தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

27-04-2019 வங்கக்கடல் பகுதியில் உருவானது FANI - ஃபனி புயல் | அது எங்கு கரையை கடக்கலாம் ?

27-04-2019 நேரம் பிற்பகல் 3:50 மணி நாம் முன்பு எதிர்பார்த்ததை போல தற்பொழுது பூமத்திய ரேகை அருகே உள்ள வட கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் #FANI புயல் உருவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் சற்று முன்பு வெளியானது.இன்று காலை 11:30 மணி வாக்கில் அந்த #FANI (ஃபனி) புயலானது சென்னைக்கு 1190 கி.மீ தென் கிழக்காகவும் மசூலிப்பட்டினத்துக்கு 1460 கி.மீ தென் -தென் கிழக்காகவும் இலங்கையின் திருகோணமலைக்கு 880 கி.மீ கிழக்கு - தென் கிழக்காகவும் நிலைக்  கொண்டுள்ளது.அடுத்து வரக்கூடிய நாட்களில் அது வாடா மேற்கு திசையில் நகர முற்படலாம்.அதேசமயம் அந்த #FANI (ஃபனி) புயலானது தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் 28-04-2019 ஆகிய நாளை அது ஒரு தீவிர புயலாக உருவெடுக்கலாம் (Severe Cyclone) மேலும் அதற்கு அடுத்த 24 மணி நேரம் முதல் 36 மணி நேரத்தில் அதாவது 29-04-2019 ஆம் தேதி அது ஒரு தீவிர புயலாகவும் (Very Severe Cyclone) உருவெடுக்க வாய்ப்புகள் உள்ளது.நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல 30-04-2019 ஆம் தேதி வாக்கில் அது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் அருகே உள்ள கடல் பகுதியை சற்று நெருங்கலாம்.அது வட தமிழிக மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளை எந்த அளவு நெருங்குகிறதோ அதற்கு தகுந்தார்ப் போல மழை வாய்ப்புகள் அமையும் என்று தெரிவித்து இருந்தேன் தற்போதைய சூழலில் நாம் எதிர்பார்த்ததை விட முன்பாகவே அது ஒரு தீவிர புயலாக உருவெடுக்க வாய்ப்புகள் இருப்பதால் அது அவ்வளவு நெருக்கத்தில் வருமா என்பது கேள்விக்குறி தான்.அதே சமயம் நாம் அனைவருமே மழையை எதிர்பார்த்தே காத்திருக்கிறோம் ஆகையால் நான் மாதிரிகளின் தகவல்களை அடிப்படையாக கொண்டு உங்கள் எதிர்பார்ப்புகளை ஒரே வார்த்தையில் தகர்க்க விரும்பவில்லை.மாறுதல்களுக்காக உங்களுடன் நானும் காத்திருக்கிறேன்.அதே சமயம் அந்த புயல் நம்மை விட்டு விலகி சென்றாலும் அது எப்படி விலகி செல்கிறது என்பதை பொறுத்து காற்றின் திசை மாறுதல்களுக்கு  ஏற்ப உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளது.

அதன் பிறகான அந்த புயலின் நகர்வுகள் தொடர்பாக கடந்த பதிவிலேயே தெரிவித்து இருந்தேன்.அதனால் அதனை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என கருதுகிறேன்.அதனைக்கான கடந்த பதிவுக்கு செல்ல  - https://www.facebook.com/puduvaiweatherman/posts/2421497137874260

அந்த #FANI புயலின் நகர்வுகள் தொடர்பாக அவ்வப்பொழுது நமது பக்கத்தில் பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்







பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...