தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

2018 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கலாம் ? | 23-09-2018 அடுத்து வரக்கூடிய வார நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

23-09-2018 நேரம் மாலை 4:00 மணி இன்று முதல் தொடங்க இருக்கும் வாரத்தில் தமிழக மேற்கு உள் ,மேற்கு ,தென் ,தென் உள் மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே அவ்வப்பொழுது இடியுடன் கூடிய மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் வட உள் ,வட மற்றும் கடலோர மாவட்டங்களிலும் சூழல்களுக்கு ஏற்ப அவ்வப்பொழுது மழைக்கு வாய்ப்புகள் உண்டு தற்பொழுது வரை அதாவது 23-09-2018 ஆகிய இன்று காலை 8:30 மணி வரை பதிவான மழை அளவுகளின் படி தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் இதுவரையில் 241.1 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இது இந்த காலகட்டத்தில் பதிவாகும் அதன் இயல்பான அளவான 289.3 மி.மீ என்கிற அளவுடன் ஒப்பிடுகையில் 17% சதவிகிதம் குறைவு.இந்த வேறுபாடு அடுத்து வரக்கூடிய இந்த மாதத்தில் மீதம் இருக்கும் நாட்களில் பதிவாக இருக்கும் மழையின் வாயிலாக குறையும் என நம்பலாம்.இந்த ஆண்டின் தென்மேற்கு பருவமழையானது அதன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது இதன் காரணமாக தற்பொழுது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேற்கு திசை காற்றின் வீரியம் முற்றிலும் குறைந்து உள்ளது இதனால் கிழக்கு திசை காற்று உள் மற்றும் மேற்கு உள் மாவட்டங்கள் வரை பயணிக்க சாதகமான சூழல்கள் நிலவி வருகின்றன மேலும் அவ்வாறு அது மேற்கு உள் மற்றும் உள் மாவட்டங்கள் வரை பயணித்து அங்கிருக்கும் மேற்கு திசை காற்றுடன் குவிய முற்படும்பொழுது காற்று திசை மாற்றம் (Wind Discontinuity)ஏற்பட்டு வலுவான இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வழிவகை செய்கிறது இதைப்போன்ற காலங்களில் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே நீண்ட நேர மழைக்கும் வாய்ப்புகள் உள்ளது.ஆங்காங்கே சில மணி நேரங்கள் என்கிற கால அளவிலும் மழை பதிவாகலாம்.அடுத்து வரக்கூடிய நாட்களில் பதிவாகும் மழை பல இடங்களிலும் வலுவான இடியுடன் கூடியதாக இருக்கும் அவ்வப்பொழுது சில இடங்களில் #ஆலங்கட்டி (#Hailstorm) மழையும் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.தமிழகத்தில் அன்றைன்றைக்கு மழை பதிவாக அதிக வாய்ப்புகள் இருக்கும் மாவட்டங்கள் மற்றும் பகுதிகள் தொடர்பான தகவல்களை தினமும் பிற்பகல் நேரத்தில் நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.

01-10-2018 அல்லது அதற்கு பிறகு வரக்கூடிய அக்டோபர் மாத முதல் வார நாட்களில் தெற்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வீரியம் மேலும் அதிகரிக்கலாம் மேலும் அடுத்து பிறக்க இருக்கும் அக்டோபர் முதல் வாரத்திலும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை தொடரும் இதே சூழல்கள் தொடரும் பட்சத்தில் அக்டோபர் மாத இரண்டாவது வாரத்திலேயே தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்க சாதகமான சூழல்கள் உருவாகலாம் அக்டோபர் இரண்டாவது வார இறுதி அல்லது மூன்றாவது வாரத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளது அதவாது அக்டோபர் 14  முதல் அக்டோபர் 22 வரையிலான நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் வட கிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்படலாம்.மேலும் பிறக்க இருக்கும் அக்டோபர் மாதத்தில் வட கிழக்கு பருவமழை இயல்பான அளவு பதிவாக வாய்ப்புகள் உள்ளது.தமிகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல்கள் உருவானதும் இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை எப்படி இருக்கலாம் ? என்பது தொடர்பான தகவல்களையும் எனது கணிப்புகளையும் உள்ளடக்கிய பதிவை பதிவிடுகிறேன்.

மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் மழைக்கான வாய்ப்புகள் மற்றும் வட கிழக்கு பருவமழை தொடர்பான தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான்.இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...