தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

01-05-2019 FANI (ஃபாணி ) அதி தீவிர புயலின் தற்போதைய நிலை | கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்

01-05-2019 நேரம் காலை 10:50 மணி நான் நேற்று இரவு எனது காணொளியில் தெரிவித்து இருந்தது  போல தற்பொழுது அந்த #FANI (#ஃபாணி) ஒரு அதி தீவிர புயலாக (Extremely Severe Cyclone) உருவெடுத்து மத்திய மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று அதிகாலை 5:30 மணி வாக்கில் நிலைக் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

இன்று அதிகாலை 2:30 மணி வாக்கில் அது கிட்டத்தட்ட 13.6°N 84.4°E இல் சென்னைக்கு கிட்டத்தட்ட 450 கி.மீ வட கிழக்கு திசையில் நிலைகொண்டிருந்தது இன்று காலை 5:30 மணிக்கு அது 13.9°N 84°E இல் நிலைகொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து வெளிவந்த தகவல்கள் தெரிவிக்கின்றன சற்று முன்பு அதன் பாதையை நான் அறிய முயன்றபொழுது இன்று காலை 8:00 மணி வாக்கில் அது கிட்டத்தட்ட 14.1°N 84°E நிலைகொண்டிருந்தது.இதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது அந்த அதி தீவிர புயலான #FANI (#ஃபாணி) தற்பொழுது வட -வட கிழக்கு திசையில் வளைந்து (Recurve) நகர தொடங்கியிருப்பது தெரியவருகிறது.அதேபோல சற்று முன்பு அதன் அதிகபட்ச வேகத்தை நான் கணக்கிட முயன்றபொழுது கிட்டத்தட்ட மணிக்கு 105 knots முதல் 115 knots வரையில் இருந்தது அதாவது கிட்டதத்த மணிக்கு 195 கி.மீ  - 212 கி.மீ வரையில் இருந்தது.அடுத்து வரக்கூடிய நாட்களில் அது அதே திசையில் பயணித்து 03-05-2019 ஆம் தேதி வாக்கில் ஒடிசாவின் கடலோர பகுதிகளை அடைய முற்படலாம்.இது தொடர்பாகவும் இன்றைய மழைக்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் பிற்பகலில் பதிவிடுகிறேன்.மேலும் வெப்பநிலை உயர்வு தொடர்பாகவும் அடுத்த வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை இன்று விரிவாக பதிவிடுகிறேன்.

01-05-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவான பகுதிகள் தொடர்பான தகவல்கள்.

#ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 34 மி.மீ 
#நாமக்கல் AWS (நாமக்கல் மாவட்டம் ) - 30 மி.மீ 
#அனைமடவு அணை (சேலம் மாவட்டம் ) - 29 மி.மீ 
#ஊத்தாங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 28 மி.மீ 
#ஓமலூர் (சேலம் மாவட்டம் ) - 26 மி.மீ 
#வாழப்பாடி (சேலம் மாவட்டம் ) - 22 மி.மீ 
#தேவாலா (நீலகிரி மாவட்டம் ) - 21 மி.மீ 
#மங்கலாபுரம் (நாமக்கல் மாவட்டம் ) - 20 மி.மீ
#கூடலூர் பஜார் (நீலகிரி மாவட்டம் ) - 18 மி.மீ 
#ராசிபுரம் (நாமக்கல் மாவட்டம் ) -17 மி.மீ
#தேன்கனிக்கோட்டை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 15 மி.மீ 
#கிளன்மோர்கன் (நீலகிரி மாவட்டம் ) -12 மி.மீ
#கொளச்சல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 12 மி.மீ 
#தானிஷ்பேட்டை (சேலம் மாவட்டம் ) - 11 மி.மீ 
#RDO அலுவலகம் அருகில் , நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) -11 மி.மீ
#நடுவட்டம் (நீலகிரி மாவட்டம் ) - 10 மி.மீ 
#தளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 10 மி.மீ 


10 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவாகிய பகுதிகள் தொடர்பாக இந்த பதிவில் பதிவிட வில்லை.எனது Youtube Channel இன் குரல் பதிவில் இன்னும் சற்று நேரத்தில் பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களுடன் மே தின வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

 

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...