தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

02-05-2019 காலை அந்த அதி தீவிர FANI புயலின் தற்போதைய நிலவரம்


02-05-2019 நேரம் காலை 10:35 மணி இன்று காலை 8:00 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து வெளியாகி இருக்கும் அறிக்கையின்  படி இன்று அதிகாலை 5:30 மணி வாக்கில் அந்த அதி தீவிர FANI (ஃபனி) புயலானது Lattitude 15.9°N மற்றும் Longitude 84.5° E இல் விஷாகப்பட்டினத்துக்கு 230 கி.மீ தென் -தென் கிழக்கு திசையிலும் ஒடிசா வின் பூரி நகரருக்கு 450 கி.மீ தென் -தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டிருப்பதாக அதில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.தற்பொழுது நான் தனியார் தளங்களின் உதவியுடன் அதன் பாதையை பின்தொடர்ந்த பொழுது இன்று காலை 8:00 மணி வாக்கில் அது Lattitude 16.1°N மற்றும் Longitude 84.8° E இல் நிலைக் கொண்டு இருப்பதாக தெரிய வருகிறது.இதன் மூலம் வட -வட கிழக்கு திசையில் தற்பொழுது அது நகர்ந்து வருவதை நம்மால் உறுதிப்படுத்துகிறது.மேலும் இன்று அதிகாலையில் நான் குரல் பதிவில் தெரிவித்து இருந்தது போல தற்பொழுது அந்த அதி தீவிர புயலின் வெளிப்பகுதி ஆந்திராவின் #விஷாககப்பட்டினம் மற்றும் #ஸ்ரீராகுலம் பகுதிகளுக்கு மிக அருகில் உள்ளது அது அடுத்த சில மணி நேரங்களில் மேலும் வட -வட கிழக்கு திசையில் வளைந்து செல்ல முற்படும் என்பதால் இன்று ஆந்திராவின் #விஷாககப்பட்டினம் மற்றும் #ஸ்ரீராகுலம் சுற்றுவட்டப் பகுதிகளில் அந்த அதி தீவிர புயலின் சுழலும் வெளிப்பகுதி யானது அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் கனத்த மழை பொழிவை  இன்னும் சற்று நேரத்தில் ஏற்ப்டுத்த தொடங்கலாம்.விஷாக்கப்பட்டினம் பகுதியில் இன்னும் சற்று நேரத்தில் அதாவது நன்பகல் அல்லது பிற்பகல் வாக்கில் கிட்டத்தட்ட மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புகள் உள்ளது.மேலும் அந்த புயல் கரையை ஒட்டியே வளைந்து நகர்ந்து செல்கையில் இன்று இரவு விஷாகப்பட்டினம் பகுதியில் அதிகபட்சமாக கிட்டத்தட்ட 90 முதல் 100 கி.மீ வேகத்திலும் காற்று வீச வாய்ப்புகள் உள்ளது அதே போல #ஸ்ரீராகுளம் பகுதியிலும் இரவு மற்றும் நாளை அதிகாலை நேரத்தில் மணிக்கு 100 கி.மீ க்கும் அதிகமான அளவு காற்று வீச வாய்ப்புகள் உள்ளது.அது மேலும் வளைந்து நகர்ந்து 03-05-2019 ஆகிய நாளை நண்பகல் அல்லது அதற்கு பிறகு ஒடிசா மாநிலம் #PURI அருகே கரையை கடக்க முற்படலாம்.கரையை கடந்த பின்னர் அது நிலப்பகுதியிலேயே தொடர்ந்து வளைந்து பயணித்து #ஒடிசா  , #ஜார்கண்ட்  , #மேற்கு வங்கம் மாநிலங்களின் பல பகுதிகளும் கனமழை மற்றும் வலுவான காற்றை பதிவு செய்து 04-05-2019 ஆம் தேதி வாக்கில் மாலை அலல்து இரவு நேரத்தில் அது வங்கதேசத்தின் நிலப்பகுதிகளை அடைய முற்படலாம்.

 02-05-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#மயிலம் - #MYLAM AWS (விழுப்புரம் மாவட்டம் ) - 37 மி.மீ 
#வானூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 28 மி.மீ 
#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 23 மி.மீ 
#காட்டுமன்னார்கோயில் (கடலூர் மாவட்டம் ) - 17 மி.மீ 
#பள்ளன்துறை (கடலூர் மாவட்டம் ) - 16 மி.மீ 
#சீர்காழி (நாகை மாவட்டம் ) - 16 மி.மீ
#லால்பேட்டை - #LALPET  (கடலூர் மாவட்டம் ) - 10 மி.மீ 
#திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 10 மி.மீ 
#வானமாதேவி (கடலூர் மாவட்டம் ) - 10 மி.மீ
#அண்ணாமலை நகர் -#ANNAMALAI UNIVERSITY ,சிதம்பரம் (கடலூர் மாவட்டம் ) - 7 மி.மீ 
#குப்பனத்தம் (கடலூர் மாவட்டம் ) - 7 மி.மீ

இன்னும் சில பகுதிகளில் 5 மி.மீ க்கும் குறைவான அளவு மழை பதிவாகியுள்ளது அவை அணைத்து பகுதிகள் தொடர்பான தகவல்களை சற்று நேரத்தில் குரல் பதிவாக பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...