தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

23-04-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

23-04-2019 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

23-04-2019 நேரம் அதிகாலை 1:35 மணி இன்றும் தமிழகத்தின் மேற்கு உள் ,மேற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது வழக்கம்போல இது தொடர்பாக நமது பக்கத்தில் அவ்வப்பொழுது நிகழ்நேரத்திலும் பதிவிடுகிறேன்.24-04-2019 ஆகிய நாளை மறுநாள் முதல் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பதிவாகும் மழையின் அளவு குறைய தொடங்க வாய்ப்புகள் உள்ளது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அவ்வப்பொழுது சில இடங்களில் அடுத்து வரக்கூடிய நாட்களிலும் மழைக்கு வாய்ப்புகள் உண்டு மற்றபடி காற்றின் திசையை பொறுத்து அங்கும் இங்குமாக ஓரிரு உள் மாவட்ட பகுதிகளில் மட்டும் அவ்வப்பொழுது மழை பதிவாகலாம்.


புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு
---------------------------------------------------------------------------------------------
தற்பொழுது பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள வடகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது 24-04-2019 ஆம் தேதி வாக்கில் அதாவது நாளை பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள வட கிழக்கு இந்திய பெருங்கடல் (Equatorial North-East Indian Ocean)  பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை (Low Pressure) உருவாக வாய்ப்புகள் உள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களில் அது வட மேற்கு திசையில் நகர்ந்து 26-04-2019 ஆம் தேதி வாக்கில் வங்கக்கடல் பகுதியை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அடைந்து அதன் பின்னர் அது மேலும் தீவிரமடைய தொடங்கலாம்.தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களுக்கான  மழை வாய்ப்புகள் அனைத்தும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் அடுத்த கட்ட நகர்வுகளை பொறுத்தது.

Madden-Julian Oscillation (MJO) வின் தாக்கம்
--------------------------------------------------------------
கடந்த 14-04-2019 ஆம் தேதி ஆண்டு நமது பக்கத்தில் பதிவிட்டு இருந்த அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தொடர்பான பதிவில் மேடன்-ஜூலியன் அலைவு (#MJO) ஆனது அதன் இரண்டாவது கட்டத்தில் 1க்கும் குறைவான வீச்சு அளவுடன் வலுகுறைந்து இருப்பதாகவும் அடுத்து வரக்கூடிய நாட்களில் அது வலுவடைய வாய்ப்பு உள்ளது  என்று குறிப்பிட்டு இருந்தேன்.அதன்படி நேற்று முன்தினம் அதாவது 20-04-2019 அன்று அது வலுவடைந்து 1க்கும் அதிகமான வீச்சு அளவை கொண்டிருந்தது தற்பொழுது அது MJO ஆனது அதன் 2 வது கட்டத்தில் (2nd PHASE)  1க்கும் அதிகமான வீச்சு (AMPLITUDE) அளவுடன் வலுவாக உள்ளது அடுத்த இரண்டு நாட்களில் அது இதே வலுவுடன் அதனுடைய 3 வது கட்டத்துக்கு பயணிக்கலாம் இது அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைய மிக சாதகமான சூழலை உருவாக்கிக்கொடுக்கும்.

மாதிரிகளின் தற்போதைய நிலையின் நம்பகத்தன்மை
-------------------------------------------------------------------------------------
தற்பொழுது சில மாதிரிகள் உருவாக இருக்கும் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புகள் உள்ளது என்பதைப் போன்ற தகவல்களை வழங்கி வருகின்றன இன்னமும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையே உருவாகத நிலையில் மாதிரிகளின் கணிப்புகளில் இருக்கும் உறுதித்தன்மையை கேள்விக்குறிகளை கொண்டு மட்டுமே நிரப்பமுடியும் அதே போல நம்பகத்தன்மை என்பதும் வெறும் 10% சதவிகிதம் தான்.ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையே உருவாகாத நிலையில் அது எங்கு கரையை கடக்கும் என்பதை நாம் விவாதிக்க வேண்டிய அவசியமே இங்கு இல்லை.அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதும் அதன் நகர்வுகள் தொடர்பாக அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.

எப்பொழுது ஒரு தெளிவு கிடைக்கும்  ?
-----------------------------------------------------------
அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை / பகுதி வங்கக்கடல் பகுதிகளை அடைந்ததும் அதன் நகர்வுகளில் ஒரு தெளிவு கிடைக்கும்.ஒருவேளை அது தென் மேற்கு வங்கக்கடல் பகுதியை நெருங்க முற்பட்டால் தமிழகத்துக்கு சிறு பலனையாவது வழங்காமல் சென்றுவிட்டது என்று நம்பலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...