11-03-2018 நேரம் அதிகாலை 2:40 மணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில்
அடுத்து வரக்கூடிய சில நாட்களில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதை
பார்ப்பதற்கு முன்பு 08-03-2018 அன்று இந்திய வானிலை ஆய்வு மையும்
வெளியிட்டு இருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சில முக்கிய
அம்சங்கள் குறித்து பார்க்கலாம் (Large Scale Features).
தற்பொழுது இலங்கைக்கு தெற்கே இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தத்தின் அகடு (Trough) ஒன்று உள்ளது.இதன் காரணமாக இன்று காலை முதலே இலங்கையின் தென்கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புகள் உண்டு. இதே வானிலையே தொடரும் பட்சத்தில் இன்று நள்ளிரவு அல்லது 12-03-2018 (நாளை) அன்று இலங்கைக்கு தென்மேற்கு திசையில் மாலத்தீவுக்கு கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் நான் இதற்கு முந்தைய பதிவில் பதிவிட்டு இருந்தது போலவே அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது இலங்கைக்கு தென்மேற்கு திசையில் இருந்து காற்றினை இழுக்க முற்படுவதால் மன்னார் வளைகுடாவை ஒட்டியுள்ள தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் உருவாகலாம் நாகை உள்ளிட்ட ஒரு சில வட கடலோர மாவட்டங்களும் இதனால் பயன்பெறலாம் ஆனால் வடகடலோர மாவட்டங்களின் மழைக்கான வாய்ப்புகளை 100% உறுதித்தன்மையுடன் இப்பொழுதே கூறுவது கடினம்.பின்னர் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலு பெற்று மேற்கு - வட மேற்கு திசையில் நகர முற்படலாம் இதனால் தென் தமிழகத்தில் குமரி , நெல்லை , தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உருவாகும்.தற்போதைய சூழலில் அது மேலும் வலு பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலை அடைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது அவ்வாறு நடந்தால் அதன் நகர்வுகளுக்கு ஏற்ப மேற்கு மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பிறபகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புகள் உருவாகும் ஆனால் அனைத்து வாய்ப்புகளும் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகளை பொறுத்து மாற்றங்களுக்கு உரியதே ஆகையால் இதைப்போன்ற தருணங்களில் மாதிரிகளை 100% நம்பி இப்படி தான் நடக்கப் போகிறது என்று உறுதியாக கூறுவது ஏற்புடையது அல்ல அதனால் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகளை பொறுத்து மழைக்கான வாய்ப்புகளை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.
11-03-2018 தமிழகத்தில் இன்றும் வறண்ட வானிலையே தொடரும் கடலோர மாவட்டங்களில் காலை நேரத்தில் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படலாம் மழைக்கான வாய்ப்புகள் இல்லை திருச்சி , தஞ்சை ,திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் காலை நேரத்தில் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படலாம் இன்றும் ஈரோடு உட்பட ஈரோடு மாவட்டத்தின் சில இடங்களில் 100° பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பகல் நேரத்தில் பதிவாகலாம் கோவை , நாமக்கல் ,சேலம் ,மதுரை , நெல்லை ,விருதுநகர் , கரூர் , திருப்பூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும் அநேக இடங்களில் 93° முதல் 98° பாரன்ஹீட் வரை பகல் நேரத்தில் வெப்பம் பதிவாகலாம்.
11-03-2018 புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் காலை நேரத்தில் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படும் பகல் நேரத்தில் அதிகபட்சமாக 30° முதல் 32° செல்சியஸ் வரையில் வெப்பம் பதிவாகலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்கையில் கவனமாக இருப்பது நல்லது குறிப்பாக தென்தமிழகத்தின் கடலோர பகுதிகளை சார்ந்த மீனவர்கள் கடலுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது.தென் கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் நாளை இரவு அல்லது அதற்கு பிறகு அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற வாய்ப்புகள் உள்ளதால் சில நேரங்களில் தென்தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வரையிலும் காற்று வீசக்கூடும்.
- லா - நினாவுக்கான சூழல்களில் சரிவு ஏற்பட்டு உள்ளது கடந்த இரண்டு வாரங்களாக மத்திய பசிபிக் கடல் பரப்பின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது இது எல் - நினோ தெற்கு அலைவு ஆனது அதன் நடுநிலையான கட்டத்தை எட்டுவதற்கான அறிகுறி.
- மேடன் ஜூலியன் அலைவு (Madden Julian Oscillation) ஆனது அதன் 3 வது கடத்தில்(phase) ஒன்றுக்கும் சற்று அதிகமான வீச்சு(amplitude) அளவை கொண்டுள்ளது அடுத்து வரக்கூடிய சில நாட்களிலும் சற்று பலவீனமான வீச்சு அளவுடன் இது 3வது கட்டத்திலேயே (phase) தொடரலாம்.
- இந்திய பெருங்கடல் இருமுனை (அ ) இருதுருவம் (Indian Ocean Dipole) ஆனது தற்பொழுது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது
- நடு-அட்சரேகை சுழற்சி முறை (Mid-latitude Circulation Pattern) தற்பொழுது அதன் உயர் குறியீட்டு (High Index ) கட்டத்தில் உள்ளது.
தற்பொழுது இலங்கைக்கு தெற்கே இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தத்தின் அகடு (Trough) ஒன்று உள்ளது.இதன் காரணமாக இன்று காலை முதலே இலங்கையின் தென்கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புகள் உண்டு. இதே வானிலையே தொடரும் பட்சத்தில் இன்று நள்ளிரவு அல்லது 12-03-2018 (நாளை) அன்று இலங்கைக்கு தென்மேற்கு திசையில் மாலத்தீவுக்கு கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் நான் இதற்கு முந்தைய பதிவில் பதிவிட்டு இருந்தது போலவே அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது இலங்கைக்கு தென்மேற்கு திசையில் இருந்து காற்றினை இழுக்க முற்படுவதால் மன்னார் வளைகுடாவை ஒட்டியுள்ள தமிழக கடலோர பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் உருவாகலாம் நாகை உள்ளிட்ட ஒரு சில வட கடலோர மாவட்டங்களும் இதனால் பயன்பெறலாம் ஆனால் வடகடலோர மாவட்டங்களின் மழைக்கான வாய்ப்புகளை 100% உறுதித்தன்மையுடன் இப்பொழுதே கூறுவது கடினம்.பின்னர் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலு பெற்று மேற்கு - வட மேற்கு திசையில் நகர முற்படலாம் இதனால் தென் தமிழகத்தில் குமரி , நெல்லை , தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புகள் உருவாகும்.தற்போதைய சூழலில் அது மேலும் வலு பெற்று வட மேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடலை அடைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது அவ்வாறு நடந்தால் அதன் நகர்வுகளுக்கு ஏற்ப மேற்கு மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பிறபகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புகள் உருவாகும் ஆனால் அனைத்து வாய்ப்புகளும் அந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகளை பொறுத்து மாற்றங்களுக்கு உரியதே ஆகையால் இதைப்போன்ற தருணங்களில் மாதிரிகளை 100% நம்பி இப்படி தான் நடக்கப் போகிறது என்று உறுதியாக கூறுவது ஏற்புடையது அல்ல அதனால் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகளை பொறுத்து மழைக்கான வாய்ப்புகளை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.
11-03-2018 தமிழகத்தில் இன்றும் வறண்ட வானிலையே தொடரும் கடலோர மாவட்டங்களில் காலை நேரத்தில் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படலாம் மழைக்கான வாய்ப்புகள் இல்லை திருச்சி , தஞ்சை ,திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் காலை நேரத்தில் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படலாம் இன்றும் ஈரோடு உட்பட ஈரோடு மாவட்டத்தின் சில இடங்களில் 100° பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பகல் நேரத்தில் பதிவாகலாம் கோவை , நாமக்கல் ,சேலம் ,மதுரை , நெல்லை ,விருதுநகர் , கரூர் , திருப்பூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும் அநேக இடங்களில் 93° முதல் 98° பாரன்ஹீட் வரை பகல் நேரத்தில் வெப்பம் பதிவாகலாம்.
11-03-2018 புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் காலை நேரத்தில் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படும் பகல் நேரத்தில் அதிகபட்சமாக 30° முதல் 32° செல்சியஸ் வரையில் வெப்பம் பதிவாகலாம்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்கையில் கவனமாக இருப்பது நல்லது குறிப்பாக தென்தமிழகத்தின் கடலோர பகுதிகளை சார்ந்த மீனவர்கள் கடலுக்கு அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது.தென் கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் நாளை இரவு அல்லது அதற்கு பிறகு அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற வாய்ப்புகள் உள்ளதால் சில நேரங்களில் தென்தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வரையிலும் காற்று வீசக்கூடும்.
0 comments:
கருத்துரையிடுக