தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

25-04-2019 தற்போதைய வானிலை தொடர்பான தகவல்கள் மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகிய பகுதிகள் தொடர்பான நிலவரம்

25-04-2019 நேரம் காலை 11:05 மணி கடந்த 24 மணி நேரத்தில் #கன்னியாகுமரி ,தேனி மற்றும் #தூத்துக்குடி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் தகவல்களை கீழே பதிவிட்டு உள்ளேன்.இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

நாம் எதிர்பார்த்ததைப் போன்று நேற்று பூமத்திய ரேகை அருகே உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது தற்பொழுது இந்தியப் பெருங்கடலை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அது சற்று வலுப்பெற்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைக் கொண்டுள்ளது.அது தொடர்பான தகவல்களை இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.

25-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

#குழித்துறை - #KUZHITHURAI (கன்னியாகுமரி மாவட்டம் ) - 26  மி.மீ
#உத்தமபாளையம் - #UTTAMAPALAIYAM  (தேனி மாவட்டம் ) - 26 மி.மீ
#கடம்பூர் - #KADAMBUR (தூத்துக்குடி மாவட்டம் ) - 26 மி.மீ
#கூடலூர் - #GUDALUR (தேனி மாவட்டம் ) - 22 மி.மீ
#தேக்கடி (தேனி மாவட்டம் ) - 17 மி.மீ
#சுரலக்கோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ
#புத்தன்அணை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ
#கீரிப்பாறை  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 9 மி.மீ
#போடிநாயக்கனுர் (தேனி மாவட்டம் ) - 7 மி.மீ
#கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம் ) - 7 மி.மீ
#பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 5 மி.மீ
#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 5 மி.மீ
#கழியேல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 6 மி.மீ 
#சின்கோனா - #CINCONA (கோவை மாவட்டம் ) - 4 மி.மீ
#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 2  மி.மீ
#கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம் ) - 2 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...