தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

03-05-2019 ஒடிசாவுக்கு பிறகு மேற்கு வங்கத்தை பதம் பார்க்க இருக்கும் ஃபோனி புயல்

03-05-2019 நேரம் பிற்பகல் 2:00 மணி நான் இன்று காலையில் குரல் பதிவில் நமது #Puducherry Weather பதிவிட்டு இருந்தது போல இன்று காலை அந்த அதி தீவிர #FANI (ஃ போனி) புயலின் மையப்பகுதி முற்றிலுமாக கரையை கடந்தது.இன்று காலை 10:30 மணி வாக்கில் நான் #பரதீப் வானிலை ஆய்வு மைய ராடார் படங்களை கொண்டு அதன் நகர்வுகளை பார்த்து வந்த பொழுது அந்த #FANI (ஃ போனி) புயலின் மையக்கண் பகுதியானது #பூரி (#PURI) - #புவனேஸ்வரம் (#Bhuvaneswar) இடையே உள்ள பகுதிகளில் நிலைகொண்டிருந்த்து அதனை பின் புவனேஸ்வரம் , #கட்டாக் (#Cuttack) உட்பட ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மிக வலுவான மழை பதிவாகியுள்ளது சற்று முன்பு அதாவது கிட்டத்ட்ட 1:40 மணி வாக்கில் பதிவான ராடார் படங்களை கொண்டு பார்க்கையில் தற்சமயம் #கட்டாக் (#Cuttack) - #கபிலாஷ் (#Kapilash) வனப்பகுதிகளில் மிக மிக வலுவான மழை பதிவாகி வர வேண்டும் மேலும் #salipur , #bairi  , #kamkhyanagar சுற்றுவட்டப் பகுதிகளில் மிக கனத்த மழை பதவியாகி வரலாம்.தற்பொழுது அந்த மையப்பகுதியானது கிட்டத்ட்ட கட்டாக் (#Cuttack) நகருக்கு வடக்கே நிலைகொண்டிருக்க வேண்டும் அதாவது #bhuban - #anandpur அருகே உள்ள பகுதிகளில்.அடுத்த சில மணி நேரங்களில் அது மேலும் வட கிழக்கு திசையில் நகர்ந்து இன்று #balasore ,#baripada ,#jamshedpur ,#karaghpur உட்பட ஜார்கண்ட் மாநிலத்தின் தெற்கு பகுதிகளிலும் மேற்கு வங்கத்தின் பல இடங்களிலும் கனமழையையும் பலத்த சூறைக்காற்றையும் பதிவு செய்ய முற்படலாம் இன்று நள்ளிரவு அல்லது நாளை #FANI (ஃ போனி) ஒரு தீவிர புயல் என்கிற நிலையில் மேற்கு வங்கத்தின் #துர்காபூர் (#Durgapur) உட்பட பல இடங்களிலும் பலத்த சேதங்களையும் மழை பொழிவையும் ஏற்படுத்தி நாளை அதாவது 04-05-2019 பிற்பகல் வாக்கில் அது வங்கதேசத்தின் நிலப்பகுதிகளை அடைய முற்படலாம்.இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான #கொல்கத்தா (#Kolkatta) நகரிலும் கனத்த மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.இதே சூழல்கள் தொடர்ந்தாள் நாளை காலை #கொல்கத்தா (#Kolkatta) மாநகரில் மணிக்கு 100 கி.மீ க்கும் அதிகமான அளவு காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பாக மீண்டும் பதிவிடுகிறேன்.

03-05-2019 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வானிலையை பொறுத்தவரையில் இன்று காலை 8:30 க்கு பிறகு #சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக கிட்டத்தட்ட 39.8°C அதாவது கிட்டதட்ட 104°F அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.நாம் எதிர்பார்த்ததை விட முன்பாகவே இன்று கடல் காற்று சென்னைக்கு உள்ளே வந்தது அதேபோல சற்று முன்பு நன்பகல் வாக்கில் புதுச்சேரி அருகே உள்ள விழுப்புரம் மாவட்ட பகுதியான #மயிலம் பகுதியில் கிட்டத்ட்ட 39°C அதாவது 102°F பாரன்ஹீட் அளவு வெப்பம் அதிகப்பட்சமாக பதிவாகியுள்ளது மேலும் காஞ்சிபுரம் , திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டப் பகுதிகளிலும் தற்பொழுது 40°C க்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகி வருகிறது திருவள்ளூர் மாவட்டம் #செம்பரம்பாக்கம் ARG யில் 1:30 மணி வாக்கில் கிட்டதத்த 44°C வெப்பம் அதிகபட்சமாக பதிவாகியுள்ளது அதே போல காஞ்சிபுரம் மாவட்டம் #காட்டாங்குளத்தூர் பகுதியில் 41°C வெப்பமும் #சோழிங்கநல்லூர் பகுதியில் கிட்டதத்த 40°C வெப்பமும் பதிவாகியுள்ளது.#புதுச்சேரியை அடுத்த காலால்பட்டு பகுதியில் அதிகப்பட்சமாக கிட்டதட்ட 37.5°C வெப்பம் பதிவாகியுள்ளது.இவைதவிர்த்து மதுரை ,வேலூர் ,கரூர் ,திருத்தணி ,திருச்சி ,பெரம்பலூர் , அரியலூர் , சேலம் என தமிழகத்தின் பல இடங்களிலும் பகல் நேர வெப்பநிலையானது தற்பொழுது அதிகமாக பதிவாகி வரலாம்.இன்று மாலை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள் தொடர்பாக விரிவாக பதிவிடுகிறேன்.

அனைவருக்கும் எனது பிற்பகல் நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.




 

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...