தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2018 தென்மேற்கு பருவமழைக்கு முன்பாக எல்-நினோ தெற்கு அலைவு (El-nino Southern Oscillation ) ஆனது லா - நினாவில் இருந்து நடுநிலையான (Neutral Phase) கட்டத்தை அடையலாம்

அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டலவியல் நிர்வாகமானது (NOAA ) எல் - நினோ தெற்கு அலைவின் ( El-nino Southern Oscillation ) தற்போதைய நிலை குறித்து இந்த மாதத்திற்கான அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது அதன்படி தற்பொழுது பசிபிக் கடல் பரப்பின் நினோ 3.4 (Nino 3.4 Region) பகுதி உட்பட பல பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும் கடல் பரப்பின் பல இடங்களில் அதன் சராசரி இயல்பு அளவை திட்டத்திட்ட எட்டி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது நினோ 1+2 பகுதியில் திட்டத்திட்ட 0.2° C அதன் இயல்பான அளவை விட அதிகரித்து உள்ளது இதே நிலை தொடரும் பட்சத்தில் கூடிய விரைவில் எல் - நினோ தெற்கு அலைவு ஆனது லா - நினா கட்டத்தில் இருந்து அதன் நடுநிலையான கட்டத்தை எட்டிவிடக்கூடும் . அதே போல இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட இது தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன அந்த அறிக்கையில் இடம்பெற்று இருக்கும் தகவல்களின் படி கடந்த இரண்டு வாரங்களாக பசிபிக் கடல் பரப்பின் வெப்ப நிலை உயர்ந்து வருவதாகவும் இதனால் லா -நினாவுக்கான சாதகமான சூழல்கள் சரிந்து வருவதாகவும் இதன் இந்த நிலை ENSO நடுநிலையான கட்டத்துக்கான அறிகுறி எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.பசிபிக் கடல் பரப்பின் இந்த வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே நமது பக்கத்தில் நான் பதிவிட்டு இருந்தேன்.

பொதுவாக கடல்பரப்பின் வெப்பநிலையானது அதன் இயல்பான அளவை விட 0.5° C க்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் அது லா - நினா வுக்கான சூழலாக கருதப்படுகிறது.2018 மார்ச் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டு இருக்கும் இந்த அறிக்கையின் படி பகுதிகளின் அடிப்படையிலான வெப்பநிலை வேறுபாடுகள்.

நினோ 1+2 பகுதியில் - +0.2° C
நினோ 3 பகுதியில் - - 0.6° C
நினோ 3.4 பகுதியில் - - 0.8° C
நினோ 4 பகுதியில் - - 0.2° Cநான் மேற்குறிப்பிட்ட இந்த பகுதிகளை அடையாளம் காணும் வகையில் ஒரு படத்தையும் இந்த பதிவுடன் இனைத்துள்ளேன்.
நினோ 3.4 பகுதியில் ஏற்படும் வெப்பநிலை மாறுபாடு இந்திய பருவமழையில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை .எல்நினோ தெற்கு அலைவு ஆனது அதன் நடுநிலையான கட்டத்தை எட்டினால் இயல்பான அளவிலான தென்மேற்கு பருவமழைக்கு வாய்ப்புகள் உண்டு.பொதுவாக கடல் பரப்பு வெப்பநிலையானது அதன் இயல்பான அளவை விட -0.5°C முதல் 0.5°C வரை வேறுபட்டு இருந்தால் அது நடுநிலையான கட்டமாக கருதப்படுகிறது ஆனாலும் கடல் பரப்பு வெப்பநிலையானது அதிகரிக்க அதிகரிக்க அது பருவமழையின் அளவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் .தற்போதைய இந்த சூழல்கள் தொடரும் பட்சத்தில் தென் மேற்கு பருவமழைக்கு முன்னதாக எல் -நினோ தெற்கு அலைவு ஆனது அதன் நடுநிலையான கட்டத்தை எட்டிவிடும்.
இந்த பக்கத்தில் புதிதாக இணைந்தவர்களுக்காக சில அடிப்படை தகவல்களுக்கான இணைப்புகளையும் இங்கே இணைக்கிறேன்.


எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby

எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...