தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பெரு நீல இரத்த நிலவு (Super Blue Blood Moon ) என்றால் என்ன ?

காரைக்கால் நகரில் பதிவான பெரு நீல இரத்த நிலவு
நீல நிலவு என்றால் என்ன  ?

ஒவ்வொரு ஆண்டும் மாதத்திற்கு ஒரு முழு நிலவென மொத்தம் பன்னிரண்டு  மாதத்துக்கும் பன்னிரண்டு முழு நிலவு நாட்கள் (பவுர்ணமி ) வருவது இயல்பான ஒன்று அவ்வாறு அல்லாமல் ஒரு ஆண்டில் கூடுதலாக வரும் முழுநிலவை அதாவது ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழு நிலவை நீல நிலவு என வழங்குகிறார்கள் அல்லது ஒரு  வானியல் பருவத்தில் வரக்கூடிய நான்று முழு நிலவு நாட்களில் மூன்றாவது முழு நிலவு நாளில் தொன்றும்  நிலவை தான் நீல நிலவு என அழைக்கிறார்கள்.இந்த நாளில் நிலவு நீல நிறத்தில் இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. கிறிஸ்துவின் காலத்துக்கு பிறகு கிறிஸ்து உயிர்த்த மாதத்திற்கு முன்னதாக வரும் முழுநிலவை (belewe moon ) என்று கிருஸ்துவ மத குருமார்கள் வழங்கி வந்தாக தெரிகிறது.belewe moon என்றால் துரோகி நிலவு என்று அர்த்தம் அதுவே கால போக்கில் மருகி நீல நிலவு ( Blue Moon ) என மக்களால் வழங்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. மற்றபடி நீல நிறத்தில் நிலவு தோன்றுவது என்பது மிகவும் அரிதான ஒன்று.1883 ஆம் ஆண்டு ஒரு எரிமலை வெடிப்பின் பொழுது ஏற்பட்ட தூசியின் காரணமாக சூரிய ஒளி மறைக்கப்பட்டு நிலவு நீலம் மற்றும் பச்சை நிறங்களில் உலகம் முழுவதும் காணப்பட்டதாக சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அது எப்படி ஒரு ஆண்டில் 13 வது முழு நிலவு நாள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் தோன்றுகிறது ?

அது எப்படி நான்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூடுதலாக இணைத்துக்கொள்ளப்பட்டு வருடத்திற்கு 366 நாட்களாக கணக்கிடப்படுகிறதோ அப்படித் தான் இதுவும் அதாவது பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள்  5 மணி நேரம் 49 நிமிடம் 12 நொடிகள் பிடிக்கும்.ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள் என நாம் கணக்கிட்டு வருகிறோம் ஒவ்வொரு ஆண்டும் மீதம் இருக்கும் அந்த கூடுதலான நேரத்தை ஒன்று சேர்த்து நான்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு கூடுதல் நாளென கணக்கிட்டு கொள்கிறோம்.அதே போல நிலவு பூமியை சுற்றிவர திட்டத்திட்ட 27 நாட்கள் 8 மணி நேரமாகிறது ஆனால் நிலவு பூமியை சுற்றிவரும் பாதை ஒரு வட்ட வடிவிலான பாதை கிடையாது அது ஒரு நீள்வட்ட பாதையென  (Elliptical Path ) எடுத்துக்கொண்டால் கூட அதன் மையப்பகுதியில் இடம்பெற்று இருப்பது பூமி இல்லை அதனால் இந்த நேரம் மாற்றத்துக்கு உரியது சராசரியாக நிலவு பூமியை ஒரு முறை சுற்றி வர திட்டத்திட்ட 29 நாட்கள் 13 மணி நேரமாகிறது.நிலவின் நீள்வட்ட பாதையை விளக்கும் படத்தை இந்த பதிவுடன் இணைக்கிறேன்.இவ்வாறு நிலவு பூமியை முழுமையாக சுற்றிவருகையில் ஒரு மாதத்தில் சராசரியாக மீதம் 11 மணி நேரம் கிடைக்கிறது இந்த 11 மணிநேரம் ஒன்றிணைந்து 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு கூடுதல் முழு நிலவு நாள் தோன்றுகிறது சாரிசாரியாக 2.72 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு கூடுதலான முழு நிலவு நாள் தோன்றுகிறது.31-01-2018 ஆம் நாள் இன்று முழு நீல நிலவு இதற்கு முன்பு இதைப்போன்ற தொரு முழு நிலவு நாள் 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தோன்றியது 02-07-2015 மற்றும் 31-07-2015 ஆகிய நாட்களில் முழு நிலவு தோன்றியது.

நிலவு பூமியை சுற்றிவரும் நீள்வட்டப் பாதை


சிகப்பு (அ) இரத்த நிலவு என்றால் என்ன ? சிகப்பு நிறத்தில் ஏன் நிலவு தென்படுகிறது ?

சூரியன் மறையும் பொழுது வானில் எப்படி மஞ்சள் , சிகப்பு நிறங்கள் தென்படுகின்றனவோ அதைப்போல தான் இதுவும் அதாவது ஒளி சிதறல் (Scattering ) தான் இதற்கும் காரணம்.நிலவுக்கு ஒளி கிடையாது சூரியனின் ஒளியையே அது பிரதிபலிக்கிறது முழு சந்திர கிரகணத்தின் பொழுது பூமி சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே வர ஒளி சிதறல் ஏற்பட்டு சிகப்பு ஒளி பூமியின் காற்று மண்டலத்தை ஊடுருவி நிலவின் மீது படுகிறது அதனாலேயே பூமியில் இருந்து பார்க்கையில் நிலவு சிகப்பு நிறத்தில் தென்படுகிறது.இவ்வாறு சிகப்பு நிறத்தில் நிலவு தென்படுவதாலேயே இதனை சிகப்பு (அ) இரத்த நிலவு என்று அழைக்கிறார்கள்.

பெருமுழு நிலவு (Super Moon ) என்றால் என்ன ?

இது உங்களுக்கே தெரிந்து இருக்கும் பூமிக்கு மிக நெருக்கத்தில் நிலவு வரும்பொழுது அது இயல்பை விட அதிக ஒளியுடனும்  பெரியதாகவும் காணப்படும். நிலவு பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது அதே போல பூமியும் சூரியனை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.நிலவின் நீள் வட்டப்பாதையில் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் குறைவாக இருக்கும் பகுதியை அண்மைநிலை (Perigee ) என்றும் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் அதிகமாக இருக்கும் பகுதியை  தூரநிலை (Apogee) எனவும் வழங்குகிறோம்.பூமிக்கும் நிலவுக்குமான சராசரி அண்மைநிலை தூரம் 3,64,397 கிலோ மீட்டர்கள் ஆகும்.நிலவு போமிக்கு அருகாமையில் இருக்கும் தருணத்தில் முழு நிலவு கூடிவந்தால் அது பெருமுழு நிலவு என வழங்கப்படுகிறது.

31-01-2018 ஆகிய இன்று இந்த மூன்று நிகழ்வுகளும் ஒரு சேர அரேங்கேறுவது சிறப்பு.தற்போது இது இணைய பயனீட்டாளர்களாலும் ,ஊடகவியலாளர் களாலும் , பொதுமக்களாலும் பெரு நீல இரத்த நிலவு (Super Blue Blood Moon ) என அழைக்கப்பட்டு வருகிறது.


பெரு நீல சிகப்பு நிலவு - Super Blue Blood Moon


ஹைக்கூ  :

தனக்கு வரும் ஒளியை பூமி இடையே வந்து தடுப்பதினால்
நிலவு பூமியிடம் புரட்சி பேசுகிறதோ !

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...