தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

01-05-2019 இரவு FANI (ஃபாணி) அதி தீவிர புயலின் தற்போதைய நிலவரம்.

01-05-2019 நேரம் இரவு 10:30 மணி இன்று இரவு 8:00 மணி வாக்கில் அந்த அதி தீவிர புயலான #FANI (#ஃபாணி) கிட்டத்தட்ட Lattitude 15.1°N  Longitude 84.3°E இல் நிலை கொண்டிருந்ததை தனியார் வானிலை தளத்தின் உதவியுடன் அறிய முடிந்தது வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கையின் படி இன்று மாலை 5:30 மணி வாக்கில் #FANI (#ஃபாணி) புயலாந்து Lattitude 14.9°N  Longitude 84.1°E இல் நிலைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது கடந்த சில மணி நேரங்களில் வட-வட கிழக்கு திசையில் நகர்ந்து வருவதை இது உறுதி செய்கிறது.மேலும் வானிலை ஆய்வு மையத்தின் அந்த அறிக்கையில் அது மாலி விஷாகப்பட்டினத்துக்கு 320 கி.மீ தென் -தென் கிழக்கு திசையிலும் ஒடிசாவின் பூரி நகருக்கு 570 கி.மீ தென் -தென் மேற்காகவும் நிலைக் கொண்டு இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அந்த #FANI (#ஃபாணி) புயல் வட -வட கிழக்கு திசையிலேயே பயணித்து 03-05-2019 ஆம் தேதி பிற்பகல் அல்லது தற்கு பிறகு ஒடிசாவின் கடலோர பகுதிகளை நெருங்க முற்படலாம்.

இன்று இரவு 8:00 மணி வாக்கில் அந்த புயலின் அதிக பட்ச காற்றின் வேகம் கிட்டத்தட்ட 102 Knots அதாவது மணிக்கு 190 கி.மீ என்கிற அளவில் இருந்தது பிற்பகலில் கிட்டத்தட்ட 115 Knots அதாவது மணிக்கு 210 கி.மீ என்கிற அளவில் இருந்தது.அது ஒரிசாவின் கரையை நெருங்குகையில் அதன் அதிகபட்ச வேகம் கிட்டத்தட்ட 200 கி.மீ என்கிற அளவில் இருக்கலாம்.

இன்று தமிழகத்தில் மழை பதிவாகிய சில பகுதிகள் மற்றும் அவற்றுள் ஒரு சில பகுதிகளின் மழை அளவுகளுடன்.சற்று நேரத்தில் நமது youtube channel இல் பதிவிடுகிறேன்.அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை நாளை அதிகாலை அல்லது மாலை பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...