தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

21-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம்?

21-12-2017 நேரம் இரவு 11:00 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கும் தற்போதைய வானிலையே தொடர அதிக வாய்ப்புகள் உள்ளது ஆகையால் 22-12-2017 ( நாளை ) வட கடலோர மற்றும் ஒரு சில உள் ,தென் மாவட்டங்களிலும் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அதாவது 23-12-2017 ,24-12-2017  மற்றும் 25-12-2017ஆம் தேதிகளிலும் வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம் ஒரு சில உள் மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது லேசான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.25-12-2017 ஆம் தேதி அன்று ஒரு சில வட கடலோர மாவட்டங்களை தவிர பிற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் அதன் பிறகு தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாகி வந்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவவே  அதிக வாய்ப்புகள் உள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிலர் நமது பக்கத்தில் புயல் குறித்த கேள்விகளை எழுப்ப தொடங்கியிருக்கிறீர்கள்.புயல் குறித்த உங்களுடைய சந்தேகங்களுக்கான  அல்லது கேள்விகளுக்கான எனது பதில் இதுதான்.

மேற்கு பசிபிக் வெப்ப மண்டல பகுதிகளில் (Western Pacific Tropical Region) உருவாகியிருக்கும் கைடக்  (Kai-tak ) புயல் குறித்தும் அதே பகுதியில் புதிதாக உருவாகியிருக்கும் டெம்பின் (TEMBIN) புயல்குறித்தும் உங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுத்து இருக்கிறது என்று நினைக்கிறன்.ஆனால் இப்பொழுதே அவைகள் தொடர்பாக உங்கள் அனைவரையும் சிந்திக்க செய்ய தூண்டியது எது என்று தான் எனக்கு புரியவில்லை அது குறித்து நாம் இன்னொரு பதிவில் பின்னர் விவாதிக்கலாம் தற்பொழுது எனது பதிலை பதிவிட்டுவிடுகிறேன் பொதுவாக மேற்கு பசிபிக் வெப்ப மண்டல பகுதிகளில் (Western Pacific Tropical Region) உருவாகும் புயல்கள் அனைத்தும் அப்படியே வங்கக்கடலுக்குள் நுழைந்து தமிழகத்தை நோக்கி தான் நகர்ந்தே தீர வேண்டும் என்கிற கட்டாயம் எல்லாம் கிடையாது.ஒவ்வொரு மாதிரிகளும்  வெவ்வேறு விதமான முன்பே வரையறுக்கப்பட்ட மென்பொருள் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்பட்டு நீடிக்கப்பட்ட கணிப்பியல் முறையில் தகவல்களை (கணிப்புகளை ) வழங்கிவரலாம் ஆனால் தற்பொழுது இந்திய பெருங்கடலில் நிலவி வரும் சூழல்களே வேறு நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இந்திய பெருங்கடல் இருமுனை (அ ) இருதுருவம் (Indian Ocean Dipole) தற்பொழுது எதிர்மறையான கட்டத்தில் (Negative Phase ) தான் உள்ளது .தற்பொழுது நிலவி வரும் சூழலை நீங்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிலவி வந்த சுழல்களுடன் ஒப்பிடலாம்.இதைபோன்றதொரு சூழலில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானாலும் அவை நிலைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு அதேபோல தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடல் பகுதியை அடைவது என்பதும் அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது இது தொடர்பாகவும் இந்திய பெருங்கடல் இருமுனை தொடர்பாகவும் விரிவான அடிப்படை தகவல்களை இதற்கு முந்தைய பதிவுகளிலேயே பதிவிட்டு உள்ளேன் புதிதாக நமது பக்கத்தில் இணைந்தவர்களுக்கு இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருக்குமாயின் - https://goo.gl/XmfuBT என்ற முகவரியில் அந்த பதிவின் நகலை படிக்கலாம்.  தற்போதைய சூழலில் கைடக்  (Kai-tak ) புயல் குறித்தும் புதியதாக உருவாகியிருக்கும் டெம்பின் (TEMBIN) புயலின் பாதைகள் குறித்தும் நாம் இப்பொழுதே சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டிய அவசியம் கிடையாது வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால் மட்டுமே நாம் தமிழகத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயவோ விவாதம் செய்யவோ முடியும். வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதும் அதன் நகர்வுகள் குறித்து விரிவாக பதிவிடுகிறேன்.அதனால் அவைகளின் நகர்வுகள் குறித்து ஒரு தெளிவு கிடைக்கும் வரை இன்னும் சில நாட்கள் காத்திருப்போம்.

இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரபூர்வ இணையதளத்தில் இடம்பெற்று இருக்கும் அடுத்த 4 வாரங்களுக்கான நீடிக்கப்பட்ட கணிப்பியில் முறையில் (Extended Range Forecast ) ஜனவரி முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் மழைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதைப்போன்ற தகவல்கள் இடம்பெற்று உள்ளன அது பெரும்பாலும் டெம்பின் (TEMBIN) புயலின் நகர்வுகளை அடிப்படையாக கொண்ட கணிப்பாக தான் இருக்க வேண்டும் இது கூட உங்களுடைய சந்தேகங்களுக்கு இதன் வழங்கியிருக்கலாம் ஆனால் இவ்வளவு நீண்ட இடைவெளியில் அந்த கணிப்பை நம்மால் உறுதி செய்ய முடியாது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...