தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

27-11-2018 தமிழகத்தில் அடுத்து மழைக்கான வாய்ப்பு எப்பொழுது ?

27-11-2018 நேரம் பிற்பகல் 2:20 மணி நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல தற்பொழுது நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தமிழகத்தின் அநேக இடத்திலும் பனிப்பொழிவு அதிகரித்திருக்கலாம்.

27-11-2018 ஆகிய இன்று இரவு மற்றும் 28-11-2018 ஆகிய நாளை அதிகாலை பனிப்பொழிவு அதிகரித்திருக்க வாய்ப்புள்ள பகுதிகள்
-------------------------------------------------
27-11-2018 ஆகிய இன்று இரவு ,நள்ளிரவு மற்றும் 28-11-2018 ஆகிய நாளை அதிகாலை #ஊட்டி ,#குன்னூர் ,கோத்தகிரி உட்பட நீலகிரி மாவட்டத்தின் அநேக பகுதிகளிலும் அதிகமான பனிப்பொழிவு உணரப்படலாம் மேலும் #வால்பாறை  - #மூணாறு - #கொடைக்காணல் உட்பட அதன் இடையே உள்ள #மன்னவனூர் ,#பூம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகள் உட்பட #திண்டுக்கல் மாவட்டத்தின் அநேக மேற்கு பகுதிகளிலும் #கிருஷ்னகிரி மாவட்டம் #ஓசூர் ,#தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மிக அதிகமான அளவு பனிப்பொழிவு உணரப்படலாம் நான் மேற்குறிப்பிட்ட இருக்கும் பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் குறைந்த பட்சமாக 12°C முதல் 7°C வரையில் வெப்பநிலை நிலவளாம்.மேலும் #தேனி மாவட்டம் #மேகமலை மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #சேலம் உட்பட #சேலம் மாவட்டம் #ஆத்தூர் - #ஏற்காடு சுற்றுவட்டப் பகுதிகளிலும் #வேலூர் மாவட்டம் #ஆம்பூர் ,#வாணியம்பாடி ,#ஏலகிரி ,#ஆலங்காயம் மற்றும் அதனை ஒட்டியுள்ள #ஜவ்வாது மலை பகுதிகளிலும் #நெல்லை மாவட்டம் #பாபநாசம் உட்பட #நெல்லை மற்றும் #குமரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் #ஈரோடு மாவட்டம் #ஆசனுர் ,#கெட்டியூர் ,குடியூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் அதிகமான பனிப்பொழிவு உணரப்படலாம் நான் மேற்குறிப்பிட்ட இருக்கும் பகுதிகளில் இதற்கு முந்தைய நாட்களில் நிலவி வந்த வெப்பநிலையை விட நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பல பகுதிகளிலும் 1° முதல் 2° செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைவு ஏற்படலாம்.

மேலும் #கோவை ,#திருப்பூர் ,#ஈரோடு ,#வேலூர் ,#நாமக்கல் மற்றும் #திண்டுக்கல் மாவட்டங்களின் அநேக இடங்களிலும் #பெரம்பலூர் ,#மதுரை ,#புதுக்கோட்டை ,#திருவண்ணாமலை ,#தஞ்சை ,#காஞ்சிபுரம், #அரியலூர் ,#திருச்சி ,#கரூர் ,#சிவகங்கை மற்றும் #விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகரித்திருக்கலாம் சில பகுதிகளில் 1° C வரையிலும் வெப்பநிலை குறைவு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.

இவற்றை தவிர்த்து தமிழகத்தின் அநேக கடலோர மாவட்டங்களிலும் இதர பிற மாவட்டங்களிலும் பல இடங்களில்  0.5° வரையில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில்  முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் வெப்பநிலை குறைவு உணரப்படலாம்.

தமிழகத்தில் அடுத்து மழைக்கான வாய்ப்பு எப்பொழுது ?
----------------------------------------------------------------------------
நான் இரண்டு நாட்களுக்கு முன்பு அடுத்து வரக்கூடிய வானிலை தகவல்களில் பதிவிட்டு இருந்தது போல 28-11-2018 ஆகிய நாளை நள்ளிரவு அல்லது 29-11-2018 ஆகிய நாளை மறுநாள் அதிகாலை முதல் தமிழக கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு 29-11-2018 ஆகிய நாளை மறுநாள் தமிழக தென் ,தென்உள் ,வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலான மழை பதிவாகலாம் அதற்கு அடுத்த சில நாட்களுக்கும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது 04-12-2018 ஆம் தேதி அல்லது அதற்கு அடுத்த நாட்களில் வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தோன்றி தமிழகத்தில் மழையின் அதிகரிக்க தொடங்கலாம் 13-12-2018 அல்லது அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையலாம்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...