தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

02-05-2019 பிற்பகல் 3:00 மணி FANI புயலின் தற்போதைய நிலவரம் | தமிழகத்தின் மழைக்கான வாய்ப்புகள்

02-05-2019 நேரம் பிற்பகல் 3:00 மணி இன்று பிற்பகல் 1:00 மணி வாக்கில் வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து வெளியாகிய தகவல்களின் படி 02-05-2019 ஆகிய இன்று காலை 11:30 மணி வாக்கில் அந்த அதி தீவிர புயலான #FANI (ஃபனி) Lattitude 16.7°N மற்றும் Longitude 84.8°E இல் விசாகபட்டினத்துக்கு 190 கி.மீ தென் -தென் கிழக்காகவும் ஒடிசா மாநிலம் பூரி (#PURI) க்கு 360 கி.மீ தென் - தென் மேற்காகவும் மேற்கு வங்க மாநிலம் திகா (#Digha ) வுக்கு 550 கி.மீ தென் -தென் மேற்காகவும் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருப்பதாக அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.தற்பொழுது அது விசாகப்பட்டினம் அருகே தென் கிழக்கு திசையில் நிலைகொண்டிருப்பதை செயற்கைகோள் படங்களின் வாயிலாக அறிய முடிகிறது மேலும் தற்சமயம் அதன் வெளிப்புற பகுதி #ஸ்ரீகாகுளம் (#Srikakulm) , #விஜயநகரம் (#Vizianagaram ) , #பிரமாபுர் (#Brahmapur ) அருகே விழுந்து வர வேண்டும் இதன் காரணமாக தற்பொழுது ஸ்ரீகாகுளம் (Srikakulm) சுற்றுவட்டப் பகுதிகளில் தற்சமயம் மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசி வரலாம்.அடுத்த சில மணி நேரங்களில் அந்த அதி தீவிர புயலானது மேலும் வட -வட கிழக்கு திசையில் நகர்ந்து இன்று இரவு ஸ்ரீகாகுளம் (Srikakulm) - பிரமாபுர் (#Brahmapur )சுற்றுவட்டப் பகுதிகளை மேலும் நெருங்கலாம் இதன் காரணமாக நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அப்பகுதிகளில் இன்று நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலை நேரங்களில் மணிக்கு 100 கி.மீ வேகம் வரையிலும் காற்று வீசலாம் சில இடங்களில் கனமழை பதிவாகவும் வாய்ப்புகள் உள்ளது. எதிர்பார்த்ததை போன்று 03-05-2019 ஆகிய நாளை காலை அந்த அதி தீவிர புயலான #FANI (ஃபனி) #பிரமாபுர் (#Brahmapur ) - #பூரி (#PURI) இடையே உள்ள கடலோர பகுதிகளில் கரையை கடக்க முற்படலாம் #சத்ராப்பூர் (#chhatrapur ) அருகே அது கரையை கடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.அது கரையை கடக்கையில் அப்பகுதிகளில் அதிகபட்சமாக 160 கி.மீ வரையிலும் காற்று வீசக்கூடும் .

தமிழகத்தின் இன்றைய மழைக்கான வாய்ப்புகளை பொறுத்தவரையில் அது அந்த புயலின் நகர்வுகளை பொறுத்தது.அதன் நகர்வுகளில் ஏற்படும் சிறு மாற்றங்களை பொறுத்து உள் தமிழகத்தில் காற்றின் திசையில் ஏற்படும் மாற்றங்களால் அது மாறுத்தல்களுக்கு உட்பட்டது.பொதுவாக அது வட - வட கிழக்கு திசையில் நகர முற்படுகையில் தென் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம்.

நிகழ் நேரத்தில் மழை பதிவாகி வரும் பகுதிகளின் தகவல்களுடன் மழை வாய்ப்புகளையும் இணைத்து இன்று ஓரிரு முறை பதிவிட முயற்சிக்கிறேன்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...