தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மக்களாட்சியின் சர்வாதிகாரிகள்

கம்யூனிசம் என்றால் என்னவென்று ஐந்து முதல் ஐம்பது கோடி வரை ஊதியம் வாங்கிக்கொண்டு மக்கள் அறிய திரையில் வசனம் பேசி கைத்தட்டல் வாங்க நிறைய நபர்கள் இங்கு உண்டு ஆனால் முதலாளித்துவம் அதவாது ஆங்கிலத்தில் Capitalism என்றால் என்னவென்பதை மக்களுக்கு எடுத்து கூற எனோ இங்கு யாரும் முன்வருவது கிடையாது ஏனென்றால் ஐம்பது கோடிரூபாய்  ஊதியத்தை தொழிலாளிகளால் மொத்தமாக கொடுக்க முடியாது அல்லவா அதனால் தானோ என்னவோ. நாயகன் கம்யூனிசம் பேசுகிறார் என்பதற்காக திரையரங்குக்கு சென்று விசில் அடிக்கும் பாட்டாளி கூட்டத்தின் சட்டைப்பையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து மொத்தமாக திரையில் அந்த வசனத்தை பேசியவனுக்கு சம்பளமாக வழங்குகிறானே அவனே முதலாளித்துவத்தின் முதலாளி மிக குழப்பமாக இருக்கிறதா அப்பொழுது நான் மேற்குறிப்பிட்டு இருக்கும் வசனங்களை மீண்டும் ஒரு முறை படியுங்கள் அப்படியும் புரியவில்லையா சரி பரவாயில்லை தொடருங்கள்.

உன் வீட்டு மரத்தில் நீ பறிக்கும் 100 பலத்தை அவனுக்கு சொந்தமாக்கி கொண்டு அதில் இருந்து 1 பலத்தை உனக்கே ஊதியமாக வழங்குவது தான் முதலாளித்துவம். இதில் வேடிக்கை என்னவென்றால் நிலம் உன்னுடையது என்பதும் மரம் உன்னுடையது என்பதும் உனக்கே தெரியாது, உண்மையில் உன்னால் தேர்ந்தெடுக்க பட்டவர்களே உனக்கு அதை தெரியப்படுத்த முன்வருவது இல்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயம். நம் நாடு மக்களாட்சி கொள்கையை அடிப்படையாக கொண்ட நாடு ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தங்களது ஆட்சி காலம் முழுவதும் ஒரு சர்வாதிகாரிகளாகவே செயல்படுகிறார்கள் மக்களிடம் தான் அவர்களின் சர்வாதிகாரத்தின் வலிமையை காட்டுகிறார்கள் சர்வேதேச முதலாளிகளின் முன் எப்பொழுதும் மண்டியிட்டு தான் வந்திருக்கிறார்கள்.உனக்காக உழைக்க நீ அவர்களை தேர்ந்தெடுத்தால் அவர்கள் உன்னை அவர்களுக்கு அடிமையாக்க, நீ உன்னையே முதலாளிகளிடம் விற்க அவர்களும் ஊதியம் பெறுகிறார்கள் .முதலில் உனக்கு சொந்தமானதை உனக்கு சொந்தமில்லை என நம்பச்செய்தார்கள் பின்னர் அவர்களிடம் உன்னை கையேந்த செய்தார்கள் உன் மொழியை மறக்க செய்தார்கள் இன்னும் சில நாட்களில் உனக்கு அடையாளமே இல்லை நாங்கள் தான் இனி உன் அடையாளம் என்று குறி இதை ஏற்கச்சொல்வார்கள். அதற்காக அவர்கள் கையாளும் யுக்திகளில் ஒன்று தான் மக்களில் இருந்தே அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் அவர்களின் அதிகார எல்லைக்கு உட்பட்ட ஒரு சர்வாதிகாரிகளாக செய்யப்படுகிறார்கள் இவர்களின் வாயிலாக அவர்கள் செய்ய நினைக்கும் அத்தனையையும் செய்ய விளைகிறார்கள் மக்களிடம் இருந்து சுரண்டியதின் தரகை தான் ஊதியமாக அந்த அதிகாரிகளுக்கு வழங்குகிறார்கள். மக்களுள் ஒருவரான அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேள்வியெழுப்பினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அது சொல்வதை நாங்கள் செய்கிறோம்.அது எப்படி தங்களுக்கு எதிரான ஒரு அரசாங்கத்தை மக்களே மக்களாட்சியில் தேர்ந்தெடுப்பார்கள் ? என்று ஒரு எதிர் கேள்வியை முன்வைப்பார்கள்.இதற்கான பதில் நம்மிடம் உண்டா ?.இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான் ஆனால் மக்களுக்கான ஆட்சி இல்லை என்பதை மட்டும் தான் நம்மால் பதிலாக வழங்க முடியும்.

சுவாரஸ்யமான தருணத்தில், இந்த  விவகாரத்தில் மறைந்திருக்கும் மற்றுமொரு  உண்மையை நான் உங்கள் முன்னாள் இப்பொழுது கட்டவிழ்க்க  போகிறேன் அது மக்களை பற்றியது நான் உட்பட நாம் அனைவரும் சந்தர்ப்பம் கிடைக்கையில் சர்வாதிகாரிகளாக ஆக முயல்கிறோம் என்பதே உண்மை.நாம் செய்யும் எந்த ஒரு செயலும் நம் நலனை மட்டுமே பெரும்பான்மையாக சார்ந்து இருக்கிறது.இதன் வெளிப்பாடு தான் நாம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பதிலும் ஓங்கி நிற்கிறது .

இப்பொழுது ஒரே ஒரு கேள்வியை மட்டும் உங்களின் முன்னிலையில் நான் முன்வைக்க விரும்புகிறேன் அது என்னவென்றால் மக்களாட்சியின் சர்வாதிகாரி யார் ? இந்த கேள்விக்கான பதிலை நீங்கள் தேர்வு செய்ய உங்களுக்கு துப்பும் வழங்குகிறேன் நான் கீழே குறிப்பிட்டு இருக்கும்மூன்றில் ஒன்று தான் இதற்கான விடை

1 ) மக்கள்
2 ) ஆட்சியாளர்கள்
3 ) அதிகாரிகள்

இறுதி விடையை நீங்கள் தான் உங்கள் மனசாட்சிக்கு உட்பட்டு தேர்வு செய்ய வேண்டும்.


                                                                                           - இமானுவேல்.ச
                                                                                          

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...