பதிவிடுகிறேன்.

0 comments:
கருத்துரையிடுக