தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

10-12-2018 வங்கக்கடல் பகுதியில் உருவானது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - அது எங்கு கரையை கடக்கலாம் ?

10-12-2018 நேரம் பிற்பகல் 1:55 மணி நான் இதற்கு முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டு இருந்தது போல தற்பொழுது தெற்கு வங்கக்கடல் பகுதியின் மத்திய பகுதியிலும் மற்றும் அதனை ஒட்டியுள்ள பூமத்திய ரேகைக்கு அருகே உள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளிலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (Low Pressure Area) உருவாகியுள்ளது அடுத்த சில மணி நேரங்களில் அது மேலும் கிழக்கு -வட கிழக்கு திசை நோக்கி சற்று நகர முற்பட்டு தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-12-2018 அல்லது 12-12-2018 ஆகிய தேதிகளில் ஒரு வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (Well marked Low Pressure Area) என்கிற நிலையை அடையலாம் அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது 12-12-2018 அல்லது 13-12-2018 ஆம் தேதிகளில் வாக்கில் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (#Depression) உருவெடுக்கலாம்.மேலும் அதன் பின்னர் அது மேற்கு - வட மேற்கு திசையில் நகர முற்படலாம்.நான் முன்பே பதிவிட்டு இருந்தது போல தற்போது மேடன்-ஜூலியன் அலைவு (#MJO) ஆனது அதன் 3வது (3rd Phase ) கட்டத்தில் 1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் (Amplitude Greater Than 1) மிக வலுவாக உள்ளது அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு மேடன்-ஜூலியன் அலைவு ஆனது வலுவுடன் 3 வது கட்டத்திலேயே தொடரலாம் இது தற்பொழுது உருவாகியிருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மென்மேலும் வலுவடைய சாதகமாக உள்ளது.அது அடுத்து வரக்கூடிய நாட்களில் வலுப்பெற்று ஒரு குறைந்த காற்றழுத்த மண்டலமாக உருவெடுத்ததும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களுக்கான அதன் நகர்வுகள் தொடர்பாக ஒரு தெளிவு கிடைக்கும்.மேலும் 13-12-2018  அல்லது 14-12-2018 ஆம் தேதிகளின் வாக்கில் மேடன் ஜூலியன் அலைவு (#MJO) ஆனது அதன் 4 வது கட்டத்துக்கு (Phase 4)  1க்கும் அதிகமான வீச்சு அளவுடன் வலுவாக நகர்ந்து செல்லலாம் மேலும் அதற்கு அடுத்த 7 முதல் 8 நாட்கள் அது அதனுடைய 4வது கட்டத்திலயே தொடரலாம்.என்னை பொறுத்தமட்டில் தற்பொழுது உருவாகியிருக்கும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒரு புயலாக உருவெடுக்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவே கருதுகிறேன்.

தற்பொழுதே புயல் எங்கு கரையை கடக்கும் என்று உறுதியாக யாராவது பதிவிட்டு இருந்தால் அதில் நம்பகத்தன்மை 10% சதவிகிதம் கூட இல்லை என்று தான் கூறுவேன்.அவை வானிலை ஆராய்வுகளாகவோ அல்லது அதனை தெரிவிப்பவர்கள் ஒரு வானிலை ஆராய்ச்சியாளர்களாகவோ இருக்க முடியாது அவை வெறும் வானிலை அனுமானங்களாக மட்டுமே இருக்க முடியும்.இன்று அனைவரிடம் வானிலை தொடர்பான தகவல்களை அறிய கைக்கு அடக்கமான செயலிகள் உண்ட.தற்பொழுது நிலவி வரும் வானிலை தகவல்களை கொண்டு அடுத்த சில மாதங்களுக்கான வானிலை எப்படி இருக்கலாம் என்பதை கணிக்கக்கூடிய அளவிலான செயலிகளும் உள்ளன.ஆனால் அவை அனைத்தும் நிகழ் நேர தகவல்களுக்கு தகுந்தாற் போல சில மணி நேர இடைவெளியில் தங்களை புதுப்பித்துக் கொள்பவை.நாட்கள் நெருங்க நெருங்க தான் ஒரு நிகழவு குறித்த தெளிவான தக்வலைகள் தெரியவரும்.ஆகவே தேவையற்ற வதந்திகளை நம்பி யாரும் அச்சம்கொள்ள தேவையில்லை.இதைப்போன்ற தருணங்களில் மாதிரிகளின் தகவல்கள் நிலையற்றவை என்பதை நாம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.தற்போதே புயல் எங்கே கரையை கடக்கும் என்பவை போன்ற அனுமானங்களை பரப்பி வருபவர்கள் மக்கள் மனதில் எழும் தேவையற்ற பயத்தையும் / பதட்டத்தையும் தவிர வேறு எதையும் அறுவடை செய்ய இயலாது.அது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்த பிறகே அதன் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து உறுதியாக பதிவிடுவது முறையானதாக இருக்கும்.

காற்றலுத்த தாழ்வு மண்டலமோ அல்லது புயலோ எங்கு கரையை கடக்க வாய்ப்புகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள் ? என்று நமது பக்கத்தில் இணைந்திருக்கும் நண்பர்கள் சிலர் என்னிடம் நேற்று கேள்வி எழுப்பினார்கள் அவர்களுக்கான என்னுடைய பதிலை அப்பொழுதே நான் அவர்களிடம் தெரிவித்து விட்டேன்.இந்த கேள்வியை உங்களிலும் பலர் என்னிடம் கேட்க நினைத்திருக்கலாம்.அப்படி உங்கள் மனதிலும் இந்த கேள்வி எழுந்திருத்தல் எனது பதிலை பொதுவாகவே இங்கு தெரிவித்து விடுகிறேன்.

எனது பதில்  : இந்த முறை அது வட தமிழகத்துக்கு முற்றிலும் பலன் வழங்காமல் போய்விட வாய்ப்புகள் குறைவு .நாட்கள் நெருங்க நெருங்க வட தமிழகத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.அதன் வலிமை மற்றும் அது எந்த பகுதியில் கரையை கடக்க வாய்ப்புகள் உள்ளது என்பதை போன்ற தகவல்களுடன் அது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  உருவெடுத்ததும் அதாவது 12-12-2018 அல்லது 13-12-2019 ஆம் தேதி வாக்கில் உறுதியாக பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...