தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தீவிர புயலாக உருவெடுத்தது FANI (ஃபனி )

29-04-2019 நேரம் இரவு 10:05 மணி தற்பொழுது அந்த தீவிர புயலான (SEVERE CYCLONE)  #FANI (#ஃ பனி )  வடகடலோர மாவட்டங்களுக்கு கிழக்கே வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது தற்பொழுது அதாவது இரவு 8:00 மணி வாக்கில் அந்த  #FANI (#ஃ பனி ) புயலின் மையப்பகுதியானது காரைக்கால் பகுதிக்கு கிட்டத்தட்ட 750 கி.மீ  கிழக்கே வங்கக்கடல் பகுதியில் நிலைக் கொண்டிருப்பதை செயற்கைக் கோள் படங்களின் உதவியுடன் உறுதி செய்ய முடிகிறது.மேலும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி அந்த #FANI (#ஃ பனி ) புயல் ஒரு தீவிர புயலாக உருவெடுத்து இருப்பதாக அதில் தேரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இன்று மாலை 5:30 மணி வாக்கில் 770 கி.மீ சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கிலும் மசூலிப்பட்டினத்துக்கு 900 கி.மீ தென் -தென் கிழக்கு திசையிலும் இலங்கையின் திருகோணமலைக்கு 620 கி.மீ கிழக்கு - வட கிழக்கு திசையிலும் நிலைகொண்டு இருப்பதாக அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

29-04-2019 இரவு 8:00 மணி வாக்கில் தனியார் தளங்களின் உதவியுடன் அந்த தீவிர #FANI (#ஃ பனி ) புயலின் நகர்வுகளை பின் தொடர்ந்து வந்த பொழுது அச்சமயம் அதன் அதிகபட்ச வேகம் மணிக்கு கிட்டத்தட்ட 65 knots என்கிற அளவில் இருந்தது அதாவது கிட்டத்தட்ட மணிக்கு 120 கி.மீ என்கிற அளவில் இருந்தது.மேலும் அடுத்த சில மணி நேரங்களில் நாம் முன்பு எதிர்பார்த்ததைப் போல அது வட மேற்கு திசையில் நகர முற்படலாம் அதே போல அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் தீவிரமடைந்து மிகவும் தீவிரமான புயல் என்கிற நிலையை எட்டலாம் (Very Severe Cyclone) மேலும் அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் அது #Extremely Severe Cyclone என்கிற நிலையை எட்டிவிட அதிக வாய்ப்புகள் உள்ளது.மேலும் அடுத்து வரக்கூடிய நாட்களில் அது தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து 01-04-2019 அல்லது 02-04-2019 ஆம் தேதி வாக்கில் அது வளைந்து வட -வட கிழக்கு திசையில் நகர தொடங்கலாம்.அவ்வாறு அது நகர்ந்து 03-05-2019 அல்லது 04-05-2019 ஆம் தேதி வாக்கில் அது வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளை நெருங்கி ஒடிசாவின் கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படலாம்.சூழல்களுக்கு ஏற்ப இது தொடர்பாக அடுத்து வரக்கூடிய நாட்களில் மீண்டும் பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...