11-03-2018 நேரம் காலை 10:30 மணி நாம் எதிர்பார்த்ததை விட முன்பாகவே
இலங்கைக்கு தெற்கே இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
இன்று காலை உருவானது இது இன்று மேலும் வலு பெற்று ஒரு வலுவான குறைந்த
காற்றழுத்த தாழ்வு பகுதி (Well marked Low Pressure Area ) என்கிற நிலையை
அடையலாம் 12-03-2018 (நாளை) அல்லது 13-03-2018 (நாளை மறுநாள்) நான் முன்பு
பதிவிட்டு இருந்தது போல மாலத்தீவு அருகே இது ஒரு காற்றழுத்த தாழ்வு
மண்டலமாக உருவெடுக்கலாம் பின்னர் அது வட - வட மேற்கு திசையில் அரபிக்கடல்
பகுதியை நோக்கி நகர முற்படலாம். இதனால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்புகளை
தவிர வேறு எந்த விதமான பாதிப்புகளும் வாய்ப்புகள் கிடையாது மேலும் தற்போதைய இந்த சூழலில் காற்றழுத்த தாழ்வு
மண்டலம் தமிழகத்தை நெருங்க துளியும் வாய்ப்புகள் இல்லை.
மீனவர்களுக்காக எச்சரிக்கை :
அடுத்த சில நாட்களுக்கு குறிப்பாக செவ்வாய்க்கிழமை வரை வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களை சார்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்கையில் கவனமாக இருப்பது நல்லது குறிப்பாக தென்தமிழகத்தின் கடலோர பகுதிகளை சார்ந்த மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்குள் செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது.தென் கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் அந்த குறைந்த காற்றழுத்த தழுவு நிலையானது மேலும் வலுப்பெற வாய்ப்புகள் இருப்பதால் ஒரு சில இடங்களில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கலாம்.மன்னர் வளைகுடாவை ஒட்டியுள்ள கடலோர பகுதிகளில் வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 35 முதல் 45 கி.மீ வரை காற்று வீசக்கூடும்.
நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இன்று தமிழகத்தில் குறிப்பிட்டு சொல்லும்படியான மழைக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை.நாளை தமிழக தமிழக தென் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உண்டு அதன் பிறகான மழைக்கான வாய்ப்புகள் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகளை பொறுத்ததே.தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளது என்பது தொடர்பாக இன்று பிற்பகல் அல்லது மாலை வேளையில் பதிவிடுகிறேன்.

0 comments:
கருத்துரையிடுக