தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

29-04-2019 பிற்பகல் 2:00 மணி #FANI (ஃபாணி)புயலின் தற்போதைய நிலை - அடுத்த 24 மணி நேரத்தின் மழை வாய்ப்புகள்

29-04-2019 நேரம் பிற்பகல் 2:20 மணி இன்று 11:00 மணி வாக்கில் வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து வெளியான அறிக்கையில் இடம்பெற்று இருக்கும் தகவல்களின் படி 29-04-2019 ஆகிய இன்று காலை 8:30 மணி வாக்கில் சென்னைக்கு 870 கி.மீ தொலைவில் தென் கிழக்கு திசையிலும் மசூலிப்பட்டினத்துக்கு 1040 கி.மீ தென் -தென் கிழக்கு திசையிலும் இலங்கையின் திருகோணமலைக்கு 620 கி.மீ கிழக்கிலும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் அந்த #FANI (ஃபாணி) புயல் நிலைக் கொண்டிருந்ததாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.நான் காலையில் பதிவிட்டு இருந்தது போல அது தீவிரமடைந்து வருவதால் அடுத்த சில மணி நேரங்களில் அது ஒரு தீவிர புயலாக உருவெடுக்க முற்படலாம்.தற்போதைய சூழல்களின் அடிப்படையாக கொண்டு பர்ர்க்கையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் அது வட மேற்கு திசையில் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர முற்பட்டு 01-05-2019 அல்லது 02-05-2019 ஆம் தேதி வாக்கில் அது வளைந்து (Recurve) வட - வட கிழக்கு திசையில் நகர முற்படலாம் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அது தொடர்ந்து தீவிரமடைந்து ஒரு அதி தீவிர புயலாக (Extremely Severe Cyclone) உருவெடுத்து 03-05-2019 அல்லது 04-05-2019 தேதிகளில் வாக்கில் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை நெருங்கி ஒடிசாவின் கடலோர பகுதிகளை அடைய முற்படலாம்.சூழல்களுக்கு ஏற்ப அதனுடைய நகர்வுகள் தொடர்பாக அவ்வப்பொழுது நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.

29-04-2019 இன்று மழை பதிவாக வாய்ப்புகள் உள்ள பகுதிகள்
--------------------------------------------------------------------------------
29-04-2019 ஆகிய இன்று நான் எனது கடந்த காணொளிகளில் குறிப்பிட்டு இருந்தது போல அது அரபிக்கடல் பகுதிகளில் இருந்து காற்றை இழுப்பதால் #கேரள (#KERALA) மாநிலத்தில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்புகள் உண்டு தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை (#Western Ghats) பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.மேற்கு மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மிதமான மழை பதிவாகலாம்.மேலும் #கர்நாடக (#KARNATAKA) மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.


அடுத்து வரக்கூடிய நாட் களுக்கான மழை வாய்ப்புகள் (புயலின் நகர்வுகளை பொறுத்து மாறுதல்களுக்கு உட்பட்டது )
----------------------------------------------------------------------
தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கும் அதாவது 30-04-2019 மற்றும் 01-05-2019 ஆம் தேதிகளிலும் ஆங்காங்கே மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு அதேபோல அந்த  #FANI (ஃபாணி) புயலானது எந்த இடத்தில எந்த திசையில் நம்மை விட்டு விலகி செல்ல முற்படும் என்பதைப் பொறுத்து உள் மாவட்டங்களில் ஆங்காங்கே நல்ல மழை பதிவாகலாம் தற்போதைய சூழலில் 01-05-2019 ஆம் தேதி வாக்கில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக உட்பட சேலம் ,தர்மபுரி ,கிருஷ்னகிரி மாவட்டங்களிலும் சில இடங்களில் நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் நான் முன்பு குறிப்பிட்டு இருந்தது போல அந்த புயலின் நகர்வுகளை பொறுத்து அந்த உள் மாவட்ட பகுதிகளுக்கான மழை வாய்ப்புகள் மாறுதல்களுக்கு உட்பட்டது.அதனால் இது தொடர்பாக நாளை உறுதி செய்கிறேன்.

அது ஒரு தீவிர புயலாக உருவெடுத்ததும் மீண்டும் பதிவிடுகிறேன் அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...