தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

03-05-2019 இரவு FANI புயலின் தற்போதைய நிலை |இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான அதிக பட்ச வெப்பநிலை அளவுகள் பட்டியல்

03-05-2019 நேரம் இரவு 8:25 மணி நான் இன்று காலை 11:00 மணி வாக்கில் நமது பக்கத்தில் பதிவிட்டு இருந்த பதிவில் அந்த அதி தீவிர புயலான #FANI யின் மையக்கண்பகுதி காலை 10:30 மணி வாக்கில் ஒரிசா மாநிலம் #பூரி அருகே கரையை கடந்து நிலைகொண்டு இருப்பதாக பதிவிட்டு இருந்தேன்.இன்று மாலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையிலும் அதனை உறுதிப்படுத்தி உள்ளது.அந்த அறிக்கையின் படி இன்று காலை 8:00 மணி முதல் 10:00 மணிக்குள்ளாக அந்த அதி தீவிர புயல் FANI யின் மையப்பகுதி பூரி அருகே உள்ள பகுதியில் கரையை கடந்து இருப்பதாக அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அது கரையை கடக்கையில் மணிக்கு அதிகபட்சமாக 205 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல காலை 11:30 மணி வாக்கில் அது ஒரு மிக தீவிர புயலாக வலுகுறைந்து ஒடிசாவின் கடலோர பகுதிகளில் நிலைக் கொண்டிருந்தாகவும் அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது தற்பொழுது பதிவாகி வரும் #கொல்கத்தா ஆய்வு மைய ராடார் படங்களை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் அது தற்பொழுது மேற்கு வங்க மாநிலத்தை  ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருக்கலாம் .தற்சமயம் மேற்கு வங்க மாநிலத்தின் #கொல்கத்தா(#kolkatta) ,#உதயநாராயன்பூர் (#udayanaraynpur) ,#jamalpur, #bradhman ,raidighi ,#amta ,#Ghatal சுற்றுவட்டப் பகுதிகளில் ஆங்காங்கே வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.மேலும் நான் காலையில் பதிவிட்டு இறந்தது போல #Jamshedpur , #balasore பகுதிகளிலும் வலுவான மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.அது மேலும் வட மேற்கு திசையில் நகர்ந்து நாம் எதிர்பார்த்தை போல 04-05-2019 ஆகிய நாளை பிற்பகல் அல்லது அதற்கு பிறகு ஒரு புயல் என்கிற நிலையில் வங்கதேசத்தின் நிலப்பகுதிகளை அடைய முற்படலாம்.இன்று இரவு 9:30 மணி வாகில் அது தற்பொழுது எங்கு எவ்வாராக நிலைகொண்டுள்ளது என்கிற தகவல் தெரியவரும் .அதன் பின்னர் அதனுடைய தற்போதைய நிலை தொடர்பாக உறுதியாக குரல் பதிவில் நமது Youtube Channel இல் பதிவிடுகிறேன்.

03-05-2019 இன்று மாலை 5:30 மணி வரையில்  பதிவான வெப்பநிலை அளவுகள் பட்டியலின் அடிப்படையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100°F பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 111°F (44.1°C )
#திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 111°F (44°C )
#மீனம்பாக்கம் -சென்னை விமான நிலையம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) -109°F (42.5°C )
#திருச்சி (திருச்சிராப்பள்ளி மாவட்டம் ) - 108°F (42.1°C )
#மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம் ) - 107°F (41.8°C )
#நெய்வேலி AWS(கடலூர் மாவட்டம் ) - 106°F (40.9°C )
#மதுரை தெற்கு (மதுரை மாவட்டம் ) - 104°F (40.1°C )
#கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம் ) - 104°F (40°C )
#நுங்கம்பாக்கம் -#சென்னை (சென்னை மாவட்டம் ) -  104°F (39.8°C )
#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 103°F (39.5°C )  
#பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம் ) - 102°F (39°C )
#தர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 101°F (38.2°C )
#காரைக்கால் (காரைக்கால் மாவட்டம் ) - 100°F (38°C )
#நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 100°F (37.9°C )
#சேலம் (சேலம் மாவட்டம் ) -100°F (37.5°C )

#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் )-  100°F (37.5°C )
#கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 99°F (37.4°C )
#புதுச்சேரி (புதுச்சேரி மாவட்டம் ) - 98°F (36.8°C )

அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...