தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

30-04-2019 அதி தீவிர புயலாக உருவெடுத்தது FANI (ஃபனி) | கடந்த 24 மணி நேரத்தில் தமிழிககத்தில் பதிவாகிய மழை தொடர்பான தகவல்கள்

30-04-2019 நேரம் காலை 10:30 மணி இன்று காலை 5:30 மணி வாகில் அந்த #FANI (ஃபனி) தீவிர புயலானது ஒரு அதி தீவிர புயலாக (Very Severe Cyclone) என்கிற நிலையை எட்டியது மேலும் கடந்த 6 மணி நேரத்தில் அது மணிக்கு 16 கி.மீ என்கிற வேகத்தில் நகர்ந்து வருகிறது தற்பொழுது அதன் சுழற்சியின் அதிகபட்ச வேகம் மணிக்கு 85 Knots அதாவது 157 கி.மீ என்கிற அளவில் இருந்தது அது வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் ஒரு Extremely Severe Cyclone என்கிற நிலையை எட்டலாம்.அது இன்று காலை 5:30 மணி வாக்கில் சென்னைக்கு 690 கி.மீ கிழக்கு - தென் கிழக்கிலும் மசூலிப்பட்டணத்துக்கு 760 கி.மீ தென் கிழக்கு திசையிலும் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது தமிழகத்தை பொறுத்தவரையில் இதனால் காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 50 கி.மீ வரை சில இடங்களில் அதிகரிக்கலாம் மற்றபடி பெரிய அளவிலான பாதிப்புகள் என்று எதுவும் இருக்க வாய்ப்புகள் இல்லை.நாம் எதிர்பார்த்ததை போல 01-05-2019 அல்லது 02-05-2019 ஆம் தேதி வாக்கில் அது அதனுடைய திசையை மாற்றிக்கொண்டு வளைந்து (recurve) வட - வட கிழக்கு திசையில் பயணித்து வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை நெருங்கி ஒடிசாவின் கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படலாம் பின்னர் நிலப்பகுதிகளிலேயே அது பயணித்து மேற்கு வங்கத்தை கடந்து வங்கதேசத்துக்கு பயணிக்க முற்படலாம்.அந்த #FANI (ஃபனி)அதி தீவிர புயலின் நகர்வுகள் தொடர்பாகவும் அது காற்றை தம்வசம் இழுப்பதால் தமிழக உள் பகுதிகளின் சில இடங்களின் மழை வாய்ப்புகள்  தொடர்பாகவும் இன்று பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.

30-04-2019 இன்றும் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் கேரள மாநிலத்திலும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பதிவாக வாய்ப்புகள் உண்டு.

30-04-2019 இன்று காலை 8:30 மணி வாக்கில் பதிவான மழை அளவுகளின் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#புத்தன் அணை - #PUTHANDAM (கன்னியாகுமரி மாவட்டம் ) - 78 மி.மீ
#பெருஞ்சாணி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 78 மி.மீ
#சுரலகோடு (கன்னியாகுமரி மாவட்டம் ) - 37 மி.மீ
#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 33 மி.மீ
#விரகனூர் - மதுரை தெற்கு (மதுரை மாவட்டம் ) - 26 மி.மீ
#மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 24 மி.மீ
#தொட்டபேட்டா  - #உதகை (நீலகிரி மாவட்டம் ) - 22 மி.மீ
#இடையப்பட்டி - #திருவாதவூர் (மதுரை மாவட்டம் ) - 18 மி.மீ
#மதுரை விமான நிலையம்  - #முல்லக்குளம் (மதுரை மாவட்டம் ) - 18 மி.மீ
#சித்தாறு II  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 18 மி.மீ 
#திருமங்கலம் (மதுரை மாவட்டம் ) - 16 மி.மீ
#கூடலூர்  (நீலகிரி மாவட்டம் ) - 15 மி.மீ
#குழித்துறை  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 13 மி.மீ
#கெட்டி - #KETTI  (நீலகிரி மாவட்டம் ) - 13 மி.மீ
பெரியார் (தேனி மாவட்டம் ) - 13 மி.மீ
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) - 12 மி.மீ
#தேக்கடி (தேனி மாவட்டம் ) - 11 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 10 மி.மீ
#நடுவட்டம்  (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
#எருமைப்பட்டி (நாமக்கல் மாவட்டம் ) - 10 மி.மீ
#கோத்தகிரி (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ
#நாங்குநேரி (நெல்லை மாவட்டம் ) - 10 மி.மீ
தானிஸ்பேட் (சேலம் மாவட்டம் ) - 9 மி.மீ
#கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 8 மி.மீ
கழுகுமலை (தூத்துக்குடி மாவட்டம் ) - 8 மி.மீ
#சிவகிரி (நெல்லை மாவட்டம் ) - 8 மி.மீ
#மதுரை தெற்கு (மதுரை மாவட்டம் ) - 7 மி.மீ
#பேரையூர் (மதுரை மாவட்டம் ) - 7 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 7 மி.மீ
கொளச்சல்  (கன்னியாகுமரி மாவட்டம் ) - 7 மி.மீ
#எமரால்டு (நீலகிரி மாவட்டம் ) - 7 மி.மீ
#பெருந்துறை (ஈரோடு மாவட்டம் ) - 6 மி.மீ
#கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம் ) - 6 மி.மீ
#வாழப்பாடி (சேலம் மாவட்டம் ) -6 மி.மீ
குன்னூர் (நீலகிரி மாவட்டம் ) - 6 மி.மீ
#ஈரோடு (ஈரோடு மாவட்டம் ) - 4 மி.மீ
அவலாஞ்சி (நீலகிரி மாவட்டம் ) - 4 மி.மீ
#மோகனுர் (நாமக்கல் மாவட்டம் ) - 3 மி.மீ
தல்லாகுளம் (மதுரை மாவட்டம் ) - 2 மி.மீ

முழுமையான பட்டியல் வெளியானதும் இங்கு புதுப்பிக்கிறேன். அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை  கொள்கிறேன்



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...