தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

FANI தீவிர புயலின் தற்போதைய நிலை

30-04-2019 நேரம் பிற்பகல் 1:50 மணி இன்று நன்பகல் 12:00 மணி வாக்கில் வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து வெளியாகிய அறிக்கையில் இடம்பெற்று இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இன்று காலை 8:30 மணி வாக்கில் அந்த மிக தீவிர புயலான #FANI (ஃபாணி ) விஷாக்கப்பட்டினம்  நகருக்கு 670 கி.மீ தென் -தென் கிழக்கு திசையில் தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டியிருக்கும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருப்பதாக தெவிக்கப்பட்டுள்ளது.மேலும் அது மணிக்கு 23 கி.மீ வட -வட மேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்சமயம் பதிவாகி வரும் செயற்கைகோள் படங்களின் உதவியுடன் பார்க்கையில்அந்த  #FANI (ஃபாணி ) மிக தீவிர புயலின் மையப்பகுதியானது தற்பொழுது சென்னைக்கு கிட்டத்தட்ட 500 கி.மீ தொலைவில் கிழக்கில் நிலைகொண்டிருக்க வேண்டும்.நாம் முன்பு பதிவிட்டு இருந்தது போல் அடுத்து வரக்கூடிய நாட்களில் அது மேலும் தீவிரமடைந்து ஒரு Extremely Severe Cyclone என்கிற நிலையை எட்டி 03-05-2019 அல்லது 04-05-2019 ஆம் தேதிகளின் வாக்கில் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை நெருங்கி ஒடிசாவின் தெற்கு கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படலாம்.

30-04-2019 இன்றைய மழைக்கான வாய்ப்புகள்
----------------------------------------------------------------------
30-04-2019 இன்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் ,கேரள மாநில பகுதிகள் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆங்காங்கே நல்ல மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் #பெங்களூரு (#Bangalore) சுற்றுவட்டப் பகுதிகளில் குறிப்பாக மேற்கு பகுதிகளில் (West Bangalore) ஆங்காங்கே கனமழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதே போல #MYSORE சுற்றுவட்டப் பகுதிகளிலும் மழை பதிவாகலாம்.தமிழகத்தின் பிற பகுதிகளை பொறுத்தவரையில் இன்று ஈரோடு உள்ளிட்ட மேற்கு உள் மாவட்டங்களிலும் மதுரை ,சிவகங்கை உட்பட தென் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்மேலும் அந்த புயலின் நகர்வுகளை உள் பொறுத்து காற்றின் திசையில் ஏற்படவுள்ள  மாற்றங்களை பொறுத்து உள் தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பதிவாகலாம்.

02-05-2019 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
--------------------------------------------------------------------

அந்த #FANI (ஃபாணி ) புயலானது 02-05-2019 ஆம் தேதி முதல் அதாவது வட -வட கிழக்கு திசையில் வளைந்து (recurve) நம்மை விட்டு விலகி செல்லும் பொழுது தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலையானது அதிகரிக்க தொடங்கலாம் அதற்கு அடுத்த உவரக்கூடிய நாட்களில் கடலோர மாவட்டங்களிலும் ,கடலோர பகுதிகளிலும் 100° பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாக தொடங்கலாம் இன்றே சென்னை மனாஃரில் அதிகபட்சமாக 40.4°C வெப்பம் பதிவாகியுள்ளது இதை அடுத்து வரக்கூடிய நாட்களுக்கான தொடக்கமாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும் சென்னை மாநகர் மற்றும் அதனை புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் 04-05-2019 மற்றும் 05-05-2019 ஆம் தேதிகளின் வாக்கில் 40°C முதல் 42°C வரையிலான பகல் நேர வெப்பம் பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதே போல #காரைக்கால் மற்றும் #புதுச்சேரி பகுதிகளிலும் 04-05-2019 மற்றும் 05-05-2019 ஆம் தேதிகளில் வாக்கில் 37°C - 40°C வரையிலான பகல் நேர வெப்பம் பதிவாக வாய்ப்புகள் உள்ளது.தர்மபுரி ,வேலூர் ,திருவண்ணாமலை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,விழுப்புரம் ,கடலூர் , பெரம்பலூர் ,திருச்சி ,ஈரோடு ,சேலம் ,நாமக்கல் ,அரியலூர் ,தஞ்சை ,திருவாரூர் ,நாகை என அநேக வட மாவட்டங்களிலும் 02-05-2019 ஆம் தேதிக்கு பிறகு பகல் நேர வெப்பநிலை ஆனது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்து இருக்க வாய்ப்புகள் உள்ளது.

தென் தமிழகத்தை பொறுத்தவரையில் அந்த புயல் கரையை கடந்த பிறகு 04-05-2019 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு தற்போது நிலவி வரும் வெப்பநிலையை விட மேலும் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.


அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...