தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

16-12-2017 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

16-12-2017 நேரம் அதிகாலை 00:10 மணி அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 14-12-2017 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கும் பெரிய அளவிலான அம்சங்கள் (Large Scale Features) குறித்து பார்க்கலாம்.

- தற்பொழுது லா-நினாவுக்கான (la-nina) சூழல்கள் நிலவி வருகிறது அடுத்த இரண்டு வாரங்களுக்கும் இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

- தற்பொழுது கால நிலை மாற்றம் தொடர்புடைய மேடன் ஜூலியன் அலைவு (Madden - Julian oscillation) ஆனது அதன் 6 வது கட்டத்தில் வீச்சு 1 என்கிற அளவுடன் உள்ளது இது அடுத்து வரக்கூடிய நாட்களில் இதே வீச்சின் அளவுடன் அதனுடைய 7 வது கட்டத்துக்கு நகர்ந்து செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம் (Indian Ocean Dipole ) ஆனது தற்பொழுது அதன் எதிர்மறையான கட்டத்தில் (Negative Phase ) உள்ளது.

Indian Ocean Dipole (இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம்) என்றால் என்ன ?
Indian Ocean Dipole (இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம்) ஆனது இந்திய பெருங்கடலின் பூமத்திய ரேகை (Equator ) அருகே உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளின் இடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டை குறிக்கிறது இதை இந்தியன் நினோ என்றும் வழங்குவார்கள் அதற்கு காரணம் இதன் விளைவுகள் இந்தோனேஷியா , ஆப்பிரிக்கா , ஆஸ்தரலியா போன்ற பகுதிகளின் வானிலையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை அதே போல இவை இந்தியாவிலும் பருவமழை காலங்களில் பெய்யும் மழையின் அளவில் பெரிய அளவிலான மாற்றங்களை உருவாக்க கூடியவை.

Indian Ocean Dipole (இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம்) எதனால் ஏற்படுகிறது ? 
இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் பூமத்திய ரேகைக்கு (Equator) வடக்கே சோமாலியா அருகே உள்ள அரபிக்கடல் பகுதியின் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் தான் இந்தியன் நினோ என்று அழைக்கபடும் இந்த Indian Ocean Dipole ஏற்பட முக்கிய காரணியாக உள்ளது.

Indian Ocean Dipole இன் Positive Phase  (நேர்மறையான கட்டம் ) என்பது என்ன ? அது எப்படி ஏற்படுகிறது ? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன ?
இந்திய பெருங்கடலின் மேற்கு பகுதியில் அதாவது பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே உள்ள அரபிக்கடல் பரப்பில் நிலவும் வெப்பநிலையானது இந்திய பெருங்கடலின் கிழக்கே பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே அதாவது இந்தோனேஷியா அருகே வங்கக்கடல் பகுதிக்கு தெற்கே உள்ள இந்திய பெருங்கடலின் கடல் பரப்பில் நிலவும் வெப்பநிலையை விட அதிகமாக இருந்தால் அது அதன் நேர்மறையான கட்டம் (Positive Phase ) என வழங்கப்படுகிறது இதை எளிமையாக கூறவேண்டும் என்றால் பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே இந்திய பெருங்கடலின் கடல் பரப்பில் மேற்கு முனையில் நிலவும் வெப்பநிலையானது அதன் கிழக்கு முனையுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருந்தால் அது தான் Indian Ocean Dipole உடைய Positive Phase இது ஒருவகையில் தென்மேற்கு பருவமழைக்கு மிக சாதகமான சுழலும் கூட அதேசமயம் இதன் இந்த நிலை இந்தோனேஷியா , ஆஸ்தரலியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வறட்சியை ஏற்படுத்தக் கூடியது.

Indian Ocean Dipole இன் Negative Phase  (எதிர்மறையான கட்டம் ) என்பது என்ன ? அது எப்படி ஏற்படுகிறது ? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன ?
இப்பொழுது உங்களுக்கே புரிந்து இருக்கும் நான் மேலே குறிப்பிட்டவைகள் அனைத்தும் அப்படியே தலைகீழாக நடந்தால் அதுவே Indian Ocean Dipole இன் எதிர்மறையான கட்டம் (Negative Phase ) அதாவது மேற்கு இந்திய பெருங்கடலில் பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே உள்ள அரபிக்கடல் பரப்பில் நிலவும் வெப்பநிலையானது இந்திய பெருங்கடலின் கிழக்கே பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே அதாவது இந்தோனேஷியா அருகே வங்கக்கடல் பகுதிக்கு தெற்கே உள்ள இந்திய பெருங்கடலின் கடல் பரப்பில் நிலவும் வெப்பநிலையை விட குறைவாக இருந்தால் அது அதன் எதிர்மறையான கட்டம் (Negative Phase ) இதை எளிமையாக கூறவேண்டும் என்றால் பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே இந்திய பெருங்கடலின் கடல் பரப்பில் மேற்கு முனையில் நிலவும் வெப்பநிலையானது அதன் கிழக்கு முனையுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருந்தால் அது தான் Indian Ocean Dipole உடைய Negative Phase இதனால் இந்தோனேஷியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்கிறது ஆனால் இது வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு பலன் வழங்குமா என்று கேட்டால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும் மாறாக இதனால் வடகிழக்கு பருவமழையின் வீரியம் குறையவும் வாய்ப்புகள் உள்ளது.

Indian Ocean Dipole இன் Negative Phase  (எதிர்மறையான கட்டம் )  வடகிழக்கு பருவமழையை எப்படி பாதிக்கிறது ?
Indian Ocean Dipole (இந்திய பெருங்கடலின் இருமுனை (அ ) இருதுருவம்) ஆனது அதன் எதிர்மறையான கட்டத்தில் (Negative Phase) உள்ள பொழுது நான் இதற்கு முந்தைய பதிவுகளில் விளக்கி இருந்ததை போல வர்த்தக காற்று (Trade Winds ) பூமத்திய ரேகைக்கு (Equator ) அருகே இந்திய பெருங்கடலின் மேற்கில் இருந்து கிழக்காக பயணிக்கும் அதாவது இந்தோனேஷியா அருகே மேற்கில் இருந்து கிழக்காக பயணிக்கும் காற்றின் விசை அதிகமாக இருக்கும் இதன் காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்புகள் இருந்தாலும் அவை தமிழகத்தை நெருங்கி பலன் வழங்கும் வரை நிலைக்குமா என்பது சந்தேகம் தான் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் கூட சொல்லலாம்.

16-12-2017 இனி வரக்கூடிய நாட்களிலும் தமிழகத்தில் பரவலான கனமழைக்கோ தொடர்மழைக்கோ வாய்ப்புகள் இல்லை குமரிக்கடல் அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அவ்வப்பொழுது நெல்லை ,குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு அதேபோல ஒரு சில தென்மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது ஒரு சில இடங்களில் ஆங்காங்கே லேசான மழைக்கும் வாய்ப்புகள் உள்ளது அதே சமயம் வட கிழக்கு திசை காற்றின் வீரியம் அதிகரித்து இருப்பதால் அவை மழை மேகங்களை கொண்டு வந்து சேர்க்கையில் வட மற்றும் தென் கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில உள் மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு மழைக்கான வாய்ப்புகளை அவ்வப்பொழுது பதிவிடுவதே நல்லது என கருதுகிறேன் இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் கரையை கடக்க இருக்கும் கைடக் (kai-tak) புயலானது கரையை கடந்த பிறகு வலுவிழந்து ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி பின்னர் மீண்டும் வலு பெற்று இந்த மாத இறுதி வாரத்திற்கு முன்பு தாய்லாந்தை கடந்து இறுதி வாரத்தில் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவாக வாய்ப்பு இருப்பதாக ஒரு சில மாதிரிகள் தெரிவித்து வருகின்றன பொதுவாக நான் இதைப்போன்ற நீடிக்கப்பட்ட கணிப்புகளை பதிவிட விரும்புவதில்லை காரணம் அதன் உறுதித்தன்மை மிகவும் குறைவு ஆனால் இனி மழைக்கு வாய்ப்புகளே இல்லையா என்று வருந்தும் சிலருக்கு இப்படியும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் தெரியப்படுத்துவது அவசியமாகிறது அதே சமயம் இதே சூழ்நிலைகள் தொடரும் பட்சத்தில் அது தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து வலு குறைந்த நிலையில் மேற்கு நோக்கி நகர்கையில் நான் மேற்குறிய பூமத்திய ரேகைக்கு அருகே இந்திய பெருங்கடல் பகுதியின் கிழக்கு முனையை நோக்கி பயணிக்கும் மேற்கு திசை காற்றின் விசையால் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை முற்றிலும் வலுவிழந்து போய்விடவும் அதிக வாய்ப்புகள் உள்ளது என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

16-12-2017 இனி அடுத்து வரக்கூடிய நாட்களில் சேலம் , ஈரோடு , திண்டுக்கல் , மதுரை , கோயம்பத்தூர் , தர்மபுரி உட்பட உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவு இருக்கும் பனிப்பொழிவு அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது குறிப்பாக 17-12-2017 , 18-12-2017 மற்றும் 19-12-2017 ஆகிய தேதிகளில் நான் மேற்குறிய மாவட்டங்களில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையை விட 1° முதல் 3° செல்ஸியஸ் வரை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது மேலும் நான் மேற்கூறிய தேதிகளில் வட கடலோர ,தென் கடலோர ,தென் , டெல்டா மற்றும் வட என தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் 1° செல்ஸியஸ் வரையிலான வெப்பநிலை குறைவை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே உணரலாம். இது தொடர்பாக இன்று இரவு அல்லது நாளை அதிகாலை மீண்டும் பதிவிடுகிறேன்.

மேலும் நான் மேலே குறிப்பிட்ட மழைக்கான வாய்ப்புகள் அனைத்தும் தற்பொழுது நிலவும் வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

                                                                                                                  - by
                                                                                                   Emmanuel Paul Antony ,S
                                                                                               (Independent Weather Forecaster)

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...