தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

22-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

22-06-2018 நேரம் பிற்பகல் 1:45 மணி மேடன் -ஜூலியன் அலைவு ஆனது தற்பொழுது அதன் ஒன்றாம் கட்டத்தில் உள்ளது இது 23-06-2018 ஆகிய நாளை மாலை அல்லது 24-06-2018 ஆகிய நாளை மறுநாள் அதன் இரண்டாவது கட்டத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் காற்றுமண்டல நிர்வாக அறிக்கைகளும் இந்த தகவல்களை உறுதிப்படுத்துகின்றன.மேலும் மேடன் -ஜூலியன் அலைவின் தாக்கத்தால் கிழக்கு இந்திய பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக அரபிக்கடல் பகுதியில் இருந்து வீசும் தென்-மேற்கு திசை காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்.இதனால் 24-06-2018 அன்று இரவு அல்லது 25-06-2018 ஆம் தேதிகளில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய தொடங்கலாம் இதனால் மும்பை உட்பட மஹாராஷ்டிரா ,கோவா ,கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பதிவாக தொடங்கலாம்.நான் தொடர்ந்து பதிவிட்டு வருவது போல அடுத்து வரக்கூடிய நாட்களிலும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புகள் உண்டு மேலும் அங்கேயும் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்த்து வருவதாலும் சில அணைகள் முழு கொள்ளளவை எட்டிவிடக்கூடும் என்பதாலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீரின் அளவில் அடுத்து வரக்கூடிய நாட்களில் எந்த வித தொய்வு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.



தமிழகத்தை பொறுத்தவரையில் நான் முன்பு பதிவிட்டு இருந்த நல்ல மழைக்கான வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பான பட்டியலை நினைவு வைத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன் உங்கள் பார்வைக்கு அதனை இங்கே மீண்டும் இணைக்கிறேன்.பொதுவாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மழை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புகள் உண்டு.

#எருமாடு ,#நெல்லியம் , #பண்டலூர் ,#அவலாஞ்சி , #தேவாலா ,#தேவர்சோழா ,#மூக்குருத்தி தேசிய பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள நீலகிரி மாவட்டத்தின் பிற பகுதிகள் (#நீலகிரி மாவட்டம் )
#வால்பாறை , #சின்னக்கல்லாறு (#கோவை மாவட்டம் )
#பெரியார் (தேனி மாவட்டம் )
#கொளச்சல் ,#திற்பரப்பு ,#பேச்சிப்பாறை ,#கீரிப்பாறை ,#மார்த்தாண்டம் (#குமரி மாவட்டம் )
#பொதிகை மலை (#அகஸ்தியர் மலை ) , #பாபநாசம் மற்றும் அதன் அருகே உள்ள மேற்கு பகுதிகள். (#நெல்லை மாவட்டம் )

இம்முறை நெல்லை ,தேனி மற்றும் குமரி மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சி மழை பகுதிகளை விட நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளிலேயே அதிக மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

நேற்று நமது பக்கத்தின் வாயிலாக நண்பர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு அடுத்த 3 மாதங்களில் இந்தியாவில் பருவமழை வலுவிழக்கும் என சில வெளிநாட்டு ஆய்வு மையங்கள் தெரிவித்து உள்ளதே அது தொடர்பான உங்களுடைய கருத்து என்னவென்று என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார் அவருக்கு அங்கேயே பதில் வழங்கியிருந்தேன்.அதேசமயம் இது தொடர்பான விவாதங்கள் அனைவருக்கும் பலன் வழங்கும் என்றும் கருதுகிறேன்.ஆகையால் அது தொடர்பான தகவல்களை இந்த பதிவுடனும் இணைக்கிறேன்.

வெளிநாட்டு வானிலை ஆய்வாளர்கள் சூழல்களுக்கு ஏற்ப அவ்வப்பொழுது இந்திய பருவமழை தொடர்பான தங்களுடைய கருத்துக்களையும் கணிப்புகளை பதிவு செய்வார்கள் ஆனால் அவை அப்படியே 100% நடந்து விடுவது கிடையாது.பொதுவாக நான் இதைப்போன்ற நீட்டிக்கப்பட்ட கால அளவிலான கணிப்புகளில் பெரிய ஆர்வம் கொண்டவன் இல்லை.ஆனால் இப்படியும் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.கால ஓட்டத்தில் அரங்கேறும் மாறுதல்களையும் நாம் அவ்வப்பொழுது நமது பக்கத்தில் பதிவு செய்வோம்.

எல்நினோ தெற்கு அலைவு ஆனது தற்பொழுது அதன் நடுநிலையான கட்டத்தில் இருந்தாலும் மத்திய மற்றும் தெற்கு பசிபிக் கடல் பகுதியின் கடல் பரப்பு வெப்பநிலையானது அதன் இயல்பான சராசரி அளவை விட தொடர்ந்து அதிகரித்து வருகிறது இது தொடர்பான தகவல்கள் அடங்கிய ஒரு சில படங்களையும் இந்த பதிவுடன் இணைக்கிறேன்.இதே சூழல்கள் தொடரும் பட்சத்தில் அடுத்த 3 மாதத்தில் அதாவது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பசிபிக் கடல்பரப்பில் எல்நினோவுக்கான சூழல்கள் உருவாக 50% வாய்ப்புகள் இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது அதே போல நவம்பர் இறுதி மற்றும் டிசம்பர் மாதத்தில் இந்த வாய்ப்புகள் 65% மாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் நினோ 3.4 பகுதியில் லா - நினாவுக்கான சூழல்களை எதிர்நோக்கி எப்படி காத்திருந்தோமோ அதை போன்று தற்பொழுது எல் -நினோவுக்கான சூழல்களை எதிர்நோக்கி உள்ளோம்.அதனால் வட-கிழக்கு பருவமழை காலகட்டத்தில் ஒட்டுமொத்த மழையின் அளவில் தொய்வு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் வட கிழக்கு பருவமழை காலகட்டம் தொடங்க இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில் இதனை 100% உறுதிப்படுத்த முடியாது.இது தொடர்பான தகவல்களை நான் அவ்வப்பொழுது நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.எதுவாயினும் தற்பொழுது தென்மேற்கு பருவழையின் வாயிலாக கிடைக்கும் நீரை சரியான திட்டமிடலுடன் சேமிப்பதும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது மிகவும் நல்லது.
நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்போதைய வானிலை சூழல்களை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் இதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.
இன்றைய மழைக்கான வாய்ப்புகளை வேறொரு பதிவாக பதிவிடுகிறேன்.


எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL
எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby
இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...