11-11-2018 நேரம் காலை 9:10 மணி நேற்று அதிகாலை வங்கக்கடல் பகுதியில் அந்தமானுக்கு மேற்கே நிலைக் கொண்டிருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று வலு பெற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) உருவெடுத்தது அது மேலும் தீவிரமடைந்து 10-11-2018 ஆகிய நேற்று இரவு தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் அந்தமானுக்கு கிழக்கே ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) என்கிற நிலையை அடைந்தது (Deep Depression) .மேலும் அது தொடர்ந்து தீவிரமடைந்து 11-11-2018 ஆகிய இன்று அதிகாலை ஒரு புயலாக (Cyclone) உருவெடுத்தது ,நான் முன்பே பதிவிட்டு இருந்தது போல அது ஒரு புயலாக உருவெடுத்தாததால் அதற்கு இலங்கை நாட்டின் தேர்வு சொல்லான #காஜா (#GAJA) என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.அது மேலும் தீவிரமடைந்து வருவதால் அடுத்த இல் மணி நேரங்களில் இன்று 11-11-2018 ஆகிய இன்று இரவு அல்லது 12-11-2018 ஆகிய நாளை அதிகாலை அது ஒரு தீவிர புயல் (Severe Cyclone) என்கிற நிலையை எட்டிவிட வாய்ப்புகள் உள்ளது.மேலும் நான் கடந்த 02-11-2018 அன்று எழுதிய அடுத்து வரக்கூடிய வரத்திற்கான வானிலை
தகவல்களில் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது மத்திய வங்கக்கடல்
பகுதியில் உருவாக இருக்கும் அந்த #காஜா (#GAJA) புயலானது தமிழகத்துக்கு
பலன் வழங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது.அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அது வட மேற்கு திசையில் நகர தொடங்கி அங்கு நிலவி வரும் சாதகமற்ற சூழல்களின் காரணமாக அது தனது திசையை மாற்றி கிழக்கு - தென் கிழக்கு திசையில் நகர தொடங்கலாம் 14-11-2018 ஆம் தேதி வாக்கில் அது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் முன்பை போல அங்கு நிலவி வரும் சாதகமற்ற சூழல்களை கணக்கில் கொண்டு அது மேலும் தென் கிழக்கு திசையில் நகர்ந்து 15-11-2018 ஆம் தேதி வாக்கில் #மகாபலிபுரம் - #காரைக்கால் இடையே உள்ள கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படலாம்.
நான் இதற்கு முந்தைய பதிவுகளில் பதிவிட்டு இருந்தது போல அந்த புரியலானது தெற்கு ஆந்திரம் மற்றும் சென்னை ,திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் வடகோடி கடலோர மாவட்டங்களை நெருங்க முற்படும் பட்சத்தில் அப்பகுதிகளில் நிலவிவரும் வறட்சியான சூழல்களின் காரணமாக அடு சற்று வலுவிழக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது பெரும்பாலும் தற்பொழுது நிலவி வரும் சூழல்களின் அடிப்படையில் அது வலுவுடன் கரையை கடக்க #மகாபலிபுரம் - #காரைக்கால் இடையே உள்ள கடலோர பகுதிகளை தேர்நதெடுக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான தகவல்களை மீண்டும் விரிவாக நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.
அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொல்கிறேன்.

0 comments:
கருத்துரையிடுக