தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

21-09-2018 மேற்கு மத்திய வங்கக்கடலில் உருவானது "#டாயே " ( #DAYE ) புயல்

21-09-2018 நேரம் அதிகாலை 00:10 மணி மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் "#டாயே " ( #DAYE )புயல் சில மணி நேரங்களுக்கு முன்பு அதாவது 20-09-2018 ஆகிய நேற்று இரவு உருவானது.20-09-2018 ஆகிய நேற்று நள்ளிரவு அந்த "#டாயே " ( #DAYE ) புயல் தெற்கு ஒடிசா வின் கடலோர பகுதிகளில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.தற்பொழுது நமக்கு கிடைத்திருக்கும் நிகழ் நேர செயற்கைகோள் புகைபடங்களின் உதவியுடன் அது கரையை கடந்து தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலைகொண்டிருப்பதை நம்மால் அறிய முடிகிறது மேலும் பிற்பகலில் நாம் எதிர்பார்த்து இருந்ததை போலவே அது ஒடிசா மாநிலம் #கோபால்பூர் பகுதிக்கு மிக அருகில் கரையை கடந்து இருக்கலாம் அதேபோல 20-09-2018 ஆகிய நேற்று பிற்பகலில் மழைக்கான வாய்ப்புகளில் நான் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது #விசாகப்பட்டினம் (#Visakhapatnam) உட்பட வடக்கு ஆந்திராவின் கடலோர மற்றும் உள் பகுதிகளின் பல இடங்களிலும் வலுவான மழை பதிவாக தொடங்கியிருக்க வேண்டும் அப்பகுதிகளில் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருவதை செயற்கைகோள் படங்களின் உதவியுடனும் அறியமுடிகிறது.மேலும் அடுத்த சில மணிநேரங்களில் அது வலுகுறைந்து மீண்டும் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) என்கிற நிலையை 21-09-2018 ஆகிய இன்று காலைக்குள் அடையலாம் மேலும் நன்பகல் வாக்கில் அது மேலும் வலுகுறைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depession) உருப்பெறலாம்.மேலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து சத்தீஸ்கர் ,மத்தியபிரதேசம் உட்பட மத்திய ,மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு மாநிலங்ககளில் அங்காங்கே கனமழையை ஏற்படுத்த முற்படலாம்.அதன் நகர்வுகளை அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.

தமிழகத்தை பொறுத்தவரையில் நான் நேற்று பிற்பகலில் பதிவிட்டு இருந்தது போல #நெல்லை ,#குமரி மற்றும் #மதுரை மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் வலுவான மழை பதிவானது இவைதவிர்த்து நேற்று #கிருஷ்னகிரி ,#திருவண்ணாமலை  ,#வேலூர் மாவட்ட மேற்கு பகுதிகள் மற்றும் #விழுப்புரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மிதமான மழை பதிவானது நேற்று மாலையும் ஜவ்வாது மலை அருகே மழை மேகங்கள் குவிய தொடங்கின பின்னர் #திருவண்ணாமலை உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தின் பல இடங்களிலும் மிதமான மழை பொழிவை ஏற்படுத்தின பின்னர் அந்த மழை மேகங்கள் #விழுப்புரம் மாவட்டத்துக்குள் நுழைந்து #திண்டிவனம் பகுதிகளுக்கு அருகிலும் பதிவாகி வந்தன பொதுவாக நான் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் மிதமான மழை பதிவாங்கியிருக்க வேண்டும் தற்பொழுதும் #தர்மபுரி மாவட்டம் #அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் மிதமான மழை பொழைவை ஏற்படுத்தக்கூடிய மழை மேகங்கள் ராடாரில் பதிவாகிவருகின்றன.தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த புயலால் எந்த வித பாதிப்புகளும் கிடையாது நேரடி மழை வாய்ப்புகள் என்றும் எதுவும் இருக்கப்போவது இல்லை அதன் நகர்வுகளுக்கு ஏற்ப தமிழக பகுதிகளில் வீசும் காற்றின் திசை மாறுதல் அடைந்து சாதகமான சூழல்கள் உருவாகுவதை பொறுத்தே அந்தந்த பகுதிகளின் வெப்பசலன மழைக்கான வாய்ப்புகள் அமையும் .


21-09-2018 இதுவரையில் அதாவது அதிகாலை 00:05 வரை பதிவான மழை அளவுகளின் படி தமிழகத்தில் மழை பதிவாகிய ஒரு சில பகுதிகளின் மழை அளவுகள்.

பேச்சிப்பாறை  ( கன்னியாகுமரி மாவட்டம் ) - 31 மி.மீ
பையூர் (தர்மபுரி மாவட்டம் ) - 27 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம் ) - 25 மி.மீ
திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 18 மி.மீ
திருசெந்தூர் (தூத்துக்குடி மாவட்டம் ) - 16 மி.மீ
ஓசூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 14 மி.மீ
நெய்யூர் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ
திருப்பதிசாரம் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 6 மி.மீ
திருநெல்வேலி (திருநெல்வேலி மாவட்டம் ) - 4 மி.மீ

இதர பகுதிகள் குறித்த நிலவரம் காலை தான் தெரியவரும்

அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...