25-11-2018 நேரம் மாலை 5:00 மணி நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தமிழகத்தின் அநேக பகுதிகளிலும் வறண்ட வானிலையே தொடரும் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து அவ்வப்பொழுது ஓரிரு பகுதிகளில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.மேலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் அநேக பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இது தொடர்பாக நமது பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.தற்பொழுது #வியட்நாம் நாட்டின் #VungTau அருகே உள்ள தெற்கு கடலோர பகுதிகளில் கரையை கடந்து வரும் #உசாகி (#USAGI) புயலானது கரையை கடந்து வட -வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை இரவு அல்லது நாளை மறுநாள் #கம்போடியா நாட்டில் முற்றிலும் வலுவிழக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது இதன் தாக்கத்தால் வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் அலைவுகளின் காரணமாகவும் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள இந்திய பெருங்கடலின் இருமுனைகளிலும் நிலவி வரும் தற்காலிக நேர்மறையான சூழல்களின் காரணமாகவும் 28-11-2018 ஆம் தேதி அன்று நள்ளிரவு அல்லது 29-11-2018 தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு அதற்கு அடுத்த ஓரிரு நாட்களிலும் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் அதன் பின் மீண்டும் மழையின் அளவு குறைய தொடங்கலாம் பிறக்க இருக்கும் டிசம்பர் மாத முதல் வார மத்தியில் அதாவது 04-12-2018 அல்லது 05-12-2018 ஆம் தேதி வாக்கில் தமிழக வட கடலோர மாவட்டங்களில் மீண்டும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் 13-12-2018 வாக்கில் அல்லது அதற்கு பிறகு வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது.
மேடன் ஜூலியன் அலைவு (Madden -Julian Oscillation)
-----------------------------------------------------------------------------
மேடன் ஜூலியன் அலைவு (Madden -Julian Oscillation) - MJO ஆனது இரண்டு நாட்களுக்கும் முன்பு அதன் 6 வது கட்டத்தில் 1க்கு குறைவான வீச்சு அளவுடன் இருந்தது தற்பொழுது 25-11-2018 ஆகிய இன்று அதன் 7வது கட்டத்தில் 1க்கும் சற்று அதிகமான வீச்சு அளவை கொண்டுள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது அதனுடைய 8வது மற்றும் 1வது கட்டங்களை கடந்து 10 முதல் 14 நாட்களில் அதவாது டிசம்பர் முதல் வார மத்திய நாட்கள் அல்லது அதற்கு பிறகு அது அதனுடைய 2வது கட்டத்துக்கு வர வாய்ப்புகள் உள்ளது அதாவது 04-12-2018 முதல் 08-12-2018 வரை உள்ள நாட்களில் அதன் பின் அதற்கு அடுத்த 4 முதல் 5 நாட்களில் அது அதனுடைய 3 வது கட்டத்துக்கு 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் வலுவான நிலையில் பயணிக்க வாய்ப்புகள் உள்ளது.இவற்றை கணக்கில் கொண்டு பார்க்கையில் மேடன் ஜூலியன் அலைவின் உதவியுடன் டிசம்பர் முதல் வார மத்தியில் அல்லது அதற்கு பிறகு வங்கக்கடல் பகுதிகளில் பருவமழை மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்க வாய்ப்புகள் உள்ளது இரண்டாவது வாரத்தில் அதாவது 13-12-2018 ஆம் தேதி வாக்கில் அல்லது அதற்கு பிறகு வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கலாம் அதன் பின் மீண்டும் ஒருமுறை வட கிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளது.
எல்-நினோ தெற்கு அலைவு (El-nino Southern Oscillation)
--------------------------------------------------------------------------------
தற்பொழுது பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரபரப்பில் மிதமான எல்-நினோ வுக்கான சூழல்கள் நிலவ தொடங்கியிருக்கின்றன இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் பசிபிக் கடல் பரப்பில் எல்-நினோவுக்கான சூழல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக நமது பக்கத்தின் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தேன்.தற்பொழுது மேற்கு பசிபிக் கடல் பரப்பு பகுதியான நினோ 4 பகுதியில் கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட 0.9°C அளவிலும் அதேபோல இந்திய பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான நினோ 3.4 பகுதியில் 0.7°C அளவிலும் மேலும் நினோ 3 இல் 0.8°C மற்றும் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் கிழக்கு பகுதியான நினோ 1+2 பகுதியில் 0.6°C அளவிலும் இயல்பை விட அதிகரித்துள்ளது.அடுத்து வரக்கூடிய நாட்களிலும் பசிபிக் கடல் பரப்பு வெப்பநிலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது அடுத்த பிறக்க இருக்கும் 2019 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தின் மத்தியில் வலுவான எல்நினோ வுக்கான சூழல்கள் உருவாகலாம்.
நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்பொழுது நிலவி வரும் வானிலை சூழல்களை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான்.இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.
எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL
எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby
இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT

0 comments:
கருத்துரையிடுக