05-12-2018 நேரம் இரவு 10:05 மணி தற்பொழுது தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது.மேலும் கடந்த 25-11-2018 அன்று நான் எழுதிய அடுத்து வரக்கூடிய நாட்களுக்கான வானிலை தகவல்கள் அடங்கிய பதிவில் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது மேடன் -ஜூலியன் அலைவு (MJO) ஆனது 04-12-2018 ஆகிய நேற்று முதல் அதன் இரண்டாவது கட்டத்தை வலுவான வீச்சு அளவுடன் எட்டியுள்ளது.இது அடுத்து வரக்கூடிய நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலு பெற்று அதற்கு அடுத்த நிலையை அடைய உதவி புரிகிறது.ஆனால் அதன் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பான தகவல்களை ஓரளவு துல்லியமாக அறிய குறைந்தது ஒரு வாரமாவது (7 நாட்கள்) நாம் காத்திருக்க வேண்டும்.அதற்கு முன் புயல் உருவாகும் என்பதை போன்ற தகவல்களை உறுதியாக கூறுவது என்பது பிறக்காத பிள்ளைக்கு பேர் வைப்பது போன்றதாகும்.அடிப்படை ஆதரமற்ற வீண் வதந்திகளை பகிர்ந்து மக்களிடம் பீதியை பரவ செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.நான் உங்களிடம் கேட்டு கொள்வது ஒன்று தான் ஆதரமற்ற தகவல்களை நம்பவும் செய்யாதீர்கள் அதை பகிர்ந்து மக்களிடம் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தவும் முற்படாதீர்கள்.05-12-2018 ஆகிய இன்று #சென்னை மாநகர் உட்பட வட மற்றும் வட-உள் தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகியுள்ளது.நாளை முதல் வட தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள் குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது.05-12-2018 ஆகிய இன்று இதன் பிறகு நல்லிறவு மற்றும் 06-12-2018 ஆகிய நாளை அதிகாலை நேரங்களில் #ராமநாதபுரம் , #புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோர பகுதிகள் உட்பட தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் அதிகாலை நேரத்தில் வட கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகலாம்.நாளை தென் தமிழகத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மற்றபடி 06-12-2018 ஆகிய நாளை முதல் வட தமிழகத்தின் அநேக இடங்களிலும் இரவு
மற்றும் அதிகாலை நேரங்களில் மீண்டும் பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கலாம்.வட தமிழகத்தை பொறுத்தவரையில் காற்றின் திசையில் ஏற்படும் சிறு மாற்றங்களை பொறுத்து அவ்வப்பொழுது ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம்.இது தொடர்பாக நமது பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.மேலும் நான் கடந்த மாதம் முதல் வட கிழக்கு பருவமழையானது டிசம்பர் 13 (13-12-2018) ஆம் தேதிக்கு பிறகு வரும் ஏதேனும் நாட்களில் மீண்டும் ஒரு முறை தீவிரமடைய வாய்ப்புகள் இருப்பதாக தொடர்ந்து குறிப்பிட்டு வந்திருந்தேன் அதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வுகள் அதற்கான வாய்ப்புகளை இன்னும் 10 நாட்களில் பிரகாசமாக்கும் என நம்புவோம்.
மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation)
-----------------------------------------------------------------------------
மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation) -MJO ஆனது தற்பொழுது அதன் 2வது கட்டத்தில் 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் வலுவாக உள்ளது அடுத்த 4 அல்லது 5 நாட்களில் அதாவது 09-12-2018 அல்லது 10-12-2018 ஆம் தேதி வாக்கில் அது அதனுடைய 3வது கட்டத்தை 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் வலுவாக அடையலாம் அதன் பின் அதற்கு அடுத்த 7 நாட்களுக்கு அது 3வது கட்டத்தில் தொடரவே அதிக வாய்ப்புகள் உள்ளது அது மேலும் கிழக்கு நோக்கி பயணித்து அதன் பின் 16-12-2018 அல்லது அதற்கு பிறகு அது அதனுடைய 4வது கட்டத்தை அடைய முற்படலாம்.ஒரு சில மாதிரிகள் 7 நாட்களுக்கு பின்னர் அது 3வது கட்டத்திலேயே 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் வலுகுறைந்த நிலையில் தொடரலாம் என்பதை போன்று தெரிவிக்கின்றன எதுவாயினும் என்னை பொறுத்தவரையில் 18-12-2018 அல்லது 19-12-2018 ஆம் தேதிவரையில் MJO வின் தாக்கம் வங்கக்கடல் பகுதிகளுக்கு சாதகமானதாக இருக்கும் என கருதுகிறேன்.இந்த காலகட்டத்துக்குள் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் அடுத்தகட்ட நகர்வுகள் வட கிழக்கு பருவமழை தீவிரமடைய சாதகமானதாக இருக்கும் பட்சத்தில்.இதுநாள் வரையில் நிகழும் 2018 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் இயல்பான அளவுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் பதிவான ஒட்டுமொத்த மழை அளவில் இருக்கும் வேறுபாடு நீங்கும் என நம்பலாம்.அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாக நமது பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.
எல்-நினோ தெற்கு அலைவு (El-nino Southern Oscillation)
--------------------------------------------------------------------------------
.தற்போது வலுகுறைந்த எல்-நினோவுக்கான சூழல்கள் பசிபிக் கடல் பரப்பில் நிலவி வருகிறது.இதன் காரணமாக கடந்த முறை அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களில் பதிவிட்டு இருந்த எல்-நினோ தெற்கு அலைவு (El-nino Southern Oscillation) தொடர்பான தகல்வல்களையே இந்த பதிவுடனும் இணைக்கிறேன்.அடுத்து வாரத்தில் பசிபிக் கடல் பரப்பில் நிலவும் சூழல்கள் தொடர்பாக விரிவாக பதிவிடுகிறேன்.தற்பொழுது பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரபரப்பில் வலுகுறைந்த எல்-நினோ வுக்கான சூழல்கள் நிலவ தொடங்கியிருக்கின்றன இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பே நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாதத்தில் பசிபிக் கடல் பரப்பில் எல்-நினோவுக்கான சூழல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக நமது பக்கத்தின் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தேன்.தற்பொழுது மேற்கு பசிபிக் கடல் பரப்பு பகுதியான நினோ 4 பகுதியில் கடல் பரப்பு வெப்பநிலையானது இயல்பை விட 0.9°C அளவிலும் அதேபோல இந்திய பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் மத்திய பகுதியான நினோ 3.4 பகுதியில் 0.7°C அளவிலும் மேலும் நினோ 3 இல் 0.8°C மற்றும் பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள பசிபிக் கடல் பரப்பின் கிழக்கு பகுதியான நினோ 1+2 பகுதியில் 0.6°C அளவிலும் இயல்பை விட அதிகரித்துள்ளது.அடுத்து வரக்கூடிய நாட்களிலும் பசிபிக் கடல் பரப்பு வெப்பநிலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது அடுத்த பிறக்க இருக்கும் 2019 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தின் மத்தியில் வலுவான எல்நினோ வுக்கான சூழல்கள் உருவாகலாம்.
பிறக்க இருக்கும் 2019 ஆம் ஆண்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பனிப்பொழிவு சற்று அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பாகவும் ஏற்கனவே நமது பக்கத்தில் இதற்கு முந்தைய பதிவுகளில் ஒரு முறை பதிவிட்டு உள்ளேன்.
எல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL
எல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby
இந்திய பெருங்கடல் இருதுருவம் (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT

0 comments:
கருத்துரையிடுக