தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

27-04-2019 வங்கக்கடல் பகுதியில் அடுத்த சில மணி நேரங்களில் உருவாக இருக்கும் FANI (ஃ பணி ) புயலின் தற்போதைய நிலவரம்

27-04-2019 நேரம் காலை 10:50 மணி நேற்று பூமத்திய ரேகை அருகே இருக்கும் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (DEPRESSION) நாம் எதிர்பார்த்ததைப் போல ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (DEEP DEPRESSION) வலுப்பெற்றது.இன்று காலை 6:00 மணி வாக்கில் அது சென்னைக்கு 1210 கி.மீ தென் கிழக்கு திசையிலும் மசூலிப்பட்டினம் பகுதிக்கு 1500 கி.மீ  தென் - தென் கிழக்கு திசையிலும் இலங்கையின் திருகோணமலை பகுதிக்கு 870 கி.மீ கிழக்கு -தென் கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது மேலும் அது தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் அடுத்த சில மணி நேரங்களில் அது #FANI (ஃபணி ) புயலாக உருவெடுக்கலாம் இன்று மாலை அல்லது இரவுக்குள் அது #FANI (ஃபணி ) புயலாக உருவெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.அது ஒரு புயலாக உருவெடுத்ததும் மீண்டும் பதிவிடுகிறேன்.அடுத்த வரக்கூடிய நாட்களில் அது வட மேற்கு திசையில் நகர்ந்து 30-04-2019 ஆம் தேதி வாக்கில் வட தமிழக மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளுக்கு நெருக்கத்தில் வந்து அதன் பின்னர் நான் முன்பே பதிவிட்டு இறந்தது போல தாய்லாந்து கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியிருக்கும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவி வரும் உயர் அழுத்தத்தின் (High pressure) அதவாது சூறாவளி எதிர்ப்பு சுழற்சி (Anti Cyclone) யின் சுழற்சியின் தாக்கத்தால் அது வளைந்து வட கிழக்கு திசையில் ஆந்திர மற்றும் ஒடிசாவின் கடலோர பகுதிகளை ஒட்டியே நகர்ந்து வங்கதேசம் அல்லது மியன்மார் பகுதிகளை அடைய முற்படலாம்.அதனுடைய நகர்வுகள் தொடர்பாக இன்று பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.

27-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்றும் குமாரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகள் உட்பட #கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்காங்கே மிதமான மழை பதிவாகியுள்ளது அதேபோல #நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாகியுள்ளது.

27-04-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#சுரளக்கோடு - #SURALACODE(கன்னியாகுமரி மாவட்டம் ) - 42 மி.மீ
#குழித்துறை - #KUZHITHURAI (கன்னியாகுமரி மாவட்டம் ) - 24 மி.மீ
#புத்தன் அணை  - #PUTHANDAM (கன்னியாகுமரி மாவட்டம் ) - 18 மி.மீ
#பெருஞ்சாணி  - #PERUNCHANI(கன்னியாகுமரி மாவட்டம் ) - 17 மி.மீ
#தக்களை  - #THUCKALAY (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ
#தென்காசி (நெல்லை மாவட்டம் ) - 6 மி.மீ
#இரணியல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 4 மி.மீ
கழியேல்  - KALIEL (கன்னியாகுமரி மாவட்டம் ) - 4 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 4 மி.மீ
#ஆயிக்குடி (நெல்லை மாவட்டம் ) - 3 மி.மீ
#பாபநாசம் (நெல்லை மாவட்டம் ) - 3 மி.மீ
#கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 1 மி.மீ

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...