தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

01-05-2019-பிற்பகல் -#FANI (ஃபாணி ) புயலின் தற்போதைய நிலை |தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள்

01-05-2019 நேரம் பிற்பகல் 3:40 மணி இன்று பிற்பகல் 2:00 மணி வாக்கில் அந்த #FANI (ஃபாணி ) அதி தீவிர புயலானது Lattitude14.5°N மற்றும் Longitude 84.3°E இல் நிலைகொண்டிருந்தது காலையில் நான் பதிவிட்டு இருந்த அந்த #FANI (ஃபாணி ) புயல் நிலைகொண்டிருக்கும் பகுதி தொடர்பான தகவலை வானிலை ஆய்வு மையம் சற்று முன்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கும் தகவல்களுடன் ஒப்பிடுகையில் அந்த தகவல் கிட்டத்தட்ட துல்லியமாக உள்ளது என்பதை  உறுதி செய்ய முடிகிறது.சற்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அந்த அறிக்கையில் இன்று காலை 8:30 மணி வாக்கில் அந்த அதி தீவிர புயல் #FANI (ஃபாணி ) Lattitude14.1°N மற்றும் Longitude 83.9°E இல் நிலைகொண்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.இன்று நண்பகல் வாக்கில் பதிவான அந்த #FANI (ஃபாணி ) புயலின் செயற்கைக்கோள் படங்களையும் இந்த பதிவுடன் இணைத்துள்ளேன்.

மேலும் நான் இப்பொழுது பதிவிட்டு இருக்கும் அதன் நிலைப்பாட்டை இதற்கு முந்தைய தகவல்களுடன் ஒப்பிடுகையில் அது வட-கிழக்கு திசையில் நகர்ந்து செல்ல தொடங்கிவிட்டதை 100% உறுதி செய்ய முடிகிறது.


இன்றைய மழைக்கான வாய்ப்புகளை பொறுத்தவரையில் அந்த புயலின் நகர்வுகளை பொறுத்து மாற்றங்களுக்கு உட்பட்டது நேற்று அந்த புயல் மாலை முதல் இன்று அதிகாலை வரை வட - வட மேற்கு திசையில் நகர்வதை குறைத்து மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து வந்தது அதனால் மழை தென் உள் மாவட்டங்களில் சில இடங்களில் பதிவாகவில்லை தற்பொழுது இருக்கும் சூழலில் அது வட -வட கிழக்கு திசையில் நகர முற்படும் பட்சத்தில் தமிழிக வட உள் மாவட்டங்களில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது மேலும் கேரள மாநிலத்தின் வடக்கு பகுதிகள் கர்நாடக மாநிலத்தின் தெற்கு பகுதிகள் அதாவது பெங்களூரு சுற்றுவட்டப் பகுதிகளில் இன்றும் மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல கிருஷ்னகிரி ,தர்மபுரி மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம்.சேலம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களிலும் விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் இன்று சில இடங்களில் மழை பதிவாகலாம்.மற்றபடி அந்த புயலின் நகர்வுகளுக்கு ஏற்ப மழைக்கான வாய்ப்புகளையும் நிகழ் நேர மழை தகவல்களையும் ஒரு குரல் பதிவாக அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் சில இடங்களில் சிறிய வலு குறைந்த மழை மேகங்கள் உட்புக முற்படுகின்றன அங்கே சில இடங்களில் சாரல் பதிவாகலாம்.அனங்கூர் அருகிலும் மிகவும் வலுகுறைந்த மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகத்தின் பல இடங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து இருக்கலாம்.குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம்.இது பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கான வேகம் அல்ல தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள காலகட்டத்தில் காற்றின் வேகம் தமிழகத்தில் எப்படி இருக்குமோ அப்படி தான் கடலோர மாவட்டங்களில் இருக்கும்.மற்றபடி தாராபுரம் , பொள்ளாச்சி ,திருப்பூர்  , அரவாக்குறிச்சி ,கோடியக்கரை ,முத்துப்பேட்டை , கன்னியாகுமரி , முட்டம் , மணமேல்குடி  ,கேளம்பாக்கம் ,புதுச்சேரி ,ராமேஸ்வரம் ,பாம்பன் ,மண்டபம் ,ராமநாதபுரம் பகுதிகளில் மாலை நேரத்தில் அடுத்து வரக்கூடிய நாட்களில் காற்றின் வேகம் பிற இடங்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாக உணரப்படலாம் அதாவது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புகள் உள்ளது.அது எதனால் என்பதையும் இது தொடர்பான விரிவான தகவல்களையும்  குரல் பதிவாக பதிவிட்டு உள்ளேன் அதை அறிந்து கொள்ள - https://www.youtube.com/watch?v=BHgnFQ3NMCIஅனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...