தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

17-02-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

17-02-2018 நேரம் பிற்பகல் 3:35 மணி அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை எப்படி இருக்கலாம் என்பது குறித்து பார்ப்பதற்கு முன் இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 15-02-2018 ஆம் தேதி அன்று வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

  • தற்போது நினோ 3.4  ( Nino 3.4 Region ) பகுதியில் கடல் பரப்பு வெப்பநிலையானது (Sea Surface Temperature) அதன் இயல்பான அளவில் இருந்து 0.9 ° செல்ஸியஸ் குறைவாக உள்ளது.
  • மேடன் - ஜூலியின் அலைவு (MJO) ஆனது தற்பொழுது அதன் 7 வது கட்டத்தில் (Phase) அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அது 7வது கட்டத்திலேயே (Phase) ஒன்றுக்கும் குறைவான வீச்சு அளவுடன் தொடர வாய்ப்புகள் உள்ளது.
  • இந்திய பெருங்கடல் இருமுனையானது  (Indian Ocean Dipole ) ஆனது தற்பொழுது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு.
நமது பக்கத்தில் புதிதாக இணைந்திருக்கும் நண்பர்களுக்காக சில அடிப்படை தகவல்களை உள்ளடக்கிய இணைப்புகளை கீழே இணைக்கிறேன்.

எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby

எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL

இந்திய பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய  - https://goo.gl/XmfuBTஇந்த ஆண்டு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் - மே  மாதங்களில் எல் - நினோ தெற்கு அலைவு  (El - nino Southern Oscillation ) ஆனது தனது நடுநிலையான கட்டத்துக்கு (Neutral Phase ) வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது அதற்கான சாத்தியக் கூறுகள் 55% உள்ளது அது அவ்வாறாக அதன் நடுநிலையான கட்டத்தை எட்டும் பட்சத்தில் நிகழும் 2018 ஆண்டு இயல்பான அளவு தென்மேற்கு பருவமழைக்கும்  வாய்ப்புகள் உள்ளது.சரியான தருணத்தில் இது தொடர்பான விரிவான தகவல்களை பதிவிடுகிறேன்.மேலும் நிகழும் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஏப்ரல் , மே  மற்றும் ஜூன் மாதங்களில் அதன் இயல்பான அளவை விட வெப்பம் அதிகரித்து  இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது.17-02-2018 அடுத்து வரக்கூடிய வாரத்திலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவ வாய்ப்புகள் உள்ளது.இன்று தற்பொழுது நிலவி வரும் வானிலையே அடுத்து வரக்கூடிய வாரத்திலும் தமிழகத்தின் அநேக இடங்களில் தொடரலாம்.வரக்கூடிய நாட்களில் திருப்பூர்  , ஈரோடு , திருவள்ளூர்  , மதுரை  ,கரூர் ,நாமக்கல் மாவட்டங்களின் அநேக இடங்களில்  பகல் நேரத்தில் குறிப்பாக காலை 11:00 மணியிலிருந்து மாலை 4:00 மணி வரை உள்ள நேரத்தில் 35° முதல் 38° செல்சியஸ் வரையில்  வெப்பநிலை நிலவ தொடங்கலாம் . விருதுநகர்  , நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை அதிகரிப்பு தொடரும்.வரக்கூடிய நாட்களில் அதிகாலை நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் பனிப்பொழிவு தொடரும் கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டத்திலும் அதிகாலை நேரத்தில் ஆங்காங்கே பனிப்பொழிவு உணரப்படலாம்.அடுத்து வரக்கூடிய நாட்களில் கொடைக்கானல் மற்றும் வால்பாறை போன்ற பகுதிகளிலும் 1° முதல் 2° செல்சியஸ் வரையில் பகல் நேரத்தில் வெப்பநிலை உயர்வுக்கு வாய்ப்புகள் உள்ளது.

தற்போதைய இந்த வானிலையில் ஏதேனும் புதிய மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...