தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

04-05-2019 ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து வங்கதேசம் நகர்ந்த முன்னாள் FANI புயல்

04-05-2019 நேரம் காலை 11:35 மணி தற்பொழுது ஒரு ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையில் நேற்று காலை ஒடிசாவின் #பூரி அருகே உள்ள கடலோர பகுதிகளை பலமாக தாக்கி கரையை கடந்த அந்த அதி தீவிர புயலான #FANI (ஃபோனி ) வலுகுறைந்து நிலைக் கொண்டுள்ளது.சற்று முன்பு வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து வெளியாகியிருக்கும் அறிக்கையின் படி அந்த இன்று காலை 8:30 மணி வாக்கில் அது ஒரு ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Deep Depression) என்கிற நிலையில் Lattitude 23.6°N மற்றும் 88.8°E இல் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க பகுதிகளில் நிலைக் கொண்டிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது பதிவாகி வரும் செயற்கைக் கோல் படங்களின் உதவியுடன் பார்க்கையில் தற்பொளுது அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வட -வட கிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தின் #Salanga - #Chandaikona அருகே நிலைகொண்டிருக்க வேண்டும் அடுத்த சில நிமிடங்களில்  அது மேலும் வலுகுறைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையை அடையலாம் அது மேலும் வட -வட கிழக்கு திசையில் நகர்ந்து இன்று மாலை #Shillong - #Guwahati உட்பட அஸ்ஸாம் (ASSAM) மாநில அப்பகுதிகளுக்குள் நுழைந்து மேலும் வலு குறைய தொடங்கி இன்று இரவு ஒரு வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி என்கிற நிலையை அடைந்து 05-05-2019 ஆகிய நாளை அஸ்ஸாம் மாநில வட கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் மியான்மர் எல்லை அருகே அங்கு நிலவி வரும் உயர் அழுத்தத்தின் காரணமாக அது முற்றிலும் வலுவிழந்து போகலாம்.

தமிழகத்தை பொருத்தவரையில் இன்று சென்னையில் காலை 11:30 மணி வரையில் பதிவான வெப்பநிலை அளவுகளின் படி சற்று முன்பு 39.4°C வெப்பம் பதிவாகியுள்ளது அதேபோல திருவள்ளூர் மாவட்டம் #புழல் ஏரி அருகே தற்பொழுது வரை அதிகப்பட்சமாக 37.7°C வெப்பமும் #பூந்தமல்லி பகுதியில் 38.6°C அளவு வெப்பமும் #செம்பரம்பாக்கம் ARG யில் 39.9°C வெப்பமும் #சோழிங்கநல்லூர் பகுதியில் 38.3°C வெப்பமும் அதிகப்பட்சமாக பதிவாகி வருகிறது அதேபோல #காட்டாங்குளத்தூர் பகுதியில் கிட்டத்தட்ட 37.9°C வெப்பமும் #கேளம்பாக்கத்தில் 36.2°C அளவு வெப்பமும் #விழுப்புரம் மாவட்டம் #கள்ளக்குறிச்சி பகுதியில் 38.°C வெப்பமும் பதிவாகி வருகிறது.

இன்று மாலை 5:30 மணிக்கு வாக்கில் அதிகபட்ச வெப்பநிலை அளவுகள் பட்டியல் வெளியானவுடன் இன்று இரவு பதிவிடுகிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...