தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தமிழகத்தில் தற்பொழுது பதிவாகி வரும் மழை தொடர்பான தகவல்கள்

29-04-2019 நேரம் இரவு 8:15 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் காரைக்கால் வானிலை ஆய்வு மைய ராடார் படம் மற்றும் #FANI (ஃபனி ) நிலைகொண்டிருக்கும் தகவல்கள் அடங்கிய செயற்கைகோள் படம் இன்று இரவு 8:00 மணி வாக்கில் பதிவானது அதன்படி தற்சமயம் மதுரை மாவட்டத்தில் ஆங்காங்கே மிக வலுவான மழை மேகங்கள் பதிவாக தொடங்கியிருக்கின்றன நான் பிற்பகலில் எனது பதிவில் பதிவிட்டு இருந்தது  போல #கேரள மாநிலத்தின் பல இடங்களிலும் #கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன தற்சமயம் #மதுரை மாவட்டம் #பேரையூர் - #ஏழுமலை ,#மல்லபுரம்  சுற்றுவட்டப் பகுதிகளில் மிக மிக வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அப்பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடனான இடியுடன் கூடிய மழை பதிவாகி வரலாம் மேலும் தற்சமயம் #மதுரை மாநகரின் மேற்கு பகுதிகள் உட்பட #திருமங்கலம் ,#திருப்பரங்குன்றம்  , #வில்லூர் சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதே போல #உசிலம்பட்டி , #மகாராஜபுரம் பகுதிகளின் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன அதே போல #சிவகங்கை மாவட்டம் #திருபுவனம் - #இடைக்காட்டூர் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன சற்று முன்பு #மதுரை மாநகரின் கிழக்கு பகுதிகளிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்ததை செயற்கைகோள் படங்களின் உதவியுடன் அறிய முடிகிறது ,#பாலமேடு  ,#திருவாதவூர் , #நரசிங்கம் உட்பட #மதுரை மாநகரை சுற்றி இருக்கும் அதன் புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து அங்கும் இங்குமாக மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #தேனி மாவட்டம் #மேகமலை சுற்றுவட்டப் பகுதிகளிலும் #விருதுநகர் மாவட்டம் #ராஜபாளையம்  சுற்றுவட்டப் பகுதிகளிலும் தொடர்ந்து அங்கும் இங்குமாக மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன #ஸ்ரீவில்லபுத்தூர் பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்தததை அறிய முடிகிறது அதே போல #நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை மேகங்கள் அங்கும் இங்குமாக பதிவாகி வருவதையும் அறியமுடிகிறது இவை தவிர்த்து தற்பொழுது #சேலம் மாவட்டம் #மேட்டூர்  அருகே #மேச்சேரி , #தோப்பூர்  சுற்றுவட்டப் பகுதிகளிலும் #எடப்பாடி சுற்றுவட்டப் பகுதிகளிலும் சற்று வலுவான மழை மேகங்கள் பதிவாக தொடங்கியிருக்கின்றன மேலும் #தளவாடி உட்பட #ஈரோடு மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் #திருப்பூர் மாவட்டத்தின் சில தெற்கு பகுதிகளிலும் அங்கும் இங்குமாக மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன முன்னதாக #வால்பாறை  , #மறையூர் மற்றும் #தர்மபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிகிறது.

நிகழ் நேரத்தில் மழை பதிவாகி வரும் தகவல்கள் தொடர்பாக மீண்டும் YOUTUBE இல் பதிவிடுகிறேன்.

#FANI புயலின் தற்போதைய நகர்வுகள் தொடர்பாக இன்னும் சில மணி நேரங்களில் நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...