தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

08-07-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தென்மேற்கு பருவமழையானது எப்படி இருக்கலாம் ?

08-07-2018 நேரம் பிற்பகல் 1:35 மணி நான் கடந்த 04-07-2018 அன்று பதிவிட்டு இருந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது தென்மேற்கு பருவமழையானது மும்பை ,மங்களூரூ ,பானாஜி உட்பட மகாஷட்டிரம் ,கர்நாடகம்  மற்றும் வட கேரள மாநிலங்களின் கடலோர பகுதிகளில் தீவிரம் அடைந்துள்ளது அடுத்து வரக்கூடிய வார நாட்களிலும் இதே நிலையே தொடரும் மேலும் தற்பொழுது ஒடிசாவின் கடலோர பகுதிகளுக்கு  அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது அடுத்த வரக்கூடிய நாட்களில் அது மேலும் நகர்ந்து சத்தீஷ்கர் ,மஹாராஷ்டிர மாநிலத்தின் கிழக்கு பகுதிகள்  மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் ஆங்காங்கே வலுவான மழையை பதிவு செய்ய முற்படலாம் இம்முறையும் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் (Nagpur) மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்புகள் உண்டு.மேலும் இதே சூழல்கள் தொடரும் பட்சத்தில் 13-07-2018 அல்லது 14-07-2018 தேதிகளில் வட வங்கக்கடல் பகுதியில் ஒடிசாவுக்கு அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளது இதனால் தமிழகத்துக்கு பெரிய அளவிலான நன்மைகள் என்று இதுவும் இருக்க வாய்ப்புகள் இல்லை ஆனால் நான் முன்புஇ பதிவிட்டு இருந்ததை போல அதன் பின்னர் ஒடிசா மாநிலத்தில் ஆங்காங்கே மிக கனத்த மழைக்கு வாய்ப்புகள் உருவாகலாம்.

கேரள மாநிலத்தை பொறுத்தவரையில் 04-07-2018 அன்று பதிவிட்டு இருந்தது போல 07-07-2018 ஆகிய நேற்று முதல் மழையின் அளவு சற்று அதிகரித்துள்ளது இதனால் வால்பாறை உட்பட கோவை மற்றும் நீலகிரி மாவட்ட பகுதிகளிலும் இன்று சில இடங்களில் நல்ல மழை பதிவாகியுள்ளது.அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இதே நிலையே தொடரும் 10-07-2018 அன்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் பதிவாகவும் மழையின் அளவு அதிகரிக்கலாம்.10-07-2018 முதல் கேரளாவில் பருவமழை மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது இதனால் 10-07-2018 முதல் ஆங்காங்கே கனமழை பதிவாகக் கூடும்.

08-07-2018 ஆகிய இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகலாம் வழக்கம் போல கோவை மாவட்டம் வால்பாறை ,சின்னக்கல்லாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம் அதே போல கோவை மாவட்டம் கோவை - பொள்ளாச்சி இடையே கிணத்துக்கடவு ,மேட்டுப்பாளையம் மற்றும் அரசூர் அருகே உள்ள பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்புகள் உண்டு தொடர்ந்து சில நாட்களாக கிணத்துக்கடவு  - பொள்ளாச்சி இடையே உள்ள பகுதிகளில் மழை மேகங்கள் ராடாரில் பதிவாகி வருவதை காணமுடிகிறது .மேலும் வேட்டைக்காரன்புதூர்,ஆனைமலை பகுதிகளிலும் அவ்வப்பொழுது மழைக்கு வாய்ப்புகள் உள்ளது அதே போல நீலகிரி மாவட்டத்திலம் நெல்லியம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு மேலும் நீலகிரி மாவட்டத்தின் பிற மேற்கு பகுதிகளிலும் சில இடங்களில் மழை பதிவாகலாம் .பொதுவாக இன்று நீலகிரி ,கோவை ,தேனி மற்றும் நெல்லை மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள இடங்களில் ஆங்காங்கே சாரல் பதிவாகலாம் அதே போல திருப்பூர் ,விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மேற்கு பகுதிகளிலும் சில இடங்களில் சாரல் அலல்து தூறல் பதிவாகலாம்.தமிழகத்தின் பிற பகுதிகளை பொறுத்தவரையில் பொதுவாக ஆங்காகே வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படலாம் குறிப்பாக வட கடலோர மாவட்டங்களின் பல இடங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம் தரம்புரி ,நாகை ,விழுப்புரம் ,சேலம் ,கடலூர் ,புதுச்சேரி ,காரைக்கால் ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் மட்டும் சாரல் அல்லது தூறல் பதிவாகலாம்.09-07-2018 நாளை அல்லது அதற்கு பிறகு நெல்லை ,குமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளிலும் அதனை ஒட்டியுள்ள இடங்களிலும் வலுவான மழை பதிவாக தொடங்கலாம்.

 




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...