தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

20-11-2018 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள் - புதுச்சேரியில் கனமழை பதிவாக வாய்ப்பு

20-11-2018 நேரம் பிற்பகல் 1:55 மணி தற்பொழுது அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அதன் மையப்பகுதி சற்று விரிவடைந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு இலங்கை பகுதிகளில் நிலைகொண்டுள்ளது இதன் காரணமாக நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல தற்பொழுது அநேக வடகடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளிலும் மழை பதிவாக தொடங்கியுள்ளது அடுத்த சில மணி நேரங்களில் #சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாக தொடங்கலாம்.மேலும் அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த சில மணிநேரங்களில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம் அது ஒரு புயலாக உருவெடுக்க வாய்ப்புகள் குறைவு.

மேலும் அந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று இரவு #நாகை மாவட்டத்தின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம் இதன் காரணமாக #புதுச்சேரி அருகே காற்று மிக சாதகமாக குவிய வாய்ப்புகள் உள்ளது 20-11-2018 ஆகிய இன்று அடுத்த 24 மணி நேரத்தில் #புதுச்சேரி ,#கடலூர் ,#பரங்கிப்பேட்டை ,#மரக்காணம் உட்பட #புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் இவைதவிர்த்து இன்று #திருவள்ளூர் ,#சென்னை ,#காஞ்சிபுரம் ,#விழுப்புரம் ,#கடலூர் ,#நாகப்பட்டினம் ,#காரைக்கால் ,#திருவாரூர் உட்பட  வட கடலோர மாவட்டங்களின் அநேக பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் #திருவண்ணாமலை ,#தஞ்சை ,#திருச்சி ,அரியலூர் ,பெரம்பலூர் ,ராமநாதபுரம் ,மதுரை ,சிவகங்கை ,புதுக்கோட்டை ,அரியலூர் ,பெரம்பலூர் ,வேலூர் மாவட்டங்களில் அங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு வட உள் மாவட்டங்களில் இது பரவலான மிதமான மழையாகவும் பதிவாகலாம் மேலும் தூத்துக்குடி ,விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் இன்று ஒரு சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

நான் கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் நமது பக்கத்தில் பலமுறை #Geographical Advantage என்ற ஒரு பகுதி அமைந்திருக்கும் இடம் சார்ந்து அந்த இடத்தில் மழை மேகங்கள் அதிகம் குவிய சாதகமான சூழல்கள் அமையும் என்று குறிப்பிட்டு இருப்பேன் அதன்படி 20-11-2018 ஆகிய இன்று அந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி கடலோர பகுதிகளை நெருங்க முற்படுகையில் நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில் #சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் #நாகை மாவட்டம் #பழையாறு - #சீர்காழி -#திருமுல்லைவாசல் ,#கொள்ளிடம் பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனத்த மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அதேபோல பழையாறு  - #திருமுல்லைவாசல் பகுதிகள் வழியாக உட்புகுந்து வரும் காற்றும் #பரங்கிப்பேட்டை அருகே உட்புகுந்து வட க்கு திசையில் இருந்து கீழ்நோக்கி வரும் காற்றும் #மயிலாடுதுறை  - #ஜெயம்கொண்டாம் -#கும்பகோணம் சுற்றுவட்டப் பகுதிகளில் குவிய வாய்ப்புகள் உள்ளதால் அப்பகுதிகளில் ஆங்காங்கே வலுவான மழை இன்று பதிவாகலாம் மேலும் இன்று இரவு கடலோர மாவட்டடங்களை ஒட்டியுள்ள வேலூர் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களிலும் #காஞ்சிபுரம் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஆங்காங்கே நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலோர பகுதிகளை கடந்து உட் பகுதிகளில் நகர்ந்து செல்கையில் 21-11-2018 ஆகிய நாளை வட உள் மாவட்டங்கள் உட்பட வட மாவட்டங்களில் பரவலான மழை பதிவாகலாம் ஒரு சில பகுதிகளில் கனமழை பதிவாகவும் வாய்ப்புகள் உளள்து இது தொடர்பான விரிவான தகவல்களை இன்று இரவு மீண்டும் பதிவிடுகிறேன்.

நிகழ் நேரத்தில் மழைக்கான வாய்ப்புகளுடன் இன்றும் ஓரிரு முறை பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...