தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு அதே சமயம் 06-06-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மேற்கு மாநிலங்களில் தீவிரமடைய தொடங்கலாம் இதனால் அரபிக்கடலை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களான கேரளா முதல் மஹாராஷ்டிரா வரை உள்ள கடலோர மாவட்டங்களின்  அநேக பகுதிகளும்  பயனடையலாம்.குறிப்பாக 07-06-2018 ஆம் தேதி ஆகிய நாளை மறுநாள் முதல் குமரிக்கடல் ,அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் குறிப்பாக குமரி மாவட்டம் அருகே உள்ள கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ முதல் 65 கி.மீ வரை காற்று வீசக்கூடும் அதே போல தமிழக வட கடலோர மற்றும் தென்கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் அப்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும்.அடுத்து வரக்கூடிய நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்ப்பது நல்லது இது தொடர்பான எச்சரிக்கைகள் வானிலை ஆய்வு மையத்தால் இன்று அல்லது நாளை பிறப்பிக்கப்படலாம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சார்ந்த மீனவர்கள் அதன்படி நடப்பது நல்லது.மேலும் 07-06-2018 ஆகிய நாளை மறுநாள் முதல் தமிழக உள் மாவட்டங்களிலும் வட கடலோர மற்றும் தென் கடலோர மாவட்டங்களிலும் மேற்கு திசை காற்றின் வீரியம் அதிகரிக்கக்கூடும் இதனால் மேற்கு திசை காற்றின் வேகமும் அதிகரிக்கலாம் அதே சமயம் அடுத்து வரக்கூடிய நாட்களில் அதாவது 07-06-2018 முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலையானது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான தகவல்களை கீழே வழங்குகிறேன்.

மேலும் நான் கடந்த பதிவில் தெரிவித்து இருந்தது போல 08-06-2018 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு கிட்டத்தட்ட 08-06-2018 ஆம் தேதி வாக்கில் இன்று எடுத்துக்கொள்வோம் வட வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு மாதிரிகளின் தகவல்களும் தெரிவிகின்றன மேலும் அது வங்கதேச கரையை ஒட்டி நகரலாம் இதன் காரணமாகவும் தமிழக வட கடலோர மாவட்டங்களில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களிலும் பகல் நேர வெப்பநிலை அதிகரித்து இருக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது இந்த தருணத்தில் நான் கடந்த ஆண்டு நடந்த ஒரு நிகழ்வை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் கடந்த ஆண்டு 01-06-2017 ஆம் தேதி அன்று காரைக்காலில் அதிகபட்சமாக 42.4° செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது பதிவேடுகளில் அடிப்படையில் பார்க்கப்போனால் இது வரை காரைக்கால் வரலாற்றிலேயே ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை அது தான் நான் அப்பொழுது சென்னையில் இருந்தேன் இதை எதற்கு நான் இங்கே பதிவிட விரும்பினேன் என்றால் ஜூன் மாதத்தில் காரைக்காலில் அவ்வளவு அதிகமான வெப்பம் பகல் நேரத்தில் பதிவாகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.ஆகையால் இயற்கையை பொறுத்தவரையில் இவைகளெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று எதுவுமே கிடையாது வாய்ப்பு குறைவு என்று மட்டும் தான் நம்மால் கூற முடியும்.

தற்போதைய இந்த சூழல்களே அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தொடரும் பட்சத்தில் 08-06-2018  மற்றும் 09-06-2018 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்களின்  அநேக இடங்களிலும் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் 2 ° முதல் 3° செல்சியஸ் வரையில் பகல் நேர வெப்பநிலையானது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான தகவல்களை அடுத்த வரக்கூடிய நாட்களில் உறுதி செய்கிறேன்.

07-06-2018 அல்லது 08-06-2018 ஆம் தேதிகளில் அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை பதிவிடுகிறேன்.இன்றைய மழைக்கான வாய்ப்புகள் தொடர்பாக பிற்பகலில் பதிவிடுகிறேன்.

மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்போதைய வானிலை சூழல்களை உள்ளடக்கிய ஓரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...