தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2018 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை ஆனது எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் ?

நிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை அளவு தொடர்பாக சர்வேதேச தனியார் வானிலை முன் அறிவிப்பு தளங்கள் பலவும் தங்களது கணிப்புகளை முன்கூட்டியே வழங்கிவிட்ட நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையமும் சில தினங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது அதில் இயல்பான அளவு பருவமழையை இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம் என்பதை போன்ற தங்கவல்கள் இடம்பெற்று இருந்தன.

2018 ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை எப்பொழுது தொடங்கலாம் மற்றும் மழையின் அளவு எப்படி இருக்கலாம் என்பது தொடர்பான (Puducherry Weather ) நமது பக்கத்தின் கணிப்புகள் குறித்து பார்ப்போம்.

எல்நினோ தெற்கு அலைவு (el-nino Southern Oscillation) ஆனது  லாநினாவுக்கான கட்டத்தில் இருந்த சற்று முன்பாகவே தனது நடுநிலையான கட்டத்தை எட்டிவிடலாம் என்று நாம் எதிர்பார்த்து வந்த நிலையில் இன்னமும் பூமத்திய  ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடலின் அநேக இடங்களிலும் கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட குறைவாகவே உள்ளது இந்திய பருவமழையின் அளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான அதாவது நினோ 3.4 பகுதியின்  கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட தற்பொழுது 0.2° C குறைவாகவே  உள்ளது ஆனாலும் இது முன்பை விட மெல்ல மெல்ல அதிகரித்து கொண்டே வ்ருகிறது என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது அதே போல நினோ 4 பகுதியை தவிர நினோ 3 , நினோ 3.4 மற்றும் நினோ 1+2 என பிற பகுதிகள் அனைத்திலும் கடல் பரப்பு வெப்பநிலையானது தொடர்ந்து குறைவாகவே இருந்து வருகிறது இந்த பகுதிகள் தொடர்பாக நான் ஏற்கனவே நமது பக்கத்தில் பல முறை பதிவிட்டு உள்ளேன் புதிதாக நமது பக்கத்தில் இணைந்தவர்களும் சுலபமான வகையில் அதனை இனம்காணும் வகையில் இந்த பதிவுடனும் அந்த பகுதிகள் தொடர்பான ஒரு படத்தை இணைக்கிறேன்.கடந்த 23-04-2018 ஆம் தேதியன்று NOAA வால் வெளியிடப்பட்ட அறிக்கையின்  படி நிகழும் ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாத காலகட்டத்தில் எல்நினோ தெற்கு அலைவு ஆனது அதனுடைய நடுநிலையான கட்டத்தை அடைய 50% வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது அவ்வாறு கேரளாவில்  தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே  அது அதன் நடுநிலையான கட்டத்தை அடைந்து விட்டாலும் கூட இயல்பான அளவிலான தென் மேற்கு பருவமழைக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby
எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfLஇரண்டாவதாக நாம் முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடிய  விஷயங்களில் ஒன்று அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிக்கு அருகே உள்ள இந்திய பெருங்கடலின் பூமத்திய ரேகைக்கு அருகே ஏற்படக்கூடிய வெப்பநிலை வேறுபாடுகள் அதாவது கிழக்கு மற்றும் மேற்கு இந்திய பெருங்கடலின் கடல் பரப்பில் ஏற்படக்கூடிய வெப்பநிலை வேறுபாடுகள் இதனை இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) என்று வழங்குவார்கள் பொதுவாக இந்திய பெருங்கடல் இருதுருவம் (IOD) ஆனது அதன் நேர்மறையான கட்டத்தில் அதாவது Positive Phase இல் இருந்தால் அது தென்மேற்கு பருவமழைக்கு சாதகமான சூழலாக கருதப்படுகிறது இந்த கட்டத்தில் பூமத்திய ரேகைக்கு அருகே இந்திய பெருங்கடல் மேற்கு பகுதியின் கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட 0.5 ° C அல்லது அதற்கு அதிகமாக இருக்கும் இதன் காரணமாக மேற்கு திசை காற்று வலு பெரும்.இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT

இந்திய பெருங்கடல் இருதுருவமானது (Indian Ocean Dipole) தற்பொழுது அதன் நடுநிலையான (Neutral Phase) கட்டத்தில் உள்ளது பருவமழை தொடங்கிய பின்னர் ஜூலை மாத்திற்கு பிறகு இந்திய பெருங்கடல் இருதுருவமானது (Indian Ocean Dipole) ஆகஸ்ட் அல்லது அக்டொபர் மாதத்தில் அதன் எதிர்மறையான கட்டத்தை (Negative Phase) அடைய வாய்ப்பு இருப்பதாக சில மாதிரிகள் தெரிவித்து வருகின்றன அதன் இந்த நிலை குறித்து சில நாட்கள் கடந்த பிறகு தான் உறுதியாக தெரியவரும்.

மூன்றாவதாக நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது மேடன் ஜூலியன் அலைவு  (MJO).மேடன் ஜூலியன் அலைவு (Madden Julian Oscillation ) தொடர்பாக நாம் ஏற்கனவே பல முறை நமது பக்கத்தில் விவாதித்து இருக்கிறோம் சாதகமான சூழல்கள் நிலவி வருகையில் அது அதனுடைய இரண்டாவது கட்டத்துக்கு வருகையில் கண்டிப்பாக பருவமழையின் அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம்.MJO வின் நகர்வுகள் குறித்து நான் அவ்வப்பொழுது நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.

தென்மேற்கு பருவமழை எப்பொழுது தொடங்கலாம் ?
நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அந்தமானுக்கு அருகே தற்பொழுது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது மேற்கு மியன்மர் அருகே தற்பொழுது நிலவி வரும் உயர் அழுத்தத்தின் காரணமாக இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மேலும் வலு பெற வாய்ப்பு குறைவே அதே சமயம் அதன் காரணமாகவும் அது வலுவிழக்க முற்படும் பொழுதும் மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் மழை பொழிவு அதிகரிக்கலாம் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை முற்றிலும் வலுவிழந்த பிறகும் அந்தமான் நிகோபார்  மற்றும் அதன் அருகே உள்ள வங்கக்கடல் பகுதியில் அவ்வப்பொழுது மழை மேகங்கள் திரள தொடங்கலாம் இது பருவமழை தொடங்குவதற்கான முற்கால அறிகுறி தான் இதே சூழல்கள் தொடர்ந்தாள் அந்தமான் நிகோபார் தீவுகளில் 10-05-2018 முதல் 20-05-2018 வரையிலான நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப் படலாம் குறிப்பாக 13-05-2018 ஆம் தேதி முதல் 18-05-2018 ஆம் தேதி வரை உள்ள நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் அந்தமான் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட  அதிக வாய்ப்புகள் உள்ளது கேரளாவை பொறுத்தவரையில் அந்தமானில் பருவமழை தொடங்கிய அடுத்த 10 முதல் 15 நாட்களுக்கு பின்னர்  கேரளாவில் பருவமழை தொடங்கலாம் அதன் அடிப்படையில் பார்க்கப்போனால் கேரளாவில் 26-05-2018 முதல் 01-06-2018 ஆம் தேதி வரை உள்ள நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்படலாம் அதேபோல் 10-06-2018 ஆம் தேதிக்கு பிறகு இந்திய தெற்கு தீபகற்ப பகுதிகள்  (Southern Peninsular Region ) முழுவதிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம்.

மாநிலம் /பகுதி   வாரியாக    தென்மேற்கு பருவமழை எப்பொழுது தொடங்கலாம்

அந்தமான் நிக்கோபார்  -------------->  13-04-2018 முதல் 18-04-2018

கேரளா -------------->   26-05-2018 முதல் 01-06-2018


தென்மேற்கு பருவமழை எப்பொழுது தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்று என்னுடைய கணிப்பை கூறி விட்டேன் மழையின் அளவு எப்படி இருக்கலாம் என்று கூறவில்லையே இதோ இப்பொழுது கூறுகிறேன் தென்மேற்கு பருவமழைக்கு சாதகமான சூழல்களே தற்பொழுது நிலவி வந்தாலும் ஜூலை மாத இறுதி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் மாற்றங்கள் தொடர்பான விஷயங்களையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் மேலும் எனக்கு பிடித்த முறையில் ஒன்று ஒப்பீடு முறை இந்த ஒப்பீடு முறையை பயன்படுத்தி தான் வெப்பநிலை வேறுபாடுகளை நமது பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன் அதே போல தற்போதைய சூழல்களையும் கடந்த கால நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பார்க்கையில் நிகழும் 2018 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 300 மி.மீ முதல் 330 மி.மீ அளவு வரை மழை பதிவாகலாம் இது கிட்டத்தட்ட இயல்பான அளவு தான்.மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் யாவும் தற்போது நிலவி வரும் சூழல்களை உள்ளடிக்கிய ஒரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...