தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

29-04-2019 #FANI (#ஃபாணி) புயலின் தற்போதைய நிலை காலை நிலவரப்பபடி | கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்

29-04-2019 நேரம் காலை 11:40 மணி இன்று அதி காலை 5:30 மணி யளவில் அந்த #FANI (#ஃபாணி) புயலானது  880 கி .மீ தொலைவில் சென்னைக்கு கிழக்காகவும் 1050 கி.மீ தொலைவில் மசூலிப்பட்டினத்துக்கு தென் -தென் கிழக்காகவும் 620 கி.மீ திருகோணமலைக்கு கிழக்காகவும் வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து இன்று காலை அறிக்கை வெளியாகி இருந்தது இன்று காலை 8:00 மணி வாக்கில் நான் நான் அந்த #FANI (#ஃபாணி) புயலின் நகர்வுகள் தொடர்பாக தனியார் வானிலை தளங்களின் உதவியுடன் பின்தொடர்ந்து வந்தேன்.அதன்படி காலை 8:00 மணி வாக்கிலும் அதனுடைய அதிக பட்ச வேகம் மணிக்கு 83 முதல் 101 கி.மீ களுக்கு உள்ளாகவே அதாவது 45 முதல் 55 knots களுக்கு உள்ளாகவே இருந்தது.இன்னமும் அது ஒரு தீவிர புயலாக உருவெடுக்கவில்லை என்பதை நாம் இதன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.அதேசமயம் அது தீவிரமடைய தொடங்கியுள்ளது.அடுத்த சில மணி நேரங்களில் அது மேலும் தீவிரமடைய தொடங்கி இன்று மாலை அல்லது இரவுக்குள் ஒரு தீவிர புயலாக உருவெடுக்க முற்படலாம்.மேலும் அச்சமயம் அதாவது காலை 8:00 மணி வாக்கில் அது கிட்டத்தட்ட சென்னைக்கு 860 கி.மீ தென் கிழக்கு திசையில் நிலைக் கொண்டிருக்கலாம்.இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை .அடுத்த அதிகாரபூர்வ அறிக்கை வானிலை ஆய்வு  மையத்திடம் இருந்து வெளியான பிறகு இன்று பிற்பகலில் அந்த தற்போதைய சூழல்களுக்கு ஏற்ப அந்த #FANI (#ஃபாணி) புயலின் நகர்வுகள் தொடர்பாகவும் மீண்டும் பதிவிடுகிறேன்.

29-04-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#தங்கச்சிமடம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 3 மி.மீ
#ராமேஸ்வரம் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 2 மி.மீ
#பாம்பன் (ராமநாதபுரம் மாவட்டம் ) - 2 மி.மீ 


அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...