தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

28-04-2019 ஃபனி புயலின் தற்போதைய நிலை | கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்

28-04-2019 நேரம் காலை 11:25 மணி இன்று காலை 5:30 மணி அளவில் அந்த #FANI (ஃபனி) புயலானது சென்னைக்கு 1230 கி.மீ தென் கிழக்காகவும் மசூலிப்பட்டினத்துக்கு 1050 கி.மீ தென் -தென் கிழக்காகவும் இலங்கையின் திருகோணமலைக்கு 745 கி.மீ கிழக்கு - தென் கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது மேலும் சற்று முன்பு அதன் மையப்பகுதி அருகே காற்றின் வேகம் மணிக்கு கிட்டத்தட்ட 93 கி.மீ என்கிற அளவில் பதிவாகி வந்தது அது ஒரு தீவிர புயலாக இன்னும் உருவெடுக்கவில்லை என்பதை இது உறுதிப் படுத்துகிறது அது தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் அடுத்த சில மணி நேரங்களில் இன்று மாலை அல்லது இரவு வாக்கில் அது ஒரு தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளது.

 #FANI (ஃபனி) புயலின் நகர்வுகள் தொடர்பாக நாம் இதற்கு முன்பாகவே பல பதிவுகளில் விவாதித்து விட்டோம் ஆகையால் அதனை இங்கே  மீன்டும் அதனை பதிவிட வேண்டிய தேவை ஏற்படவில்லை என கருதுகிறேன்.மேலும் இன்று பிற்பகலில் அந்த புயலின் அப்போதைய நிலை குறித்தும். தமிழகத்திற்கான மழை வாய்ப்புகள் தொடர்பாகவும் பதிவிடுகிறேன்.

28-04-2019 கடந்த 24 மணி நேரத்தில் #நீலகிரி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அங்கும் இங்குமாக லேசான மழை பதிவாகியுள்ளது.இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.

28-04-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 7 மி.மீ
#கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 5 மி.மீ
#கிளன் மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 2 மி.மீ

அனைவருக்கும் எனது காலை நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...