16-09-2018 நேரம் காலை 11:35 மணி தற்பொழுது இந்த ஆண்டின் சக்தி வாய்ந்த சூறாவளியாக கருதப்படும் அந்த #மங்குட் (#MANGKHUT) சூறாவளியானது நேற்று முன்தினம் ஒரு 5ஆம் வகை சூறாவளியாக #பிலிப்பைன்ஸ் (#Phillipines) நாட்டின் வடக்கு பகுதிகளை கடந்து தற்பொழுது 16-09-2018 ஆகிய இன்று ஒரு 2ஆம் வகை சூறாவளியாக சற்று வலுக்குறைந்து #மக்காவு (#Macau) மற்றும் அதன் அருகே உள்ள தெற்கு சீனப்பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது #ஹாங்காங் (#Hongkong) பகுதிகளிலும் கனமழை உட்பட மணிக்கு 160 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசக்கூடும்.
Effect of MANGKHUT Typhoon in india
மேலும் அந்த #மங்குட் (#MANGKHUT) சூறாவளியானது அதன் சுழற்சியால் வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் இருந்தும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து ம் காற்றை வேகமாக இழுப்பதாலும் கிழக்கு திசை காற்று இந்திய வட கிழக்கு மாநிலங்களில் வீரியம் குன்றி இருப்பதாலும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளின் வழியே நிலப்பகுதிகளில் இருந்து காற்று கடல் பகுதிக்குள் வர முற்படுகிறது இதன் காரணமாக 16-09-2018 ஆகிய இன்று மத்திய வங்கக்கடல் பகுதியில் அந்தமானுக்கு வட கிழக்கே ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது மேலும் அது 17-09-2018 ஆகிய நாளை அல்லது 18-09-2018 ஆகிய நாளை மறுநாள் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (Low Pressure Area) உருப்பெறலாம் அதைப்போல அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (#Depression) உருவெடுத்து வட கிழக்கு திசையில் நகர தொடங்கலாம் அதனுடைய நகர்வுகளை அவ்வப்பொழுது நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.மேலும் அது 20-09-2018 அல்லது 21-09-2018 ஆம் தேதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம்.பின்னர் கரையை கடந்து அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் வட மேற்கு திசையில் நகர்ந்து மீண்டும் #ஒடிசா ,#சத்தீஸ்கர் மற்றும் #மத்தியபிரதேச மாநிலங்களில் ஆங்காங்கே கனமழையை ஏற்படுத்தி நகர்ந்து செல்லலாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் குறிப்பாக 16-09-2018 மற்றும் 17-09-2018 ஆம் தேதிகளில் கடந்த சில நாட்களை போன்று தமிழக வட ,வட உள் ,தென் உள் ,மேற்கு உள் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு மேலும் தெற்கு ஆந்திர பகுதிகளிலும் கடந்த சில நாட்களை போலவே மழை மேகங்கள் இரவு நேரங்களில் குவிய வாய்ப்புகள் உள்ளதால் நள்ளிரவு அல்லது அதிகாலை நேரங்களில் காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு ஒவ்வொரு நாளும் அன்றைய மழைக்கான வாய்ப்புகளையும் தினந்தோறும் பிற்பகலில் பதிவிடுகிறேன்.மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருந்தது போல மத்திய வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதும் தமிழகத்தில் மழையின் அளவு சற்று குறைய தொடங்கலாம் அதாவது குறிப்பாக 18-09-2018 அல்லது 19-09-2018 ஆம் தேதிகளில் மழையின் அளவு அதற்கு முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் குறைந்து இருக்கலாம்.மேலும் அது வலுப்பெற்று வட கிழக்கு திசையில் நகர்ந்து செல்ல தொடங்குகையில் குறிப்பாக 20-09-2018 அல்லது 21-09-2018 முதல் தமிழகத்தின் பல இடங்களிலும் பகல் நேர வெப்பநிலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம் செப்டம்பர் இறுதி வாரத்தில் தமிழகத்தில் மீண்டும் வெப்பசலன மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.
வானிலை தொடர்பான மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.

0 comments:
கருத்துரையிடுக