தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

06-05-2019 நேரம் இரவு 8:30 மணி தற்பொழுது மழை பதிவாகி வரும் பகுதிகளின் நிலவரம் | இன்று பதிவாகிய அதிக பட்ச வெப்பநிலை

06-05-2019 நேரம் இரவு 8:30 மணி நான் இங்கே பதிவேற்றம் செய்திருக்கும் செயற்கைக்கோள் மற்றும் ராடார் படங்கள் இன்று இரவு 8:10 மணி வாக்கில் பதிவானவை அதன்படி தற்சமயம் #வேடசந்தூர் , #தடிகொம்பு , #திண்டுக்கல் , #வத்தலகுண்டு சுற்றுவட்டப் பகுதிகளில் மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன மேலும் #மதுரை மாவட்டம் #அய்யனார்குலம் - #கல்லூத்து , #மட்டபாறை , #பாபாப்பட்டி இடையே உள்ள பகுதிகளிலும் மழை மேகங்கள் ராடாரில் பதிவாகி வருகின்றன மேலும் #சின்னாலம்பட்டி சுற்று வட்டப் பகுதிகளிலும் மழை மேகங்கள் நீண்ட நேரமாக பதிவாகி வருகின்றன சற்று நேரத்தில் #சின்னாலம்பட்டி - #வாடிப்பட்டி இடையே உள்ள #பள்ளப்பட்டி , #கொடைக்கானல் சாலை பகுதிகளிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பதிவாகலாம் மேலும் #கொடைக்கானல்  - #வத்தலகுண்டு இடையே உள்ள அநேக இடங்களிலும் மழை பதிவாகலாம் #மஞ்சளாறு அணை பகுதிகளிலும் #பண்ணைக்காடு சுற்றுவட்டப் பகுதிகள் அருகிலும் மழை மேகங்கள் பதிவாக தொடங்கியிருக்கின்றன மேலும் #திண்டுக்கல் - #ஓட்டஞ்சத்திரம் இடையே உள்ள #கன்னிவாடி ,#சில்வார்பட்டி , #அணைப்பட்டி உட்பட அப்பகுதிகளில் பல இடங்களிலும் மழை மேகங்கள் பதிவாகி வர தொடங்கியுள்ளன முன்னதாக சில மணி நேரங்களுக்கு முன்பு  #தேனி மாவட்டம் #வரசநாடு , #கொடிக்குளம் சுற்றுவட்டப் பகுதிகளிலும் #மதுரை மாவட்டம் #மல்லபுரம் , #ஏழுமலை மற்றும் #உசிலம்பட்டி அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிகிறது மேலும் இன்று சில மணி நேரங்களுக்கு முன்பு #சேலம் மாவட்டம் #மல்லசமுத்ரம்  , #அட்டாயம்பட்டி , #காக்காபாளையம் அருகிலும் மழை மேகங்கள் பதிவாகி வந்ததை அறிய முடிகிறது முன்னதாக இன்று #திருப்பூர்  ,#அவிநாசி சுற்றுவட்டப் பகுதிகளிலும் மாலை மழை மேகங்கள் பதிவாகி வந்ததை ராடார் படங்களின் உதவியுடன் பார்க்க முடிந்தது.

06-05-2019 இன்று மாலை 5:30 மணி வரையில் பதிவான வெப்பநிலை அளவுகள் பட்டியலின் படி இன்று தமிழகத்தில் 105°F பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

#திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 110°F
#கள்ளக்குறிச்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 109°F
#கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம் ) - 108°F
#திருச்சி (திருச்சி மாவட்டம் )- 107°F
#வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 106°F
#மீனம்பாக்கம் - #சென்னை விமான நிலையம் (சென்னை மாவட்டம் ) - 106°F
#மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம் ) - 105°F
#பாளையம்கோட்டை (நெல்லை மாவட்டம் ) - 105°F
#சேலம் (சேலம் மாவட்டம் ) - 105°F

அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...