தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

05-05-2019 கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை மற்றும் வெப்பநிலை தொடர்பான தகவல்கள்

05-05-2019 நேரம் காலை 10:30 கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று மாலை வாக்கில் அந்திரமாநிலத்தை ஒட்டியிருக்கும் திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்ட பகுதிகளில் ஆங்காங்கே மழை பதிவாகியுள்ளது.குறிப்பாக ஆந்திராவை ஒட்டியிருக்கும் சில இடங்களில் வலுவான மழை பதிவாகியுள்ளது குறிப்பாக #வேலூர் மாவட்டம் #சோளிங்கர் (#SHOLINGUR ) பகுதியில் அதிகப்பட்சமாக 144 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது அதற்கு அடுத்தபடியாக #பள்ளிப்பட்டு தாலுக்காவின் R.K.பேட் பகுதியில் கிட்டதத்த 74 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது இன்று திண்டுக்கல் மாவட்ட மேற்கு பகுதிகளில் அதாவது #கொடைக்கானல் பகுதிக்கு மேற்கே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது அதேபோல கோவை மாவட்டம் #வால்பாறை அருகே உள்ள பகுதிகளிலும் நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பதிவாகலாம் இவை தவிர்த்து காற்றின் திசையில் ஏற்படும் சிறு மாறுதல்களை பொறுத்து ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை பதிவாகலாம் தமிழகத்தின் அநேக பிற பகுதிகளிலும் வறண்ட வானிலையே இன்றும் தொடரலாம்.இது தொடர்பாக இன்று பிற்பகளில் பதிவிடுகிறேன்.

05-05-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் கடந்த 24 மணி நேரத்தில் தமிழிகக்தில் மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#சோளிங்கர் -#SHOLINGUR (வேலூர் மாவட்டம் ) - 144 மி.மீ
#ஆர்.கே.பேட்டை (வேலூர் மாவட்டம் ) - 74 மி.மீ
#திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம் ) - 12 மி.மீ
#நெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 6 மி.மீ
#RTO அலுவலகம் அருகில் ,திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம் ) - 4 மி.மீ
#பரூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 2 மி.மீ
#போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 2 மி.மீ

05-05-2019 இன்று காலை 8:30 மணிவரையில் பதிவாகியிருக்கும் வெப்பநிலை அளவுகள் பட்டியலின் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 102°F பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#திருத்தணி (திருவள்ளுர் மாவட்டம் ) - 111°F (44°C )
#வேலூர் (வேலூர் மாவட்டம் ) -110°F (43.2°C )
#மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம் ) - 106°F (41.2°C )
#திருச்சி (திருச்சிராப்பள்ளி மாவட்டம் ) - 106°F (41.1°C )
#தஞ்சாவூர் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 106°F (41°C )
#கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம் ) - 104°F (40.2°C )
#மீனம்பாக்கம் - #சென்னை விமான நிலையம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 103°F (39.6°C )
#பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம் ) - 103°F (39.5°C )
#நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம் ) - 102°F (39.1°C )
#நுங்கம்பாக்கம் (சென்னை மாவட்டம் ) - 102°F (38.8°C )
#காரைக்கல் (காரைக்கால் மாவட்டம் ) - 101°F (38.4°C )
#கடலூர் (கடலூர் மாவட்டம் ) - 101°F (38.2°C )

அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...